Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பாரதி கலாலயாவின் சென்ற மாதச் சிறப்பு நிகழ்ச்சி
தியாகராஜ ஆராதனை விழா
கண்மணியே - பார்வை ஒன்றே போதுமே!
- |மார்ச் 2003|
Share:
Click Here Enlargeதீட்சிதர், அம்ருதவர்ஷானி ராகம் பாட மழை பொழிந்ததாம்; டான்சென், தீபக் ராகம் பாட தீபம் எரிந்ததாம். அதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் இன்று தில்லானா குழுவினரின் கீதம் கேட்டு, பார்வையில்லாத இந்தியர்களுக்குப் பார்வை கிடைக்கப் போகிறது. இதை நீங்கள் பார்க்கலாம். இதற்கு நீங்களும் உதவலாம். ஏப்ரல் மாதம் 27ஆம் நாள், வளைகுடா பகுதியில் (Sankara Eye Foundation) தொண்டு நிறுவனத்திற்காக, ''கண்மணியே'' என்ற பிரம்மாண்டமான தமிழ் மெல்லிசைக் கச்சேரியை 'தில்லானா' (www.thillana.net) அரங்கேற்ற உள்ளது.

தில்லானாவின் இசைப் பயணம் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரெட் உட் சிட்டியிலுள்ள Community centerன் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் எளிமையாகத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை, தில்லானாவின் இசைப் பயணம் பாரட்டத்தகும் வகையில் வெற்றிவிழாக்களைக் கண்டு வருகிறது. இவர்கள் இசையோடு மேடை ஏறிய ஒவ்வொரு மாலையிலும், இந்தப் பகுதி தமிழர்களுக்கு இன்ப இசை இரவு கிடைப்பதோடு, இந்தியாவில் ஆதரவு தேடிக் காத்திருக்கும் ஏழைகளின் வாழ்வில் விடியல் உண்டாகியிருக்கிறது.

நம் குஜராத் சகோதரர்கள், இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட பூகம்பத்தினால், உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவிக்கும்போது, அங்கே அவர்களின் கண்ணீர் துடைக்க இங்கே இவர்கள் கானம் பாடினார்கள். அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும், ஆயிரக்கணக்கில் கோயில் கட்டுவதைக் காட்டிலும் ஒரு ஏழைக்குக் கல்வி புகட்டுவதே மேல் என்ற நம் முன்னோர்களின் கூற்றுப்படி, உன்னதத் தொண்டு ஆற்றி வரும் Asha (www.ashanet.org) உடன் கைகோர்த்து இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி, ஐந்தரை லட்சம் ரூபாய் சேர்த்து நம் இந்தியச் சிறுவர்களின் அறிவுக்கண் திறக்க உதவி செய்தனர்.

ஆதரவற்ற மக்களுக்கு அடைக்கலம் தந்து வாழ்வளிக்கும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வரும் உதவும் கரங்கள் (http://www.udavumkarangal.org) நிறுவனத்திற்காக, வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தோடு இணைந்து இவர்கள் வழங்கிய இசை விழாவின் விளைவு, யாரோ செய்த பாவத்திற்காக எய்ட்ஸ் என்னும் கொடூர அரக்கனிடம் சிக்கித் தவிக்கும் எழுபது குழந்தைகளைப் பாதுகாக்க ஒரு கட்டிடம், தில்லானாவின் பெயர் தாங்கி, அங்கே உயர்ந்து நிற்கிறது. தில்லானா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ''வாராயோ வசந்தமே'' நிகழ்ச்சியில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தியது. AID (
தில்லானா குழுவினர் தங்கள் நிகழ்ச்சியைப் பற்றி கூறியவை:

இசை மேல் எங்களுக்குக் காதலுண்டு, அதன் மூலம் தொண்டு செய்யும் எண்ணமுண்டு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக எங்களைக் காண வரும் ரசிகர்களின் விருப்பத்தின் மேல் எங்களுக்கு மிகப்பெரிய கவனம் உண்டு. மேடை ஏறி சினிமாப் பாடல்களை மட்டும் பாடி விட்டுச் சென்றுவிடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளினால் உண்டாகும் செல்வம், தொண்டுநிறுவனங்களுக்குச் சென்றாலும் எங்கள் நிகழ்ச்சிக்குக் குடும்பத்துடன் வரும் தமிழன்பர்கள் அதை ஒரு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சியாகவும் கருதியே வருகிறார்கள். ஆகவே அவர்களது மகிழ்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியம். அதன் பொருட்டு எங்களது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் செலவிடும் நேரமும், எடுக்கும் முயற்சியும் எதிர்கொள்ளும் சிரமங்களும் ஏராளம். அதையெல்லாம் நாங்கள் மேடை ஏற்றியவுடன் ரசிகர்களிடம் கிடைக்கும் பாராட்டுகளில் மறந்து போகிறோம்.

தில்லானாவின் மேற்கூரிய வார்த்தைகள் அத்தனையும் உண்மை என்பதைக் கடந்த நிகழ்ச்சியைக் கண்டவர்கள் அனைவரும் வழிமொழிகிறார்கள். இந்தக் குழுவின் மிகப் பெரிய பலம், திறன் மிகுந்த பாடகர்களும், இசையறிவு மிக்க வாத்தியக் கலைஞர்களும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. திரை இசை நிகழ்ச்சியில், வசந்தத்தை வரவேற்று முகுந்தன், தானே இயற்றிப் பாடிய பாடல், இந்தக் குழுவின் திறமையை பறைசாற்றியது. சினிமாவில் மட்டுமா பாட்டோடு ஆடுகிறார்கள். நாங்கள் கூட ஆடுவோம் என்று பின்னே பாடகர்கள் பாட, முன்னே கலர் கலராய் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்தனர் சம்பத் மற்றும் பிரவீன் குழுவினர். தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியை கலகலப்பூட்டப் படும கஷ்டங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் அலெக்ஸின் நகைச்சுவை நாடகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல், அத்தனை ரசிகர்ளையும் சிரிக்க வைத்து அரங்கையே அதிர வைத்தது. நிகழ்ச்சியின் தலைப்புக்கேற்ப பத்மா, ஷ்யாமளா குழுவினரின் மேடை அலங்காரம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

தில்லானா போனமுறை ஒரு கலக்குக் கலக்கி விட்டது. இந்த முறை எப்படியெல்லாம் இருக்கும் என்று கேள்விகளும் ஆர்வக்கணைகளும் நியை எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதுதான் உண்மை. ஆனால், தில்லானா இந்த வருடமும் நம்மை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தும் என்று நிச்சயமாய் நம்பலாம் .

ஆர்வமிகுதியில் ஏப்ர் 27 ஆம் தேதி chabot college ல் நடக்க இருக்கும் ''கண்மணிணே'' நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்என்ற§ன். எங்களுக்கு வாக்கியத்தில் சொல்லிப் பழக்கமில்லை, வாத்தியத்தில் சொல்லித்தான் பழக்கம். நிகழ்ச்சிக்கு நேரில் வாருங்கள் என்றனர். ஏப்ரல் 27க்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். Go Thillana!
More

பாரதி கலாலயாவின் சென்ற மாதச் சிறப்பு நிகழ்ச்சி
தியாகராஜ ஆராதனை விழா
Share: 




© Copyright 2020 Tamilonline