அல்வா பலவிதம் ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பலாச்சுளை அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா
|
|
மாம்பழ அல்வா |
|
- |பிப்ரவரி 2003| |
|
|
|
தேவையான பொருட்கள்
இனிப்பான மாம்பழ விழுது - 2 கோப்பை சர்க்கரை - 1 கோப்பை முந்திரிப்பருப்பு - 25 கிராம் நெய் - 1 கோப்பை ஏலக்காய் - 5 |
|
செய்முறை
வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரிப் பருப்பை ஒடித்துப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 அல்லது மூன்று ஸ்பூன் நெய் விட்டு, அதிலேயே மாம்பழ விழுதைக் கொட்டி கால் கிண்ணம் தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
மாம்பழ விழுது கொதி வந்தவுடன், தீயைக் குறைத்து விட்டு சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும்.
நன்றாக சுருண்டு வரும் போது நெய்யை விட்டுக் கிளறி, வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை கிளறி விடவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, நனறாக சுருண்டு வந்த மாம்பழ அல்வாவைக் கொட்டி சமப்படுத்தி விட்டுத் துண்டுகள் போட்டு வைக்ககவும்.
கொஞ்சம் ஆறியவுடன் எடுத்துச் சுவைத்துப் பாருங்கள். ஆனந்தமாய் இருக்கும் அதன் சுவையை உணர்வீர்கள். |
|
|
More
அல்வா பலவிதம் ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பலாச்சுளை அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா
|
|
|
|
|
|
|