Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கலாட்டா-2007
இந்தியாவின் கிராமப்புற பள்ளிகளுக்கு OSAAT-இன் பணி
- |பிப்ரவரி 2007|
Share:
Click Here Enlargeவளர்ந்து வரும் விஞ்ஞானம், மாறி வரும் வாழ்க்கை முறை என இந்தியா அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அதிவேக வளர்ச்சி, இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியைத் தான் அளித் திருக்கிறதே தவிர, மகிழ்ச்சியை அல்ல. இந்தியாவின் முதுகெலும்பென வர்ணிக்கப் பட்ட கிராமப்புறமும் அதன் மக்களும் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் தேவை என்ன என்று கண்டறியும் எண்ணம் நிறைய பேரிடம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

"சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு மரத்தடியில் கர்னாடகாவின் பஜேகோலி பகுதியில் சிறுவர்கள் உட்கார்ந்து கொண்டு கல்வி கற்ற முறையை பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்", என்று கூறும் வாதிராஜா பாட், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியை சேர்ந்த ஒரு தேர்ந்த மிருதங்க வித்வான். "ராகா" என்றழைக்கப்படும் கன்னட இசை குழுவின் நிர்வாகியான வாதி, தான் பார்த்த அந்த கிராமப்பள்ளியை சீர் அமைக்க வளைகுடா பகுதியை சேர்ந்த கன்னடர்களை ஒருங்கிணைத்து "ராகா" வழி ஒரு கலை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார். பி.வி.ஜகதீஷ் போன்ற தயாள மனம் படைத்தவர்களின் உதவியோடு, 2003-ல் OSAAT (One School At A Time) திட்டம் உருவெடுத்து வளர்ந்தது அப்படித்தான்.

இன்று பஜேகோலி பகுதியில் 500 குழந்தைகளுடன் கம்பீரமாக நிற்கிறது OSAAT-ன் பராமரிப்பில் வளர்ந்த முதல் பள்ளி. மற்றும் பல தன்னலமற்ற தொண்டர் களின் சேவையால், இந்திய கிராமப் புறங்களில் மேம்பாட்டிற்காக காத்திருக்கும் பல பள்ளிகளின் உண்மை நிலையை கண்டறிந்து வருகிறது, OSAAT.
பெங்களூரின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பன்னீர்கட்டா (Banneerghatta) பகுதியில் உள்ள ஒரு பள்ளியை சீரமைப்பதில் இப்பொழுது OSAAT ஈடுப்பட்டுள்ளது. மார்ச் 1, 2007 அன்று அதன் முதல் கட்ட பராமரிப்பு பணிகள் நிறைவடைந்திடும். OSAAT-ன் தலைவர் திரு. பி.வி. ஜகதீஷ், "பிப்ரவரி மாதம் வளைகுடா பகுதியில் இந்திய பாரம்பரியத்தை வலியுறுத்தும் ஒரு மிகப் பெரிய கலை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள போகும் கலைஞர்கள் அனைவருமே OSAAT-க்காக தங்களால் இயன்ற உதவியை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர்", என்கிறார்.

பிப்ரவரி 10, 2007 அன்று 32 நடனக் குழுக்களை சேர்ந்த 185-ற்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்குப் பெறும் போட்டி ஸான் ஓசேயில் உள்ள C.E.T அரங்கில் நடைப்பெற உள்ளது. பிப்ரவரி 11, 2007 அன்று 29 இசைக்குழுக்களை சேர்ந்த 130-ற்கும் மேற்பட்ட இசைகலைஞர்கள் பங்குப்பெறும் இசைப்போட்டி, ஸன்னிவேல் கோவில் அரங்கில் (Sunnyvale Temple Auditorium) நடைப்பெறும்.

இந் நிகழ்ச்சியை பற்றிய மேலும் விவரங்களுக்கு மங்களா குமாரை 408.392. 0428 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்புக் கொள்ளவும், அல்லது mangalakumar@gmail.com என்ற இணைய முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும். www.osaat.org என்ற இணைய தளத்திலும் விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மங்களா குமார்
தமிழ் வடிவம்: நளினி சம்பத்குமார்
More

கலாட்டா-2007
Share: 




© Copyright 2020 Tamilonline