ராகமாலிகா - பத்தாம் ஆண்டு நிறைவுவிழா தென்கலிஃபோர்னியா - தீபாவளிப் பண்டிகை - பல்கலை நிகழ்ச்சி திறமைக்கு ஊக்கம் தரும் மன்றம் கிராமப்புற மேம்பாட்டிற்காக கிரிகெட் ஃபார் இந்தியா '02 நிதி திரட்டியது வாய் விட்டு சிரி ! சிகாகோ புறநகர்ப் பகுதி - தமிழ்ப்பள்ளி
|
|
இலங்கையில் சமாதானம் |
|
- பிரகாசம்|ஜனவரி 2003| |
|
|
|
மார்கழி மாதம் 7ம் தேதி ''வன் நொய்ஸ்'' நகரத்தின் கீழ்நிலைப் பாடசாலை அரங்கு ஒன்றில் இந்த ஒன்றுகூடலும் கலைநிகழ்வும் நடந்தேறியது.
இலங்கையில் சமாதானம் நிலைக்கவும், உயிர் துறந்த தமிழ்ப் போராளிகளை நினைவுகூறவும் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
எத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் தமது நாட்டின் நடப்புகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதுதான் நோக்கு. அனிதா சிவராம் உடன் ஈழச்செல்லி ஜனார்த்தனன் எனற ஒரு இளம் 'நாட்டிய தாரகை' ஈழத்துப் பாடல்களுக்கு நாட்டிய வடிவம் அமைத்து பார்வையாளர்களை கிறங்க வைத்தனர். பாலா திருமலையுடன் இணைந்து தேனுகியா, பிரியங்கா விக்னேஸ்வரர் என்ற இரு சிறுமிகள் ஈழத்து எழுச்சி கீதங்கள் வழங்கி நிகழ்ச்சிக்கு மெருகு ஊட்டினார்கள். |
|
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அண்மையில் நடைபெற்ற 'மறைந்த போராளிகள் நினைவுகூறும் வைபவ நிகழ்வுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. நோர்வே நாட்டின் முனைப்பான சமாதான முன்னெடுப்பு நிகழ்வுகளும், மற்றும் நாடுகளின் கருத்துக்களும், கணணி வழியாக நிழற்படங்களாய் காண்பிக்கப்பட்டது. இலவசமான அனுமதியும், இராப்போசன விருந்தும் அளித்த விழாக்குழுவிற்கு நன்றி.
பிரகாசம் |
|
|
More