|
சிதைந்து கிடக்கும் ஆற்றல்களின் "குவியம்" |
|
- சரவணன்|மே 2002| |
|
|
|
"குவியம் என்ற மாதாந்த சஞ்சிகை சிதைந்து கிடக்கும் ஆற்றல்களை ஒரு புள்ளிக்குக் கொண்டு வருவதினை நோக்கமாகக் கொண்டது. இச் சஞ்சிகை பல தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இணையத் தில் இதனை வெளியிடும் நோக்கம்; உலகெங்கும் வாழும் மக்கள் மாறும் சூழ் நிலைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பத்தினை பாவித்து, சஞ்சிகையை வாசித்து அறிவினைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகும்" என்ற அறிமுகத்துடன் தமிழிணைய மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது குவியம்/Focus (www.kuviyam.com) இணையத்தளம்.
இந்த இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளிவந்திருப்பதால், படிப்பவர்கள் வேண்டிய மொழியில் படித்துக் கொள்ள வசதியாக இருக்கிறது. ஆழமான கட்டுரைகள் அடங்கிய இந்த இணையத்தளம், தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது.
கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், வணிகம், தொழில்நுட்பம், கலை, ஆன்மீகம், விமர்சனமும் அலசலும், நகைச்சுவை, இயற்கை, இளைஞர் வட்டம், சமூக விடயங்கள், அபிப்ராயங்கள்... ஆகிய தலைப்புகளின் கீழ் ஆழமான விசயங்களைப் பேசுகிறது குவியம். மாத இதழாக இருப்பதினால், தரம்வாய்ந்த கட்டுரைகளைப் பதிப்பிக்க இயலுகிறது என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.
"என்ன சின்னா சில்லறைக் காசை எண்ணிக் கொண்டு வாறீர் கோயில் உண்டியலிலை போடப் போறீரோ?" முகத்தார் சிரித்தபடி கேட்டார்.
"புது வருஷம் பிறந்த பிறகு நல்ல நேரம் பார்த்து கணுதெனு பார்க்க வேண்டாமே?"
"இதென்ன கணுதெனுவெண்டு சிங்களத் திலை. ஓ இப்ப சமாதான பேச்சு வார்த்தை நடக்கப் போகுதில்லே அதுதான் கொஞ்சம் தமிழும் சிங்களமும் கலந்து கதைக்கிறீர் போல" கிளாக்கர் பகிடி விட்டார்.
"ஓம் கிளாக்கர் முந்தி புரமோசனுக்காக சிங்களம் படிச்சு பாஸ் பண்ணினன். இப்ப மறந்து போச்சு. கொழும்பிலை இப்ப செக்கிங் இல்லையாம். பெர்மிட் இல்லையாம். அதுதான் கொழும்புக்குப் போக முந்தி திரும்பவும் மறந்த சிங்களத்தை நினைவூட்டுவோம் எண்டு கதைச் சுப் பார்த்தனன்" என்று சமகால சிங்கள-தமிழ் சமாதானப் பேச்சுவார்த்தையை நகைச்சுவை யுடன் ‘அரட்டையும் அலசலும்' பகுதியின் வழியாக அலசுகிறார்கள். இதுபோன்ற கட்டுரை கள் தகவல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், படிப்பதற்கும் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
'இயற்கை' என்ற தலைப்பின் கீழ் நம்மைச் சுற்றியுள்ள தாவர வகைகள் பற்றியும் அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் விளக்கியிருக் கிறார்கள். மருத்துவப் பலன்களைக் கதை வடிவில் விளக்கியிருப்பதால், படிப்பவர்கள் மனதில் எளிதாகப் பதிந்து போய்விடுகிறது.
'வணிகம்' பகுதியில் இந்த மாதம் சேவைத்தரம் பற்றி விளக்கி எழுதியிருக்கிறார்கள். ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்கூடப் புரிந்து கொள் ளும் வகையில் எளிமையான மொழிநடையில் வணிக மேலாண்மையை விளக்கியிருக் கிறார்கள்.
ஆன்மீகம் பகுதியில் சுவாமி சின்மயானந்தரின் கட்டுரை மற்றும் தமிழில் வேதாந்தம், உனக்குள் இருப்பதை எப்படிக் கண்டு கொள்வது போன்ற பயனுள்ள கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
'இளைஞர் வட்டம்' பகுதியில் தலைமுறை இடைவெளி பற்றி விரிவாகப் பேசியிருக் கிறார்கள். கனடாவில் உள்ள சில ஊர்ப் பெயர்களின் தோற்ற வரலாறு பற்றியும் குறிப்பிட்டு ஒரு கட்டுரையும் வெளியாகி யிருக்கிறது.
"உங்கள் அபிப்ராயங்கள் ஆலோசனைகள் ஆக்கங்கள் ஆகியவற்றை குவியல் குழு ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதன் கட்ட மைப்புத் தொடர்பான மாறுபட்ட தொழில்நுட்ப உத்திகள், ஆக்கங்கள் தொடர்பான ஆலோ சனைகள், குறைநிறைகள் என்பன எமது வளர்ச்சிக்கு உரமாகும்.
பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும்விட குறைகளையும் ஆலோசனைகளையுமே குவியம் பெரிதும் விரும்புகிறது. உங்கள் கோரிக்கைகள் கேள்விகள் ஆகியன இயன்றளவு விரைவில் சம்பந்தப்பட்ட துறையினரால் கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆக்கங்களைவிட ஆக்கதாரர்களை ஆக்கு வதற்கே குவியம் முன்னுரிமை வழங்கியுள்ளது" என்று குவியம் டாட்காம் பார்வையாளர்களை தோழமையுடன் வரவேற்கிறது.
குவியம் டாட் காமை பார்வையிட விரும்பு பவர்கள் www.kuviyam.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த மாத இதழ்களை மட்டுமல்லாமல், கடந்த இதழ்களையும் பார்வையிட வசதியுள்ளது.
குவியம் டாட் காமிலிருந்து... |
|
"தேர்ஸ்டன் என்பவர் வாதியும் பழங்குடி மக்களும் என்ற புத்தகத்தில் தேவதாசிகளைப் பின்வரும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.
தத்தா- தன்னை கோயிலுக்கு அர்ப்பணித்தவள்
விக்ரித்தா- தன்னை கோயிலுக்குப் பணத்துக் காக விற்றவள்
ப்ரித்தியா- தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை தேவதாசியாக மாற்றியவள்
ப்ரித்தா- மயக்கி நிர்பந்தமாக கோயிலில் சேர்ந்தவள்
அலங்காரி- நடனத்தில் தேர்ச்சி பெற்று அலங்காரம் செய்யப்பட்டு அரசனாலோ அல்லது தனவந்தர்களாலோ கோயிலுக்குத் தானம் செய்யப்பட்டவர்கள்
கோபிகா- கோயிலில் நடனத்துக்கு அல்லது பாடுவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்டவள்"
-பொன்னம்பலம் குகதாசன்
"அஜெக்ஸ் (Ajax) கனடாவில் ரொறன்ரோ விலிருந்து ஓட்டாவுக்குப் போகும் 401 பெரும்பாதையின் அருகே உள்ள இடம். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்நகரம் உருவாகியது. அப்போது இங்கு ஆயுதக் கிடங்கொன்றிருந்தது. 1941-இல் பிரித்தானிய அஜென்ஸ என்ற போர்க் கப்பலின் பெயர் இந்நகரத்திற்கு வைக்கப்பட்டது. இக் கப்பல் இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1939-ஆம் ஆண்டு ஒரு ஜெர்மானிய போர்க் கப்பலை உருகுவே என்ற நாட்டில் மூழ்கடிக்கப்பட்டது"
ம.மு.சவந்திரம்,தமிழ்நாடு
"ஆற்றோடு மிதந்து செல்லும் ஒரு மரத் துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு மணிக்கு இரண்டு மைல் தூரம் வேகத்தில் ஆறு ஓடுகிறது. அதே மரத் துண்டும் அதே வேகத்தில் ஓடுகிறது. அந்த மரத் துண்டை மோட்டார் படகுடன் சேர்த்துக் கட்டுவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் படகு மணிக்கு பத்து மைல் வேகத்தில் ஆற்றின் வேகத்தை எதிர்த்துச் சென்றால் மரத்துண்டின் வேகம் மட்டுப்படும். மரத்துண்டு இப்படி மாறுபட்ட வேகத்தில் செல்லலாம். ஆனால் ஆற்றின் ஓட்டத்தின் வேகத்திலிருந்து விடுபட முடியாது.
தாவர இனங்களும் மிருகங்களும் நம்மைப் போலவே உயிர் வாழ்பவை. விதியின் கட்டுப் பாட்டுக்கு உட்பட்டவை. ஆனால் அவை ஆற்றில் சும்மா மிதந்து செல்லும் மரத்துண்டைப் போன்றவை. அவற்றால் மாறுபட்ட வேகத்திலோ எதிர்த் திசையிலோ செல்ல முடியாது. ஆனால் மனிதன் மோட்டார் படகுடன் இணைந்த மரத் துண்டைப் போன்றன்வன். அவனுக்கு அந்த விசையைப் போன்றது பகுத்தறிவு"
சுவாமி சின்மயானந்தர்
"போர்க் காலத்தே துருப்புகளின் பலாத்காரம் கொடுமையானது. மகனை கணவனை சகோத ரனை அழிப்பது மகளைக் கற்பழிப்பது, தாய் மாரையே துகிலுரிவது போன்ற தொடர்ச்சியான செயல்கள் பெண்களை நிமிர வைத்தன. தேவை ஒரு புறமிருந்தாலும் இக் கொடுமைகளும் அவர்களை பாரிய அளவில் திரள வழி வகுத்தன. கிரிசாந்தி முதல் எத்தனையே பேரின் கற்பு அமைதிப் படையாலும் கூடப் பறிக்கப்பட்டது. இதனால் எங்கே அமுக்கம் கூடுகிறதோ அங்கே வீக்கமும் அதைத் தொடர்ந்து வெடிப்பும் விளைவாவதை அடிமை கொள்வோர் உணரும் வகையில் வீராங்கனைகளின் வீர தீரங்கள் தொடர்ந்தன"
பொன்னம்பலம் குகதாசன்
"இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் புது வருடத்தை விசேஷமாகக் கொண்டாடு வார்கள். இரண்டு நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும். மருத்துநீர் வைத்துக் குளித்து புத்தாடை அணிந்து மூத்தவர்களின் ஆசி பெற்று செல்வார்கள். அன்றைய தினம் மானிப்பாய் மருதடிப் பிள்ளையாள் கோயில் தேராகும்"
விஸ்வா
"புத்தாடையில்லாத புத்தாண்டு ஆனால் புத்துணர்வு தருகின்ற ஒரு ஆண்டு சத்துணவும் சகலதுவும் வன்னிக்கு பக்கென்று போகின்ற புது ஆண்டு வருடவெடி மருந்திற்கும் போடாத வடிவான சித்திரபானு ஆண்டு கடிதெனவே நினைத்திட்ட காரியங்கள் பிடியெனவே நடக்கின்ற புது ஆண்டு"
"முன்னொரு காலத்தில் யாழ்ப்பாண குடா நாட்டில் வடகரை முழுவதும் மலைத் தொடராக யிருந்தது. பின் கடல் கொந்தளிப்பினால் கடல் நீர் உட்புகுந்து அழிந்து போய் எஞ்சி உள்ள பகுதியே கீரிமலைப் பகுதியாகும். மலை என்ற சொல் முற்காலத்திலிருந்த மலைத் தொடரைக் குறிக்கும். அம்மேட்டு நிலத்திற்கு சுவறிய மழைநீர் நன்னீர் அருவியாகி பள்ளமாகிய கடற்கரையில் பல இடங்களில் சுரந்தோடு கிறது. கீரிமலை யாழ்ப்பாணத்திலிருந்து 18 கிமீ தூரத்தில் உள்ளது. கீரி மலையின் சில பகுதி மணற்பாங்காகவும், சில பகுதி களிபாங்காகவும், சில பகுதி செம்மண் பாங்காகவும், சில பகுதி சொறிகற்பாறையாகவும் உள்ளது. அங்கே ஐந்து முதல் இருபது முழம் வரை ஆழமாகத் தோண்டப்பட்ட கிணறுகளில் நன்னீர் உண்டு. கீரிமலைக்கு அருகே பழமை வாய்ந்த சிவஸ்தலமாகிய நகுலேஸ்வரமுண்டு"
பொன்குலேந்திரன்
சரவணன் |
|
|
|
|
|
|
|