சத்யராஜின் இக்கட்டு மேலும் ஒரு நட்சத்திர வாரிசு இடைவெளி விட்டு நம்பிக்கை பொய்த்தது
|
|
புன்னகைப் பூவே |
|
- |செப்டம்பர் 2002| |
|
|
|
ரஜினியின் "நல்லவன்", பாரதிராஜா இயக்கிய "கிழக்குச் சீமையிலே", கமல் நடித்த "ஆளவந்தான்" என்று பிரம்மாண்டமான முறையில் திரைப்படங்களைத் தயாரிக்கும் கலைப்புலி S. தாணுவின் அடுத்த படம் "புன்னகைப் பூவே". நந்தா என்ற இளம் நடிகர் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஒரு சில கன்னடப் படங்களில் நடித்துள்ள ரேகா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை காவேரி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். |
|
வடிவேலு, சார்லி, மணிவண்ணன், R. சுந்தர்ராஜன், அனு மோகன் உள்ளிட்ட பல நடிக்கின்றனர். "வி.ஐ.பி", "பரதன்", "சுந்தர புருஷன்" ஆகிய படங்களை இயக்கிய சபா கைலாஷ் இயக்கத்தில் "புன்னகைப் பூவே" மலர்கிறது. திரைப்படக் கல்லூரியில் பயின்ற சுரேஷ் தேவன் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கின்றார். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். |
|
|
More
சத்யராஜின் இக்கட்டு மேலும் ஒரு நட்சத்திர வாரிசு இடைவெளி விட்டு நம்பிக்கை பொய்த்தது
|
|
|
|
|
|
|