Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல் - போகிற போக்கில்
மாதவனுடன் ஒரு சந்திப்பு
- |நவம்பர் 2002|
Share:
Click Here Enlargeமாதவன், வழக்கமான ஏனோ தானோ ஹீரோக்களிலிருந்து வித்தியாசமானவர், தனது அறிமுகத்திற்குப் பிறகு, தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் காட்டத் தொடங்கியிருக்கும் பண்பட்ட நடிகராக விளங்குகிறார். சராசரி மனிதாரகவும் ஒரு நட்சத்திரமாகவும் விளங்குகிறார். திரைத் துறையில் சிறந்து விளங்கும் முன்னணி இயக்குனர்கள் படங் களில் நடித்ததன் மூலம் மற்ற இளம் கதாநாயகர்களை விட ஒரு படி மேலோங்கியிருக்கிறார் நடிப்பைப் பொறுத்தமட்டில். அவரது சமீபத்திய வெளியீடான "ரன்" மக்களின் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி மாதவனை ஒரு புது கோணத்தில் காட்டியுள்ளது. டீன் பிரிகேடின் ·பேவரைட் ஆன மாதவன் இதோ உங்களுடன்.

நீங்கள் நடிக்கும் படங்களை எவ்வாறு தேர்ந் தெடுக்கின்றீர்கள்?

நான் பொதுவாக ஒரு படத்தில் நடிப்பதற்கு அப்படத்தின் திரைக்கதை - குறிப்பாக கதையின் கரு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் தேர்ந் தெடுப்பேன். கடைசி படம் என்ன, இயக்குனர் யார் என்ற முறையில் இல்லை.

தென் இந்திய படங்களிலும் சரி, பாலிவுட்டிலும் சரி, சரிவைச் சந்தித்த நீங்கள், இப்பொழுது "ரன்" சூப்பர் ஹிட் ஆகியி ருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் என்று எதைக் கூறுவீர்கள்?

சரிவு ஏற்பட்டது என்று கூறுவது உண்மையல்ல. மீடியா தான் அந்த மாதிரி சித்தரித்தது. கிட்டத்தட்ட எனது எல்லா படங்களும் ஹிட் தான். அதனால் "ரன்" ஹிட்டானது எனக்கு வித்தியாசமாகப் படவில்லை.

நீங்கள் ஏற்கனவே ஒரு சில பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர்களிடம் நடித்துள்ளீர் கள், இது ஒரு எச்சரிக்கையான முடிவா?

எச்சரிக்கையான முடிவே அல்ல. கதை கவரும் வண்ணம் இருக்க வேண்டும், மேலும் எனது நடிப்புத் திறன் வெளிப்படவேண்டும். என்னிடமிருந்து என்ன எதிர்பார்த்தார்களோ அதனைக் கொடுத்தேன்; முன்னர் கூறியது போல எனது தினசரி வாழ்க்கையின் அனுபவத் துணை கொண்டு.

உங்களது கனவு வேடம் எது?

'நாயகனில் 'கமல் ஹாசன் செய்த வேடம்; 'A Beautiful Mind' படத்தில் ரஸ்ஸல் குரோவ் செய்த வேடம் ஆகியவை நான் விரும்பிச் செய்ய நினைக்கும் வேடங்கள்.

உங்களுக்கு என்று தனி பாணியை அமைத்துக் கொள்ளவது முக்கியம் என்று கருதுகிறீர்களா?

ஒரு நடிகனுக்கு அவனுக்கு என்று தனி பாணியை அமைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம் இல்லை. அதே நேரத்தில் பல தரப்பட்ட வேடங்களைக் கொடுப்பது ஒரு நடிகனுக்கு மிகவும் முக்கியம். படத்தோடு ஒன்றிவிடக்கூடிய எந்த ஒரு நடிகனும் சிறந்த நடிகன் என்று கருதுகிறேன்.

தமிழ்ப் படங்களைத் தவிர மற்ற தென் இந்திய மொழிப் படங்களில் நடிக்கும் திட்டம் இருக்கிறதா?

இப்பொழுதுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் எனது படங்களை நானே மொழி மாற்றம் செய்யவேண்டும் என்பதில் குறியாக உள்ளேன். மற்ற மொழிகளில் அவ்வளவு சரளமாக இல்லை. அவற்றை நன்கு கற்றுக்கொண்ட பிறகு நான் நடிக்கலாம்.

கமல் ஹாசனுடன் "அன்பே சிவம்" படத்தில் நடிப்பதை எப்படி உணர்கின்றீர்கள்?

அது ஒரு உன்னதமான அனுபவம். அவர் ஒரு சிறந்த நடிகர். அவரிடமிருந்து ஒரு துளியேனும் கற்றுக்கொண்டால், நான் நிச்சயம் பெரு வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.
நடிப்பதை விட படம் எடுப்பதில் உங்கள் பங்கு என்ன?

படம் தயாரிப்பதற்கு முந்தைய நடவடிக்கைகளில் நான் பங்கு பெறுவேன். ஆனால் படப்பிடிப்பு தொடங் கியவுடன் நான் குறுக்கிடமாட்டேன்.

திரை உலகில் முத்திரைப் பெறுவது சகஜம். இதிலிருந்து எப்படி விடுபடுவீர்கள்?

முன்பே சொன்னது போல கதை ரொம்பவும் முக்கியம். வித்தியாசமான, சவாலான வேடங்கள் வந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன்.

தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள்?

AVM நிறுவனத்திற்காக விக்ரமன் இயக்கத்தில் ஒரு படம். மேலும் நான் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.

உங்களது மற்ற விருப்புகள்?

கோல்·ப் விளையாடுவேன். நான் ஒரு இண்டர் நெட் fad.

நடிகனாக ஆகியிருக்காவிட்டால், என்ன வாக இருந்திருப்பீர்கள்?

ராணுவத்தில் இருந்திருப்பேன்.
Share: 




© Copyright 2020 Tamilonline