"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
தெய்வ மச்சான் பதில்கள் |
|
- |மார்ச் 2001| |
|
|
|
ஸ்ரீகாந்த், மில்பிடஸ், கலி·போர்னியா.
தென்றல் பத்திரிக்கையின் நோக்கம் என்ன..?
வட அமெரிக்காவில் வாழும் கணிசமான தமிழர்களின், தமிழின உணர்வை வளர்ப்பதும் ஒரு குறிக்கோள்.
நமக்குப் பின் வரும், வளரும் நம் வருங்கால சந்ததியினருக்கு, தங்கள் கலாச்சாரத்தோடு, தங்களைச் சரியான முறையிலே அடையாளம் கண்டு கொள்வதற்கு இம் முயற்சி உதவும் என்பது எங்களது ஆழ்ந்த நம்பிக்கை.
******
இரண்டு தமிழர்களை, எந்தவொரு விஷயத்திலும், ஒத்துப் போகும் படி செய்வது என்னும் கருத்து பரவலாக இருக்கிறதே. அது உண்மையா..?
'தமிழ்த் தவளை' என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. (வசதிகேற்றார்ப் போல், இந்தியத் தவளை, கன்னடத் தவளை, ------நாட்டுத் தவளை என்று மாறுவதும் உண்டு!). ஒரு வியாபாரக் கப்பலில், பலநாட்டுத் தவளைகளை, அமெரிக்காவில் விற்பதற்காக கொண்டு சென்றார்களாம். எல்லா நாட்டவரும், மிகவும் நேர்த்தியாக அவற்றை 'பேக்' செய்து அனுப்பியிருந்தார்களாம். இந்தியாவிலிருந்து, குறிப்பாக, சென்னைத் துறைமுகத்திலிருந்து சென்ற பீப்பாயை மட்டும், மூடி கூட இல்லாமல் அனுப்பியிருந்தார்களாம். கப்பலில் சென்ற ஒருவன், கேலியாக, இதோ பார், இந்த தமிழர்களுக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை... அமெரிக்கா போவதற்குள் எல்லாத் தவளைகளும் எகிறி குதித்துச் சென்றுவிடப் போகின்றன" என்றானாம். அதற்கு மற்றவன்,
''போடா அறிவிலாதவனே.. இவைகள் தமிழகத்துத் தவளைகள், ஒன்று மேலே ஏறித் தப்பிச் செல்ல முயன்றால், இன்னொன்று கீழே பிடித்து இழுத்துவிடும்'' என்று சொன்னானாம். தமிழர்கள் இயல்பாகவே புத்திசாலிகள்.. கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம் என்னும் பெருமை உடையவர்கள்.. கற்றுக் கொடுப்பதும் தமிழனாயிருந்தாலும் கூட..! அதனால் வேண்டுமானால் இருக்கலாம்..!
மேகலா, சென்னை. ****** |
|
இந்த வரும் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு..?
ஆஹா.. இந்த மாதிரி கேள்வி கேட்டு, தென்றலுக்கு அரசியல் சாயம் பூசலாம் என்பதுதானே உங்கள் எண்ணம்..? நான் கலி·போர்னியாவில் வசிப்பதால், இந்த கேள்வியை 'சாய்ஸில்' விட்டு விடுகிறேன்.
ராம், ·ரீமாண்ட், கலி·போர்னியா. ******
'ஹெலோ'(Hello) என்பதன் சரியான தமிழாக்கம் என்ன..?
அடப்பாவமே.. அதையேன் தமிழ் 'படுத்த' வேண்டும் என்கிறீர்கள்..? காலம் காலமா, கதைகளிலும், சினிமாப் பாடல்களிலும் அந்த வார்த்தை அப்படியே உபயோகப்படுத்தப் படுகிறதே..? ஞாபகம் இருக்கிறதா.?
ஹலோ மிஸ், ஹலோ மிஸ் எங்கே போறீங்க..? ஹலோ மை டியர் ராங் நம்பர்..?
நீங்கள் கேட்டுவிட்டதால் முயற்சி செய்கிறேன்.. பதப் பிரிவினை செய்தால், ஹெல் + ஓ என்று ஆகிறது..அதாவது, நரகம் + ஓ (அசைச் சொல்).. 'நரகமோ' என்று கேட்பது போல் ஆகிறது.. இது விளிச் சொல்லாக இருப்பதால், 'நரகமே' என்று இருக்கவேண்டும்.. ! மன்னிக்கவும், விளையாடாமல் சொல்ல வேண்டுமென்றால், கூப்பிடுபவரைப் பொறுத்து, 'ஏய்', 'எலேய்', 'என்னங்க', 'என்னடி', 'என்னம்மா', ஏன் ஓய்', 'என்ன சார்', என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். |
|
|
More
"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
|
|
|
|
|