Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
பங்குகள் பட்டபாடு - (பாகம் - 2)
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2003|
Share:
முன் கதை: Silicon Valley - இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சட்ட வழக்கு நிறுவனம் வைத்திருந்த அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண் MBA படித்து பங்கு வர்த்தகம் புரிபவன். ஆனால் துப்பறியும் ஆர்வத்தால் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவழிக்கிறான்! அவனுக்கு மிகப் பிடித்தவை வேகமான கார்கள், வேகமான பெண்கள், வேகமான எலக்ட்ரானிக்ஸ்! ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவ ராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணிபுரிபவள். அவளுக்கு சூர்யாவின் மேல் உள்ள ஒரு தலை நேசத்தைச் சூர்யாவிடம் கூற வேண்டாம் எனத் தன் தம்பி கிரணிடம் கட்டாயமாகக் கூறியிருக்கிறாள். சூர்யாவின் கடந்த கால சோகம் அவர் இதயத்தை இறுக்கி யிருப்பதை அவள் அறிவதால், அது இளகும் வரை காத்திருக்க நினைக்கிறாள்.

கிரண் வேலை புரியும் ஹார்வி வில்கின்ஸன் பங்கு வர்த்தக நிறுவனத்தில் கம்ப்யூட்டர்களை வைத்து நடத்தப் பட்ட பல மோசடிகள் கண்டு பிடிக்கப் பட்டன. நிறுவனத்தின் கம்ப்யூட்டர் பாதுகாப்புப் பிரிவினரால் யார் செய்தனர் என்று கண்டுபிடிக்க இயலவில்லை. மோசடி நடத்தியவரை பிடித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நிறுவனத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு, கெட்ட பெயர் பரவி விடும். அதனால் நிறுவன அதிபர் ஹார்வி கிரணைத் துப்பறிய அழைத்தார். கிரண் நிறுவனத்தின் ஸா·ப்ட்வேர் குழுவில் வேலை புரியும் கண்ணன், சுரேஷ் இருவரிடமும் ப்ரோக்ராம் ஸோர்ஸ் கோட் (source code) கேட்டு ஆராய்ந்து விட்டு, தன்னால் கண்டு பிடிக்க இயலாது, சூர்யாவால் தான் இயலும் என்று கூறினான். ஹார்விக்கு வெளி மனிதரை விசாரிப்பில் நுழைக்க விருப்பமில்லை. ஆனாலும் கிரண் அழுத்திக் கூறியதால் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார். சூர்யாவின் இளமையும் மிடுக்கான தோற்றமும் அவருடைய தயக்கத்தை இன்னும் அதிகப்படுத்தின! கிரணுக்காக சும்மா சில நிமிடம் பேசிவிட்டு ஒதுக்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் பாவம், சூர்யாவின் ஆரம்ப வார்த்தைகள் அவரை அதிரவே செய்து விட்டன!

******


கிரண் காரில் வரும் போதே சூர்யாவுக்கு ரிக்கின் தயக்கத்தைப் பற்றி விளக்கி எச்சரித்துவிட்டிருந்தான். சூர்யாவுக்கு அது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் கிரண் சொன்ன படி பார்த்தால் ரிக் வெளி ஆட்களை உட்படுத்த மற்ற கேஸ்களை விட இன்னும் ரொம்பவே தயங்குவதாகத் தோன்றியது. கிரண் விஷயம் மிகக் கடினமானது, நிறுவனத்திற்குள் இருப்பவர்களால் சாதிக்க முடியாது, சூர்யாவின் உதவி மிகவும் தேவை, எப்படியாவது ரிக்கின் மனத்தை மாற்றியாக வேண்டும், அதுவும் சூர்யாவினால்தான் முடியும் என்று மிகவும் கேட்டுக் கொண்டான். விஞ்ஞானிக்கு விளைந்த விபரீத விஷயத்தில் காவல் துறை அதிகாரி மார்க் ஹாமில்டனை வியக்க வைத்து மாற்றிய மாதிரி இங்கும் செய்ய வேண்டும் என்றான்.

சூர்யாவும், சரி முயன்று பார்க்கலாம் என்று சம்மதித்திருந்தார். ரிக் வில்கின்ஸன் மிக வன்மை யான அரணை எழுப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்றியதால், தனது திறமையை வழக்கத்துக்கும் மேலாக நீட்டி ஒரு அதிரடி யூகத்தை வீசி அந்த அரணைத் தகர்த்தெறியத் தீர்மானித்தார்.

அதனால், ரிக்கின் அலுவலக அறைக்குள் நுழைந்த வுடன் சுற்றி வர ஆழ்ந்த நோட்டமிட்டார். ரிக்கின் தோற்றத்தையும் நடை, உடை, பாவனை களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தார். ரிக் மேஜையை விட்டு வந்து கை குலுக்கிய சில நொடிகளுக்குள்ளேயே தன் சோதனையை முடித்துக் கொண்ட சூர்யா, ரிக் குலுக்கிய கையைக் கிழே போடுவதற்குள் தன் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வீசினார்!

"ஹலோ ரிக்! உங்களை சந்திக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியடையறேன். அதுவும் பார்க்கின்ஸன்ஸ் நோயை சமாளிச்சுக் கிட்டு இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிர்வாகிக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுகிறிர்களே, எனக்கு அது ரொம்ப ஆச்சர்யத்தையும் மதிப்பையும் ஏற்படுத்துது! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!"

சூர்யா வீசிய ஏவுகணையால் ரிக் ஒரு கணம் ஆடியே போய் விட்டார். மேஜையை இடது கையால் தாங்கிக் கொண்டார். அவரது வலது கை தடுக்க முடியாமல் லேசாக நடுங்க ஆரம்பித்தது. சூர்யாவின் வார்த்தை களும் அவை ரிக்குக்கு ஏற்படுத்திய விளைவுகளும் சூர்யாவின் பல சாகசங்களையும் பார்த்து பழகிப் போய் விட்டிருந்த கிரணையும் கூட அளவுக்கு மீறிய அதிசயத்தில் ஆழ்த்தி விட்டன!

அவன் "சூர்யா, என்ன இது, எனக்கே தெரியாதே, எப்படி சொல்றீங்க?!" என்று கூவினான்.

ரிக்கின் முகத்தில் ஆச்சர்யமும், கோபமும் மாறி மாறித் தாண்டவமாடின. "திஸ் ஈஸ் வே டூ மச்! கிரணுடைய நண்பர்ங்கறதுனால சும்மா விடறேன். என்னுடைய அந்தரங்க மருத்துவ ரெகார்டுகள் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது? இந்த விஷயம் எனக்கும் என் டாக்டருக்கும் மட்டும் தான் தெரியும். என் மனைவிக்குக் கூடத் தெரியாம மறைச்சு வச்சிருக்கேன். எப்படியோ என் டாக்டர்கிட்ட இருந்து அதை குடாய்ஞ்சு வாங்கியிருக்கீங்க. இது இன்வேஷன் ஆ·ப் ப்ரைவஸி! உங்க மேல வழக்கு போட முடியும் தெரியுமா?!" என்று உச்சஸ்தாயியில் கத்தினார்.

கிரண் உடனே சூர்யாவின் பாதுகாப்புக்குத் தாவினான்! "ரிக், அப்படி இருக்கவே முடியாது! நான் நம்ம கம்பனிக்கு உதவறத்துக்காக அவரை இழுத்துக் கிட்டு வரத்துக்கு முன்னாடி, சூர்யாவுக்கு ரிக் வில்கின்ஸன்னு ஒரு மனிதர் இருக்கறது கூடத் தெரியாது! அதுவும் பதினைஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடிதான் தெரியும். அது, உங்களுக்கே தெரியும்! இந்த விஷயத்தைப் பத்தி எனக்குக் கூடத் தெரிவிக்கலைன்னு நீங்களே கூட இப்பத்தான் சொன்னீங்க! எனக்கு உங்க டாக்டர் யாருன்னு கூடத் தெரியாதே?! அப்படி இருக்கச்சே சூர்யா எப்படி உங்க டாக்டர் கிட்ட போய் உங்க மருத்துவ ரெகார்டுகளைப் பார்க்க முடியும்?! கொஞ்சம் நிதானத்தோட யோசிச்சுப் பாருங்க! சூர்யா இந்த அறையில பார்த்த சில தடயங்களை வச்சுத்தான் இதை யூகிச்சிருக்கணும். அவர் அந்த மாதிரி கண்டு பிடிக்கறதை நான் நிறையப் பாத்திருக்கேன். நான் அவரை இதுக்குக் கூப்பிட்டதே அதுனாலதானே?! என்ன சூர்யா?! சொல்லுங்க, எப்படி யூகிச்சீங்க? எனக்கே ஆச்சர்யம் தாங்க முடியலை, ரிக் அதிர்ச்சியானதுல அதிசயமே இல்லை!"

சூர்யா தன் இரண்டு கைகளையும் தூக்கிக் காட்டி சமாதானக் கொடி காட்டினார். "சாரி, ரிக், நீங்க என்னைக் கொஞ்சம் தப்பாப் புரிஞ்சுகிட்டிருக்கீங்க! உங்க தனிப்பட்ட அந்தரங்கங்களிலத் தலையிடறதுல எனக்குத் துளிக் கூட விருப்பமில்லை. அது ஒரு யூகந்தான். ஆனா எனக்கு உண்மையாகவே ரொம்ப பலவீனமாக்கி அன்றாட வாழ்க்கையைப் பாதித்துவிடும் பார்க்கின்ஸன்ஸ் நோயை யாருக்கும் தெரியாம இந்த நிறுவனத்தையும் குடும்ப வாழ்வையும் ஒன்றுமே ஆகாதது போல் நடத்தி வரும் உங்கள் மேல் எனக்கு இன்னும் பல மடங்கு மதிப்பு அதிகமாகிவிட்டது! My hat's off to you!" என்று தலை வணங்கினார்.

ரிக் பெருமூச்சு விட்டு சாந்தமடைந்தார். இருந்தாலும் கொஞ்சமும் தணியாத ஆச்சர்யத் துடன், "My hat's off to you too, சூர்யா! கிரண் உங்களைப் பத்தி நிறைய என் கிட்ட சொல்லியிருக்கான். ஆனாலும் என்னால இது வரை அதை ரொம்ப நம்ப முடியலை. இப்ப ஒரு நொடியில நம்ப வச்சுட்டீங்க. ஆமாம், கிரண் சொன்ன படி, எனக்கும் தாங்க முடியலை. இது வரைக்கும் யாருக்குமே தெரியாத படி பாதுகாத்த ரகசியத்தை எப்படி யூகிச்சீங்க? சீக்கிரம் சொல்லுங்க" என்று கெஞ்சினார்.

சூர்யா விளக்கினார். "இந்த யூகம் கொஞ்சம் ரிஸ்கின்னுதான் சொல்லணும்! நான் இந்த அறைக்குள்ள நுழைஞ்சவுடனேயே நான் சுற்றிக் கூர்மையா கவனிச்சேன்னு நீங்க பார்த்திருக் கலாம்..."

கிரண் ஆமாம் என்றுத் தலையாட்டினான். ரிக், "இல்லை, நான் உங்களுக்கு கை குடுக்க வந்த சில நொடிகளுக்குள்ள அது முடிஞ்சு போச்சே, நான் கவனிக்கவே இல்லை!" என்றார்.

சூர்யா தொடர்ந்து விளக்கினார். "நான் கவனிச்சதுல, கிரண் சொன்ன படி சில தடயங்கள் கிடைச்சுது! அதையெல்லாம் கோர்த்துப் பாத்ததுல வந்த யூகம் ரொம்பத் தவறா இருக்க முடியாதுன்னு தோணிச்சு. முதலாவது, அதோ உங்க பின்னாடி இருக்கற மஹாகனி புக் கேஸ்ல இருக்கற புத்தகங்கள். நீங்க ரொம்ப ஆர்கனைஸ்டா வச்சிருக்கீங்க. அதுல ஒரு பக்கம் மருத்துவ புத்தகங்கள் அஞ்சு இருக்கு. அதுல மூணு புத்தகம் மூளை-நரம்பு நோய்கள், ந்யூரோ டிஸ்ஆர்டர்கள் பற்றிய புத்தகங்கள், அதுவும் அதுல ரெண்டு பார்க்கின்ஸன்ஸ் நோய் பத்தியது! மேலும்..."

சூர்யா மூச்சு வாங்க சற்று நிறுத்த, ரிக் ஊக்குவித்தார். "மேலும் என்ன, சொல்லுங்க, கேட்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு!"

சுர்யா மேலும் கூறினார். "...இதோ மேஜை மேல பாருங்க ஒரு ·பைல். அதுலேந்து ஒரு செய்தித்தாள் க்ளிப்பிங் ஒரு மூலை நீட்டிக் கிட்டிருக்கு. அதுலயும் பார்க்கின்ஸன்ஸ் அப்படிங்கற வார்த்தை தெரியுது! அது மட்டுமில்லை. இந்த குப்பைக் கூடைல ஒரு மாத்திரைகள் எடுக்கப் பட்டு ஓட்டை ஓட்டையா இருக்கறத் தாள் இருக்கு. மற்றும் எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஷாலினி கன்ஸல்ட் செய்யற பயோ-டெக் நிறுவன கராஜ் பார்க்கிங் சீட்டும் கிடக்குது. அங்க பார்க்கின்ஸன்ஸ் நோய்க்கு ரொம்ப முற்போக்கான சோதனை மருத்துவம் நடத்துவதாக ஷாலினி சொல்லியிருக்கா. அதுக்கும் மேல..."

ரிக் மறித்துக் கூவினார். "சில நொடிகளூக்குள்ள இத்தனைக் கூர்ந்து கவனிச்சிட்டீங்களா! அபாரம், அபாரம்! கிரண் உங்களைப் பத்தி சொன்னது மிகையே இல்லை, குறைச்சு சொல்லியிருக் கான்னுதான் சொல்லணும்! இன்னும் இருக்கா, என்ன சொல்லுங்க!"

சூர்யா தொடர்ந்தார். "எல்லாத்துக்கும் மேல, முக்கிய ஆதாரமா, நீங்க என் கையைக் குலுக்கறச்சே மிக லேசா வலது கை நடுங்கிச்சு. நீங்க கொஞ்சம் உடனே மூஞ்சை ஒரு நொடி சுளிச்சிட்டு, இடது கையால உங்க வலது கையைப் பிடிச்சு சுதாரிச்சுகிட்டீங்க. அதைக் கவனிச்சதும் என் யூகம் இன்னும் பலமாயிடுச்சு. உங்க மேல மதிப்பும் உயர்ந்திடுச்சு. அதுனாலதான் கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லைன்னு வெளிப்படையா சொல்லிட்டேன். நீங்க யாருக்குமே தெரியாம மறைச்சு வச்சிருப்பீங்கன்னு தோணவே இல்லை. அதைப் போட்டு உடைச்சிட்டதுக்கு ரொம்ப வருத்தப் படறேன், வெரி ஸாரி ரிக்!" என்று கூறி முடித்தார்.

ரிக் கை தூக்கி அசைத்து, தலையை வேகமாக ஆட்டி, மறுத்தார். "இல்லவே இல்லை சூர்யா, மன்னிப்புக் கேட்க வேண்டியது நான் தான்! உங்களைத் தப்பாப் புரிஞ்சுகிட்டு என்னென்னவோ உளறிட்டேன்! என் நோயைப் பத்திய விஷயம் கிரணுக்குத் தெரிஞ்சதுல ஒண்ணும் தப்பே இல்லை. எனக்கு அவன் மேல அபார நம்பிக்கை இருக்கு. எப்படியும் அவனுக்கு சீக்கிரமே சொல்லி இன்னும் மேல்பொறுப்பை ஏத்து கிட்டு உதவும் படி கேட்டுக்கணும்னு தான் இருந்தேன். இந்த விசாரணைல அவனை இழுத்ததும் அதுக்குத்தான். உங்க யூகத் திறமை என்னை மீள முடியாத ஆச்சர்யத்துல ஆழ்த்திடுச்சு. கிரண் சொல்லியிருக் கறதுனால, உங்க விவேகத்துலயும் நம்பிக்கை இருக்கு. இனிமே கொஞ்சம் கூடத் தயக்கமில்லை. வாங்க, உட்கார்ந்து இந்த விஷயத்தைப் பத்தி பேசலாம். இதை சீக்கிரமா ஸால்வ் பண்ணியாகணும்" என்று திரும்ப தன் நாற்காலியில் போய் அமர்ந்தார்.

சூர்யாவும் எதிர் பக்கம் அமர்ந்து கொண்டு, "கார்ல வரச்சே, விஷயம் என்னன்னு கிரண் சுருக்கமா சொன்னான். யாரோ உங்க ஸா·ப்ட்வேர்ல புகுந்து கொஞ்சம் மாத்தி பல மோசடிகளை செஞ்சிருக்கறதா சொன்னான். எனக்குப் புரிஞ்ச படி ரெண்டு மாதிரி மோசடிகள் தெரிய வந்திருக்கு. ஒண்ணு பென்னி ஷேவிங் - அதாவது ஒரு அக்கவுன்ட்ல சேக்க வேண்டிய பணம் சரியா முழு பென்னிகளுக்கு சேராட்டா, பென்னிக்கும் மேலான பின்னத்தை ஒரு தனி அக்கவுன்ட்டுல சேத்துடறது. இன்னொண்ணு கோஸ்ட் ட்ரான்ஸேக்ஷன் - அதாவது ப்ரோக்கர் இல்லாம ரொம்ப பிஸியான அக்கவுன்ட்டுகளில ஜோடி ஜோடியா பங்கு வாங்கி வித்தா மாதிரி ட்ரான்ஸேக்ஷன் சேத்து கமிஷனை தனி அக்கவுன்ட்டுல சேக்கறது. சரியா?"

ரிக் ஆமோதித்தார். "சரியா, கச்சிதமா சொல்லிட்டீங்க. என் கவலை என்னன்னா, இன்னும் எவ்வளவு இந்த மாதிரி இருக்கோ, அதெல்லாம் விஷயம் வெடிக்கறத்துக்குள்ள நாமே கண்டு புடிச்சி, இதை செஞ்ச காலிப் பசங்களையும் புடிச்சி உள்ள தள்ளி, வாடிக்கையாளர்களுக்கெல்லாம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து, வரி நிவாரணம் செஞ்சு, நிறுவனத்து மேல அவங்க வச்சிருக்கற நம்பிக்கை குலைஞ்சு போகாம காப்பாத்தணும். அதுதான்".

ரிக் பெருமூச்சு விட்டு விட்டு தொடர்ந்தார். "எங்க செக்யூரிட்டி ஆளூங்க தேடிப் பாத்துட்டாங்க. கிரணும் பாத்தான். இன்னும் ஒண்ணுமே தெரியலை. நான் ரொம்பத் துடிச்சிகிட்டிருக்கேன் சூர்யா. என் பார்க்கின்ஸன் நிலையையும் இது இன்னும் மோசமாக்கலாம்னு என் டாக்டர் கவலை படறார். இப்ப உங்க திறமையை நேரா பாத்தப்பறம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை துளிர் விடுது. சீக்கிரம் கண்டு பிடிச்சிடுங்க சூர்யா, ப்ளீஸ்!"

ரிக்கின் கண்ணில் நீரே தளும்ப ஆரம்பித்து விட்டது. நாசூக்காக துடைத்து விட்டுக் கொண்டார்.

தன் முயற்சியால் தழைத்து வளர்ந்த நிறுவனம், யாரோ பாதகர்களின் மோசடியால் உருக் குலைந்து விடுமோ என்று பதறிய அவருடைய உணர்ச்சிகளின் ஆழம் சூர்யாவுக்குப் புரிந்தது. அவருக்கு சற்று நிம்மதி கொடுக்க வேண்டி, இந்த சிக்கலை அவிழ்க்க முடியுமா என தனக்கே ஏற்பட்ட சந்தேகத்தை மறைத்துக் கொண்டு, "கவலைப் படாதீங்க ரிக்! சீக்கிரமே புடிச்சிடலாம். என்ன கிரண்?!" கிரணைப் பார்த்து ரிக்குக்குத் தெரியாமல் ஒரு புருவத்தை உயர்த்தி தலையை மிகச் சிறிய அளவு அசைத்து சைகை காட்டினார்.

கிரண் புரிந்து கொண்டு, தைரியத்தை வாரிக் கொட்டினான். பெருத்த புன்னகையுடன், "ரிக், ஆமாம். இனிமே முடிச்சாச்சுன்னே வச்சுக்குங்க. என் மூளையையும், உங்க இளமையையும், சூர்யாவுடைய குறுந்தாடியையும் பாத்துட்டு குற்றவாளிங்க பயந்து தாங்களே வந்து சரணாகதியாடுவாங்க பாருங்க!" என்றான்.

ரிக் கவலையை மறந்து வாய் விட்டு சிரித்து விட்டார். "தேங்க்ஸ் கிரண், இந்த சிரிப்பு எனக்கு தேவைப் பட்டது! சூர்யா, நாம இப்போ என்ன செய்யணும்?" என்றார்.

சூர்யா சில நொடிகள் மெளனமாக யோசித்து விட்டு, "இந்த மோசடிகள் எப்படி நடக்குதுன்னு உங்களுக்கு எப்போ, எப்படித் தெரிஞ்சுது?" என்று கேட்டார்.

ரிக் பெருமுச்சு விட்டார். "ஒரு வாரமாகுது. எங்க ஆடிட்ஸ் டிபார்ட்மென்ட்ல ஒருத்தர் எல்லா ட்ரான்ஸேக்ஷன் மொத்தத் தொகைகளையும் சேத்துப் பாத்ததுல தினப்படி கொஞ்சம் வித்தியாசம் வருதுன்னு கண்டுபிடிச்சார். இந்த பென்னி ஷேவிங் அக்கவுன்ட் எந்த வகைலயும் சேராம தனிப்படியா வெளியே தெரியாத படி அமைக்கப்பட்டதுனால அதுல சேர்க்கப்பட்டத் தொகை பேலன்ஸ் ஆகலை. அது சாதாரணமா தெரிஞ்சிருக்கவே இருக்காது. ஆனா இந்த ஆடிட்காரர் தற்செயலா, வழக்கமா ஒப்பிடாத ரெண்டு தொகைகளை ஒப்பிட்டுப் பார்த்துட்டு எதோ உதைக்குதேன்னு பார்க்கப் போக நிஜமாவே தினப்படி குறையுதுன்னு தெரிஞ்சுது. அதை என் CFO சொன்னவுடனே எனக்கு பகீர்னுச்சு. உடனே கண்டு புடிச்ச ஆளை மட்டும் செக்யூரிட்டிக்கு ட்ரான்ஸ்·பர் பண்ணிட்டு, ஸிஸ்டத்துல இருக்கற எல்லா அக்கவுன்ட்களையும் பட்டியல் போட்டு பார்த்தோம். இந்த அனாதை அக்கவுன்ட் இருக்கறது தெரிஞ்சுது."

சூர்யா, "ஓ இ ஸீ! சரி, அது பென்னி ஷேவிங் விஷயம். இந்த போலி ட்ரேட்ஸ்? அது எப்படி தெரிஞ்சுது?"

கிரண் இடையில் குதித்தான். "நான் சொல்றேன். சூர்யா, அந்த அக்கவுன்ட் தெரிஞ்சப்புறம் இந்த ரெண்டாவது விஷயம் ரொம்ப சிம்பிள். ஏன்னா அக்கவுன்ட்லேந்து தினமும் சேத்து வெளி அனுப்பப் படற பணம் பென்னி ஷேவிங்கை விட மிக அதிகம். அதுல க்ரெடிட் ஆகற தொகைகளின் லாக் எடுத்துப் பாத்தா அது கமிஷன் தொகைகள்னு தெரிஞ்சுது. கமிஷனை நாங்க வாடிக்கையாளர் அக்கவுன்ட்லேந்து கழிச்சவுடனே, கம்பனி அக்கவுன்ட்டுக்குத்தான் போகணும், அதுவும் யார் செஞ்ச ட்ரேட்ங்கற குறிப்போட. அப்பதானே அவங்க போனஸ் கணக்குப் போட முடியும்?! ஆனா இந்த ட்ரேட்கள் எந்த ப்ரோக்கர் பேரும் இல்லாம நடத்தப் பட்டதுனால பேரில்லாம தனி அக்கவுன்ட்ல சேத்திருக்காங்கன்னு தெரிஞ்சுது." என்றான்.

ரிக் தலையாட்டி "எக்ஸாக்ட்லி!" என்றார்.

சூர்யா மீண்டும் சில நொடிகள் மெளன யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, "ஒரு வாரமா உங்க ஸெக்யூரிட்டி ஆளுங்க ஆராய்ஞ்சு பாத்தும் யார் செஞ்சாங்கன்னு கண்டு பிடிக்க முடியலைங் கறீங்களே. உங்க ஸா·ப்ட்வேரை யார் மாத்தினாங் கன்னு ட்ரேஸ் பண்ணறா மாதிரி ஸோர்ஸ் கோட் ஸிஸ்டம் இல்லையா?" என்று கேட்டார்.

ரிக் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டு கிரணை அண்ணாந்து பார்த்தார்.
கிரண் வருத்தத்துடன் தலையசைத்து புன்னகைத் தான். "அவ்வளவு எளிதில்லை பாஸ்! எங்க ஸெக்யூரிட்டி ஆளை நான் கேட்ட முதல் கேள்வி அதுதான்!"

ரிக்கும் சோகமாக ஆமோதித்தார். "நானும் அதேதான் கேட்டேன்! மேல சொல்லு கிரண்!"

கிரண் தொடர்ந்தான். "துரதிருஷ்டவசமா, நாங்க அவ்வளவு புத்திசாலியுமில்லை, மாத்தினவங்க அவ்வளவு முட்டாளுமில்லை! எங்க ஸிஸ்டத்துலயும் யார் எந்த ·பைலில எந்த லைன்களை எப்ப மாத்தியிருக்காங்கங்கற விஷயம் இருக்கு. ஆனா மாத்தினவங்க அதிசாமர்த்தியசாலிங்க! அந்த மாதிரி விஷயம் வெர்ஷன்கள் என்னென்னன்னு குறிச்சுக்கத்தானே ஒழிய பாதுகாப்புக்காக இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு அதுல இருக்கற, பஸ் ஓட்டற அளவுக்குப் பெரிய ஓட்டைகளுல நுழைஞ்சு யார் மாத்தினதுன்னு தெரியாம மாத்தியிருக்காங்க!"

சூர்யாவின் ஆர்வம் தலையெடுத்தது! "அதெப்படி? இன்னும் கொஞ்சம் விவரமா சொல்லேன்?!"

கிரண் விவரித்தான். "ரெண்டு விதமா செஞ்சிருக்காங்க. அவங்க எங்க ஸிஸ்டத்தை நல்லா அலசி, ஆராய்ஞ்சு ரொம்ப நாளா திட்டம் போட்டிருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப க்ளெவரா நடத்தியிருக்காங்க! எங்க கிட்ட·பைல்களின் மாற்றங்களையெல்லாம் சேமித்து வைக்கறத்துக்கு ரெண்டு விதமான ஸிஸ்டம் இருக்கு. ஒண்ணு யூனிக்ஸ் ஆணைகளாலயே ஏற்படுத்தப்பட்ட, மாற்றங்களை மட்டும் ASCII-யிலேயே தனித்தனி ·பைல்களில சேத்து வைக்கற ஸிஸ்டம். அதுல இருக்கற மாற்ற ·பைல்களை அந்த க்ரூப்பில உள்ள யார் வேணும்னாலும் எடிட் பண்ண முடியும். அதுல மாற்றங்கள் எப்படி சேத்து வைக்கப் படுதுன்னு நல்லாத் தெரிஞ்சவங்க யாரோ அந்த மாற்ற ·பைல்களையே எடிட் பண்ணி, மாற்ற ரெகார்டுகளையே அழிச்சுட்டிருக்காங்க! அதுனால யார் மாத்தினாங்க, எதை மாத்தினாங்கன்னு கூட கண்டு பிடிக்க முடியாது! இதை சரி பண்ணனும்னா, ஆர்க்கைவ்ஸிலேந்து, பழைய வெர்ஷனை ஒட்டு மொத்தமா திருப்பிக் கொண்டு வரணும்!"

சூர்யா சிலாகித்தார். "உம்! ரொம்ப புத்திசாலித்தனமாத்தான் இருக்கு! ஆனா அந்த பழைய ·பைல்ஸ் திருப்பிக் கொண்டு வந்தப்புறம் அதையும் இப்ப இருக்கறதையும் ஒப்பிட்டுப் பாத்து என்ன வித்தியாசம்னு கண்டு பிடிக்கலாம் இல்லையா?"

ரிக் கை தட்டினார்! "வெல் டன் சூர்யா! அதுதான் இப்ப நடந்துகிட்டிருக்கு. ஆனா சராசரி மாற்றங்களும் நிறைய இருக்கறதுனால மோசடிக்காக எது மாத்தப் பட்டிருக்குன்னு அலசறது அவ்வளவு சுலபமில்லைன்னு எங்க ஸெக்யூரிட்டி ஆளுங்க சொல்றாங்க. அதுனால ரொம்ப மெதுவா போயிட்டிருக்கு."

கிரண் கலகலவென்று நகைத்தான். "அது சும்மா உடான்ஸ் சால்ஜாப்பு! அந்த ஆளுங்களுக்கு அந்த ப்ரோக்ராம் கோட் தலையும் வாலும் புரியலை அவ்வளவுதான்! அதுனாலதான் நான் அதை எழுதின கண்ணன், சுரேஷ் ரெண்டு பேரையும் இழுக்கணும்னு சொல்றேன்!"

ரிக் குழம்பினார்! "உடான்ஸ்?! சால்ஜாப்?! என்ன சொல்றே கிரண்?!"

கிரண் கொஞ்சம் வெட்கினான்! "ஓ அதுவா! இந்த கண்ணன் சுரேஷோட பேசி பேசி, தமிழ் சினிமாவும் பாக்கிறேனா? மெட்ராஸ் பாஷைன்னு ஒரு தனிப்பட்ட லேங்வேஜ் இருக்கு! அது ஒட்டிகிச்சு! அதான்! நான் சொன்னதென்னன்னா அந்த ஸெக்யூரிட்டி ஆளுங்க புரியாததுனால, ரொம்ப கஷ்டம்னு வெத்து சமாதானம் உடறாங்கன்னு!"

சூர்யா சிரித்தார்! "கிரண் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு! இல்லைன்னா, இன்னும் கொஞ்ச நாளுல லுங்கி கட்டிகிட்டு வாய்ல பீடி வச்சுகிட்டு என்ன நைனாங்கப் போறே! சரி, ரெண்டு விதமா செஞ்சிருக்காங்கன்னு சொன்னியே, அதுல ஒண்ணுதான் சொன்னே... இன்னொரு விதம்?"

கிரண் தொடர்ந்தான். "சில ஸோர்ஸ் ·பைல்கள் இன்னொரு ஸிஸ்டத்துல போட்டு வைக்கறாங்க. அது PC வின்டோஸ் ப்ரோக்ராம்கள் போடற ஸிஸ்டம். அதுல மாற்றங்களை தனித்தனி ·பைலா வைக்காம மொத்தமா ஒரு பைனரி டேடாபேஸ்ல ரெகார்டுகளா இருக்கு. அந்த ஸோர்ஸ் ·பைல்களை மாத்தறத்துக்கு ஒரு பொது க்ரூப் உரிமையுள்ள யூஸர்-ஐடி இருக்கு. அந்த பொது யூஸரா நெட்வொர்க் லாக்-ஆன் பண்ணி ப்ரோக்ராம் மாத்தியிருக்கற துனால யார் மாத்தியிருக்காங்கன்னு சொல்ல முடியலை. ஆனா நல்ல வேளை, இந்த விஷயத்துல, என்ன மாத்தியிருக்காங்கன்னு பாக்க முடியுது!"

சூர்யா தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டார். "ஸோ... ஆக மொத்தம் மிஞ்சிப் போனா இரண்டு வித ·பைல்களையும் என்ன மாத்தப் பட்டிருக்குன்னு பாக்கலாம், யார் செஞ்சாங்கன்னு கம்ப்யூட்டர் ரெகார்ட்ஸ் வச்சு கண்டு பிடிக்க முடியாது, அப்படித்தானே?!"

கிரண், "கரெக்ட்! அப்படித்தான்! அதுனாலதான் உங்களை இழுத்துட்டேன்!" என்றான்.

சுர்யா, "சரி, அப்ப இன்னும் அந்த மோசடி தொடருதா?!" என்றார்.

ரிக், "ஸெக்யூரிட்டி ஆளுங்க போலீஸை உட்படுத்தற வரைக்கும் தொடரட்டும்னு விட்டிருக்காங்க. மேலும், ஸா·ப்ட்வேர் ஆளுங்களும் அந்த ப்ரோக்ராம்ஸை உடனே மாத்த முடியாது! டெஸ்ட் பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அந்தத் தனி அக்கவுன்ட்ல சேரற பணம் மட்டும் வெளியே போகாம வயர் தடுப்பு போட்டிடுக்கோம். ஆனா இது ரொம்ப நாள்: தொடர முடியாது! உடனே அந்த திருட்டுப் பசங்களைக் பிடிச்சு இன்னும் என்னென்ன செஞ்சிருக் காங்கன்னும் கண்டு பிடிச்சு எல்லாத்தையும் சீக்கிரம் சரி கட்டியாகணும்!" என்றார்.

சூர்யா, "சரி. இந்த விஷயத்தை அப்ப ஸெக்யூரிட்டி டெக்னாலஜி மூலமா மட்டும் கண்டு பிடிக்க முடியாது. நிஜ உலக மக்கள் கிட்டயும் விசாரிச்சுதான் கண்டு பிடிக்கணும்! அந்த பாதுகாப்புப் பிரிவினரோடயும், ஸா·ப்ட்வேர் குழுவோடயும் பேசலாம் வாங்க!" என்று கிளம்பினார்.

அங்கு அவர் நிதித்துறை மென்பொருட்களைப் பற்றி அறிந்தது "அப்பாடா, இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?!" என மிகவும் வியக்க வைத்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline