அல்வா பலவிதம் ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா மாம்பழ அல்வா
|
|
பலாச்சுளை அல்வா |
|
- |பிப்ரவரி 2003| |
|
|
|
தேவையான பொருட்கள்
பலாச்சுளைகள் - 400 கிராம் (விதை நீக்கியது) வெல்லம் - 500 கிராம் நெய் - 50 கிராம் முந்திரிப்பருப்பு - 25 கிராம் கிஸ்மிஸ் பழம் - 10 கிராம் ஏலக்காய் - 5 |
|
செய்முறை
பலாச்சுளைகளைச் சின்னஞ்சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
பலாச்சுளைகள் நன்றாக வெந்ததும், மத்தால் அதை வெண்ணெய் போல் மசித்துக் கொள்ள வேண்டும்.
மசிந்ததும், வெல்லத்தை உடைத்தும் மசித்த பலாச்சுளையுடன் போட்டுக் கிளற வேண்டும். அடி பிடிக்காமல் இருப்பதற்கு நெய்யை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
வெல்லம் நன்றாகக் கரைந்து, பலாச்சுளையுடன் கலந்து கூழ் போல் ஆனதும் கீழே இறக்கி வைத்துக் கொண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், ஏலக்காய்ப் பொடி இவற்றையும் அதில் போட்டுக் கலந்து, சூடு ஆறியதும் சாப்பிடலாம்.
பாதாம் அல்வா போல் மிகவும் சுவையாக இருக்கும்.கை படாமல் கரண்டியால் எடுத்து உபயோகிக்க வேண்டும். |
|
|
More
அல்வா பலவிதம் ஆப்பிள் அல்வா தேங்காய் அல்வா ஜவ்வரிசி அல்வா உருளைக்கிழங்கு அல்வா நேந்திரம் பழ அல்வா உளுந்தம் பருப்பு அல்வா பாதாம் அல்வா மைதா அல்வா காரட் அல்வா மாம்பழ அல்வா
|
|
|
|
|
|
|