|
பிப்ரவரி 2007: வாசகர் கடிதம் |
|
- |பிப்ரவரி 2007| |
|
|
|
நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நான் தற்போது என் மகள் வீட்டிற்கு வந்துள்ளேன். தங்களின் 'தென்றல்' பத்திரிகையைப் படித்தேன். மிகவும் களிப்புற்றேன். தமிழ் எழுத்தாளர்களையும், அவர் தம் படைப்புகளையும் பாராட்டுவது கண்டு மிகவும் மகிழ்வடைகிறேன்.
சாந்தினி பரமேஸ்வரன், பிரிமாண்ட், கலி.
டிசம்பர் மாத தென்றல் படித்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. இத்தனை அழகாக தயாரிக்கப்படும் இதழ் இலவசமாக கிடைப்பது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது. டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற Dr.சுவாமிநாதனின் சிறுகதை நானா என்னை மிகவும் கவர்ந்தது. அமெரிக்காவில் வாழும் இந்தியரின் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகள் இதயத்தைத் தொட்டன. சாதனை புரிந்த இந்தியர்களைப் பற்றி எழுதுவது பாராட்டுக்குரியது.
க. ராஜகோபாலன் |
|
தங்கள் ஜனவரி 07 இதழில் 'அரசியல் களம்' என்கிற தலைப்பை படித்தேன். உயர்திரு பைரோன்சிங் ஷெகாவத் குடியரசு தலைவரா அல்லது குடியரசு துணைத்தலைவரா என புரியவில்லை.
மற்றபடி பெரியார் சிலை உடைப்பைப் பற்றி சற்று விபரமாகவே எழுதியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் பல பெரும் திருக்கோயில்கள் உள்ளன. வசதிகள் இல்லாத காலத்தில் எவ்வளவோ கஷ்டப்பட்டு கட்டின கோயில்கள். கட்டுவது மிக சிரமம். அதை இடிப்பது மிக சுலபம்.
தற்பொழுது ஒரு சிலை வைப்பது ஒரு பெரிய சாதனையாக காணப்படுகிறது. சிலைகள் மலைகளாக குவிக்கப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைய பாடுபட்ட காந்தி, படேல், ராஜேந்திர பிரசாத், மெளலானா அபுல்கலாம் ஆசாத் போன்றவர்களுக்கு வைக்க வேண்டிய சிலைகள் வைக்கப்படவில்லை. தங்கள் ஆயுள்பூராவும் தேசத்திற்கு அர்ப்பணித்தவர்களுக்கு சிலை கிடையாது. நியாயம் எப்படி?
அட்லாண்டா ராஜன், அட்லாண்டா.
ஜனவரி 2007 இதழில் ஜீவசுந்தரி எழுதிய முன்னோடி மூவலூர் ராமாமிருதம் அம்மையார் கட்டுரை படித்தேன். அம்மையார் சமூக மாற்றத்துக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளை கடுமையான முயற்சி எடுத்துகூறியிருக்கிறார் கட்டுரையாளர். சமூக நற்பணி செய்ய விழைவோருக்கு இந்த மாதிரி கட்டுரை நல்ல புத்துணர்ச்சியை அளிக்கும்.
ராமமூர்த்தி, சன்னிவேல், கலி. |
|
|
|
|
|
|
|