அஞ்சல் தலை(வர்)கள் கண்ணீர் தேசம் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு கீதாபென்னெட் பக்கம்
|
|
அஞ்சல் தலைகள் |
|
- |அக்டோபர் 2001| |
|
|
|
அக்டோபர் 10 - தேசியத் தபால் தினம்
முதன்முதலில் 1835-ஆம் ஆண்டு இங்கிலாந் தைச் சேர்ந்த 'ரோலண்ட் ஹில்' என்பவர்தான் கடிதப் போக்குவரத்துக்கு அஞ்சல் தலைகளைப் பயன்படுத்தலாம் என்ற கருத்தைத் தெரி வித்தார். அதன்படி 1840-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் தேதி பிரிட்டனில் உலகின் முதல் தபால்தலை வெளியிடப்பட்டது. இதன் பெயர் 'பென்னி பிளேக்' என்பதாகும். அதைத் தொடர்ந்து பிரேசில், பாஸல், ஜீரிச், ஜினிவா, அமெரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளும் தபால்தலைகளை வெளியிட்டன.
இந்தியாவில் 'பெரேரே என்பசிர்' என்பவரால் 1852-ஆம் ஆண்டு 'சிந்த் டாக்ஸ்' என்ற தபால்தலை வெளியிடப் பட்டது. அந்த அஞ்சல்தலையின் சின்னமாகக் கிழக்கிந்தியக் கம்பென ¢யின் அகலமான அம்பின் உருவம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள மெஸ்ஸர்ஸ் தாமஸ் டிலா ரூ என்ற கம்பெனி 1856 முதல் 1926 வரை இந்திய அஞ்சல் தலைகளை வெளியிடும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுத்தியது. 1926-க்குப் பிறகு நாசிக் நகரில் செக்யூரிட்டி பிரஸ் என்ற ஒன்று நிறுவப்பட்டு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டது. |
|
1929-ல் காமன்வெல்தில், ஏர் மெயில் ஸ்டாம்புகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு -ந்தியாதான். தபால்களை விமானம் மூலம் அனுப்பிய முதல் நாடும் இந்தியாதான்! 1911 பிப்ரவரி 18-ஆம் தேதி 6500 கடிதங்கள் விமானம் மூலம் அலகாபாத்திலிருந்து நைனிடாலுக்கு அனுப்பப்பட்டன. |
|
|
More
அஞ்சல் தலை(வர்)கள் கண்ணீர் தேசம் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|