Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
2001 வளர்ச்சியும் வீழ்ச்சியும்
- சரவணன்|ஜனவரி 2002|
Share:
ஜனவரி - 9
புத்தாயிரம் ஆண்டின் முதல் கும்பமேளா, சங்கம் நதிக்கரையில் தொடங்கியது.

ஜனவரி - 15 - 23
ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தது.

ஜனவரி - 15
சன்சல்வதார் தலைநகரான எல்சல்வதாரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1000 பேர் பலியாகினர்.

ஜனவரி - 26
வரலாறு காணாத அளவில் குஜராத் மாநிலத்தில் பூகம்பம் ஏற்பட்டதில் பல்லாயிரக் கணக் கானோர் பலியாகினர்.

பிப்ரவரி - 13
சன்சல்வதார் தலைநகரான எல்சல்வதாரில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற் பட்டதில் 200 பேர் பலியாகினர்.

பிப்ரவரி - 20
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் இந்திரஜித் குப்தா காலமானார்.

மார்ச் - 7
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானிஸ் தான் மத்திய பாமியான் புத்தர் சிலைகளைத் தாலிபான் முழுமையாகத் தகர்த்தது.

மார்ச் - 11
போலி ஆயுத பேர ஊழலை தெஹல்கா டாட் காம் வெளிக் கொண்டு வந்தது.

மார்ச் - 15
ஆயுத பேர ஊழல் புகாரையடுத்து பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதவி விலகினார்.

மார்ச் - 16
2000-ஆம் ஆண்டுக்கான காந்தி விருதை தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு இந்திய ஜனாதிபதி வழங்கினார்.

மார்ச் - 21
உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் இந்தியா வென்று கோப்பை யைக் கைப்பற்றியது.

மார்ச் - 28
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணுக்கு ஏவும் முயற்சி தோல்வியைத் தழுவியது.

ஏப்ரல் - 6
முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் மரண மடைந்தார்.

மே - 9
ஆப்பிரிக்காவில் கானா என்ற இடத்தில் கால்பந்துப் போட்டியைப் பார்க்கச் சென்று நெரிசலில் சிக்கி 120 பேர் பலியாகினர்.

மே - 12
வெஸ்ட் இண்டிஸ் தீவுகளில் நடைபெற்ற 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியில் போர்ட்டிகாவைச் சேர்ந்த டெனைஸ் குய்னோன்ஸ் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

மே - 13
தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அதிமுக வெற்றி பெற்றது. 140 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதி களில் அமோக வெற்றி பெற்றது அக் கட்சி.

பிரபல ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் காலமானார்.

மே-14
ஜெயலலிதா தமிழக முதல்வராக அவசர அவசரமாகப் பதவியேற்றார். அவருக்கு தமிழகக் கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மே - 17
கேரளாவின் 18-ஆவது முதல்வராக ஏ.கே. அந்தோணி பதவியேற்றார்.

மே - 18
அசாம் மாநில முதல்வராக தருண்கோகாய் பதவியேற்றார்.

மே - 23
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் புஷ்ஷை சந்தித்துப் பேசினார்.

மே - 24
புதுவை முதல்வராக சண்முகம் பதவியேற்றார்.

மே - 27
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.

மே - 28
பிரிட்டன் மான்செஸ்டர் பகுதியில் பாகிஸ் தானியர் மற்றும் வெள்ளையர்களுக்கிடையே இனக் கலவரம் வெடித்தது.

ஜூன் - 01
நேபாள அரச குடும்பத்தினர் 11 பேரை இளவரசர் திபேந்திரா காதல் தோல்வியால் மனமுடைந்து சுட்டுக் கொன்றார்.

ஜூன் - 13
வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் விவாசாயி கள் பெற்ற கடனுக்கான வட்டித் தொகை 310 கோடி தமிழக அரசால் தள்ளுபடி செய்யப் பட்டது.

ஜூன் - 20
பாகிஸ்தான் அதிபர் ரபீக்தரார் அப் பதவி யிலிருந்து இறக்கப்பட்டு புதிய அதிபராக ராணுவ ஆட்சியாளர் தளபதி பர்வீஸ் முஷராப் பதவியேற்றார்.

ஜூன் - 22
மங்களூர்-சென்னை இரயில் கோழிக்கோடு பகுதியிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஜூன் - 29
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

ஜ.நா சபைச் செயலாளராக கோபி அன்னான் தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை - 03
ரஷ்ய விமானம் சைபீரியா பகுதியில் விபத்துக் குள்ளாகியதில் 143 பேர் பலி.

ஜூலை - 8
விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக் காவின் வீனஸ் வில்லியம்ஸ் கைப்பற்றினார்.

ஜூலை - 14
முஷராப்பின் வருகையையடுத்து தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் முதன் முறையாக பாகிஸ்தான் தேசிய கீதம் வாசிக்கப்பட்டது.

ஜூலை - 16
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையி லான ஆக்ரா உச்சி மாநாடு தோல்வியில் முடிந்தது.

ஜூலை - 17
ஒரிசாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர்.

ஜூலை - 21
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சென்னை யில் காலமானார்.

ஜுலை - 24
கொழும்பு விமான நிலையத்தின் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் விளைவாக இலங்கைப் பொருளா தாரம் படு பாதாளத்தில் வீழ்ந்தது.

ஜூலை - 25
சம்பல் கொள்ளைக்காரியாக இருந்து அரசியல் வாதியாக மாறி மக்களவை உறுப்பினரான பூலான் தேவி தில்லியில் சுட்டுக் கொல்லப் பட்டார்.

ஜூலை - 30
சீனாவிலுள்ள சுரங்கம் ஒன்றினுள் வெள்ளம் புகுந்ததில் 200 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர்.

ஆகஸ்ட் - 1
பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள் வதாக வாஜ்பாய் திடீரென அறிவித்தார்.

ஆகஸ்ட் - 2
தான் ராஜினாமா செய்யப் போவதில்லை யென்று வாஜ்பாய் அறிவித்தார்.

ஆகஸ்ட் - 6
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ள மனநலக் காப்பகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 25 மனநோயாளிகள் தீயில் கருகிச் செத்தனர்.

ஆகஸ்ட் - 12
தி.மு.க சென்னையில் நடத்திய பேரணியில் கலவரம் மூண்டது.

ஆகஸ்ட் - 30
தா.மா.க தலைவர் மூப்பனார் சென்னையில் காலமானார்.

செப்டம்பர் - 02
இந்தியா இலங்கையிடையே நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கை வென்றது.

செப்டம்பர் - 09
யு.எஸ் ஓபன் ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த ஹெவிட்டும், மகளிர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ¤ம் வெற்றி பெற்றனர்.

செப்டம்பர் - 11
அமெரிக்க வர்த்தக மையம் மற்றும் ராணுவத் தலைமையகம் மீது தீவிரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தியதில் 6000க்கும் மேற் பட்டோர் பலியாகினர்.

செப்டம்பர் - 14
அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலையை அதிபர் ஜார்ஜ் புஷ் பிரகடனம் செய்தார்.

செப்டம்பர் - 16
ஜப்பான் டோக்கியாவிலுள்ள பொழுது போக்கு அரங்கம் ஒன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாகினர்.

உத்திரப் பிரதேசத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக 141 பேர் பலியாகினர்.

செப்டம்பர் - 17
பிலிப்பைன் தலைநகர் மணிலாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பலியாகினர்.

செப்டம்பர் - 21
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்தது சட்ட விரோதமானது என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஜெயலலிதா பதவி விலகினார். வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீர் முதல்வராகப் பதவியேற்றார்.

செப்டம்பர் - 25
சென்னை மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 எனப் பதிவானது.

செப்டம்பர் - 30
முன்னாள் மத்திய அமைச்சர் மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் மரணமடைந்தார்.

அக்டோபர் - 03
குஜராத் மாநில முதல்வர் கேஷ¤பாய் படேல் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்பை விமானம் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டது என்ற புரளி எழுந்து சலசலப்பை உண்டு பண்ணியது.

ரஷ்யாவின் டியூ-154 ரக விமானம் விபத்துக்குள்ளாகிக் கருங்கடலில் விழுந்ததில் 77 பேர் பலியாகினர்.

அக்டோபர் - 7
இத்தாலியில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டதில் 100 பேர் பலியாகினர்.
அக்டோபர் - 11
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கோபி அன்னானுக்கும் ஐ.நா. சபைக்கும் இணைந்தாற் போல 2001-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் வித்யாதர் சூரஜ் பிரசாத் நெய்ல்பாலுக்கு 2001-ஆம் ஆண்டு இலக்கி யத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அக்டோபர் - 20
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஏழாவது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆண்கள் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையைக் கைப் பற்றியது.

அக்டோபர் - 21
வியட்நாமில் தென்கிழக்காசிய நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி சுமார் 305 பேர் பலியாகினர்.

அக்டோபர் - 22
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.சி3 ரக செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அக்டோபர் - 24
அமெரிக்க அதிபர் மாளிகை ஆந்த்ராக்ஸ் பீதியால் மூடப்பட்டது.

அக்டோபர் - 26
இரண்டாவது முறையாகச் சென்னை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் பதவியேற்றார்.

பொடொ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மத்திய அரசு பிரகடனம் செய்தது.

அக்டோபர் - 27
ஆந்த்ராக்ஸ் கிருமிக்குப் பயந்து அமெரிக்க நீதித் துறையின் தலைமைப் பீடமான உச்சநீதி மன்றக் கட்டிடம் மூடப்பட்டது.

அக்டோபர் - 30
உத்தராஞ்சல் மாநில இரண்டாவது முதல்வராக பகத்சிங் கோஷியாரி பதவி யேற்றார்.

நவம்பர் - 02
நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப் பிடிக்க இந்திய உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

நவம்பர் - 08
பிரான்ஸ் நாட்டு கலாச்சார அகாதெமி 68,000 டாலர் மதிப்புள்ள விருதினை இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு வழங்கியது.

நவம்பர் - 12
அமெரிக்க ஏர்லைன்ஸ¤க்குச் சொந்தமான விமானம் நியூயார்க்கின் கென்னடி விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட 8 நிமிடங்களில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 265 பேரும் உயிரிழந்தனர்.

நவம்பர் - 29
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இயங்கி வந்த கோகோ கோலா நிறுவனத்தை மாவோ யிஸ்டுகள் குண்டு வைத்துத் தகர்த்தனர்.

டிசம்பர் - 4
டான்சி நில பேர ஊழல் வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் - 8
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கே பதவியேற்றார்.

டிசம்பர் 10
பாலிவுட் திரைப்பட உலகத்தில் 'தாதாமுனி' என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு வந்த நடிகர் அசோக் குமார் மரணமடைந்தார்.

டிசம்பர்13
தில்லி நாடாளுமன்றத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேசத்தையே உழுக்கிய சம்பவமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

டிசம்பர் 17
பன்மொழிப் புலவரும் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளருமான அப்துல் லத்தீப் காலமானார்.

டிசம்பர் 26
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான கே.டி.கே. தங்கமணி இயற்கை எய்தினார்.

தொகுப்பு: சரவணன்
Share: 




© Copyright 2020 Tamilonline