Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
Dialog
- ஸ்ரீகோண்டு|மே 2002|
Share:
சிவாவிஷ்ணு கோயில், சீனிவாசர் கர்பக்கிரகத்தில் ராமு தன் பையனிடம்: டேய் குட்டி, அதோ பாருடா, மேல கண்ணாடில உம்மாச்சியோட copy தெரியறது பாரு.

குட்டியின் தாத்தா: டேய், அது copy யில்லடா, Image ன்னு

சொல்லமாட்ட!!, பசங்களுக்கு சொல்லித்தரச்சே சரியா சொல்லித்தரணும்.

******


ஆபிஸ் பிரேக் ரூமில்

குரு: அஷோக், அந்த பிரிஜ்ஜில ஒரு மில்க் கேன் இருக்கும், அத எடு, காபிக்கு கொஞ்சம் பால் விடணும்.

அஷோக்: எடுக்கறேன். ஆமா, நீ இப்பல்லாம் ஆபிசுக்கு, பால் எடுத்து வரயான்ன.

குரு: நீ வேற இதெல்லாம் free டா.

அஷோக்: அடப்பாவி, இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி, ஒருத்தன் வந்து சத்தம் போட்டு போனான். அவன் வக்கிற மில்க் சீக்கிரம் காலியாயிடறதுன்னு. உன்னால்தானா அது.

******


ஆபிசில் ஒரே பாட்டுச்சத்தம்:

...மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்...
...போனால் போகட்டும் போடா...
...யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன...
...உனக்கும் வாழ்வு வரும்...

******


சுரேஷ்: என்னாட நம்ம internet commerce குரூப்பிலேருந்து தத்துவப்பாடலா வருது?

வைத்தி: எல்லாம், எக்கானமி தான். பட்ஜெட் கட்டுனால கொஞ்சம் பிராஜக்டை shelve பண்ணிட்டாங்களாம். யாருக்கு வேலையிருக்கும், போயிருங்கறத நினைச்சுதான் இப்படி!!

******


கலிபோர்னியா 680 freeway யில் டிராபிக் போலிசிடம் வேகம் மீறிப்போனதால் மாட்டிக்கொண்ட நண்பரிடம்

போலீஸ்: Sir உங்களுக்கு ஒரு ஸ்பீடிங் டிக்கட் கொடுக்கப்போகிறேன்

நண்பர்: நான் மட்டும் போகவில்லை. எனக்கு முன்னால் சென்ற நீல நிற “பிம் டபுள்யு வை follow பண்ணினேன், அவ்வளவுதான்.

போலீஸ்: உங்க license இப்படி கொடுங்க. ஒரு பத்து நிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணுங்க. நீங்க சொன்ன அந்த டிரைவரை பிடிச்சுட்டு, ஸ்பீடிங் டிக்கட் கொடுத்துட்டு உங்க கிட்ட வரேன்... OK...

******
குழந்தை அம்மாவிடம்: அம்மா நம்ம தாத்தாவுக்கு தலையில அடிபட்டுதாமே? ஏம்மா இன்னும் சரியாகல?

அதுவா நல்லா bone ல பட்டுடுத்தாம்

தலையில skull தானேம்மா? Bone எப்படி?

******


பிரீமாண்ட் நண்பர் வீட்டில்

நண்பரின் மனைவி மூணரை வயது குழந்தையிடம்...

டேய் கண்ணா, நீ தப்பு பண்ணாக்க, அதோ அந்த காலண்டர்ல இருக்கற சிவன் உம்மாச்சி தன்னோட மூணாவது கண்ண தொறந்து உன்னச்சுட்டுடுவார் பார்த்துக்கோ?

அம்மா, அப்போ காலண்டர் அங்க ஒட்டையாயிடுமே?!

******


சன்னிவேலில் தமிழ்புத்தாண்டு தினத்தன்று நடந்த பேமிலி get togetherல்:

கணவன் மனைவியிடம்: ஏம்மா, கமலா குழந்தையோட சட்டையப் பாரு, விளையாடிதனால ஒரேடியா sweat ஆகியிருக்கு. கயட்டச்சொல்லுமா?

குழந்தை: ஆமாம்பா நாந்தான் இப்ப ஒரு sweater

ஸ்ரீ கோண்டு
Share: 
© Copyright 2020 Tamilonline