தென் கலிபோர்னியாவில் 'காசு மேல காசு' அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம் அட்லாண்டாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.
|
|
|
நவம்பர் மாதம் எப்பொழுதும் Sacramento வுக்கு 'விழாக்கள் மா¡¡¡¡தம். எல்லா அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு தீபாவளியை கொண்டாடும் மாதம்.
Sacramento தமிழ் மன்றம் கடந்த இரண்டு வருடங்களாக Mega Tuners என்னும் இசை குழுவினரை கனடாவிலிருந்து வரவழைத்து மெல்லிசை நிகழ்ச்சி நடத்தியது. அதற்கு நல்ல வரவேற்பும் கூட்டமும் இருந்தது. இந்த வருடம் ஒரு மாறுதலுக்காக வளைகுடா பகுதியைச் சேர்ந்த நாடகக் குழுவினரின் தமிழ் நாடகத்தை மேடையேற்றலாமென்று முடிவு செய்து அவர்களின் 'காசு மேல காசு' நாடகத்தை கடந்த 16ந் தேதி (November 16th) மாலை San Juan High School Auditoriaum ல் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டம் அலை மோதாவிடினும் ஓரளவு இருந்தது.
தொய்வில்லாத காட்சிகளும், சிரிப்பை மூட்டும் தரமான வசனங்களும், நல்ல தேர்ந்த நடிப்பும் பார்வையாளர்களை கட்டிப் போட்டது. அலுப்பு தட்டாத டக் டக் கென்று மாறிய காட்சிகளும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டையும் கை தட்டலையும் பெற்றது. who wants to be the millionair காட்சியமைப்பு படு ஜோர்.
படையப்பா பாட்டைப் போட்டு ஹீரோவை Motivate பண்ணிய உத்தி புதுமையாகவும் நகைச்சுவை மிகுந்ததாகவும் இருந்தது.
- உள்ளூர்வாசிகளை கவரும் வண்ணம் தெருப் பெயரையும், மருத்துவமனை பெயரையும் உபயோகப்படுத்தியது நல்ல யுக்தி.
- நிமிஷத்தில் மாற்றிக்கொண்டேயிருந்த Make-upம் நன்றாக இருந்தது.
- நாடகத்தைப் பார்த்து முடித்த பின்னும் நினைவில் நின்றவர்கள்
- ஆனந்தாக நடித்த (Munish) மணிஷ், ராஜாவாக நடித்த பிரஸன்னா, அம்மாவாக நடித்த ரூபா மற்றும் அப்பாவாக நடித்த டைரக்டர் மணிராம்.
மற்றவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகத்தான் செய்து இருந்தனர். |
|
விமர்சனம் என்று வந்து விட்டால் சில மைனஸ் பாயிண்டும் (-) சொல்ல வேண்டுமல்லவா? அதனால் மன்னிக்கத்தக்க குட்டி குட்டி விமச்சனங்கள்:
- ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். ஐஸ்வர்யாவாக நடிக்கும் ப்ரியா நடிப்பில் இன்னும் கொஞ்சம் Improve செய்யலாம்.
- டி.வி சீரியல்கள் பற்றி வரும் வசனங்கள் கொஞ்சம் நீளம் அதிகம். இந்தியாவிற்கு வருடக் கணக்கில் போகாமல் இருப்போருக்குப் புரியாது.
- முரளி கதாபாத்திரம் வில்லன் போல சித்தரிக்க முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் பாலிஷ் தேவை டைரக்டர் சார்.
- மணி ராம் இது போன்ற டிராமாக்கள் இன்னும் நிறைய உருவாக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் மன்றத்திற்கு வந்த Feed Back இது போன்ற டிராமாக்களை அடிக்கடி மேடையேற்ற வேண்டுமென்று. நாடகத்திற்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் நல்ல தரமான நாடகம் பார்த்த திருப்தியுடன் திரும்பினர்.
ஜெயந்தி ஸ்ரீதர் |
|
|
More
தென் கலிபோர்னியாவில் 'காசு மேல காசு' அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம் அட்லாண்டாவில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.
|
|
|
|
|
|
|