நான் மனித ஜீவி மறுபக்கம் ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா பெண்ணெனும் பூமிதனில்.... கீதாபென்னெட் பக்கம்
|
|
|
என்ன அப்பு கொஞ்சம் சோகமா வர்ற. அதான் கலிபோர்னியா கவர்னர் நிறைய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப் போறதா சொல்லிட்டாரே. நம்ம எக்கானமி எல்லாம், பயங்கரமா முன்னுக்கு வரப்போது பாரேன்.
அதில்ல பட்டு, ரெண்டு நாளா ஒரே ஜலதோஷம், இருமல்னு கடுப்படிக்கிறது. நல்லதா எதாவது antibiotics மாத்திரை இருந்தா கொடேன்.
"அப்பு, நான் சொல்றத கொஞ்சம் கேளேன்."
"என்ன சொல்லப்போறே!. வழக்கமா எல்லாரும் சொல்லறதத்தானே. "Treated cold lasts for 7 days. Un-treated cold lasts for a week". எனக்கு ஏதாவது மருந்து சாப்பிட்டாத்தான் சரியாகும் பட்டு.
தோ பார் அப்பு, சளி, ஜலதோஷம் எல்லாம் ஏதோ virus னால வருதாம், அதனால, bacteria வைக் கொல்ற சக்திவாய்ந்த எந்த மாத்திரையும் சாப்பிடறது, தேவையில்லாதது, ஆபத்தானது''ன்னு இப்பத்தான் ஒரு புத்தகத்துல படிச்சேன்
அப்படியா பட்டு, சரி. கொஞ்சம் உப்பு தண்ணியாவது குடு. கொஞ்சம் வாய் கொப்பளிச்சா, தொண்டை கரகரப்பாவது போகும். அப்புறம் இருக்கவே இருக்கு, cough syrup, ரெண்டு நாளைக்கு அதைச் சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். வழக்கமா ரெண்டு நாளைக்கு ஒரு தரம் போடற குளியலுக்கும் 'கட்' அடிச்சடறேன்.
சரி, நீ ஆபிஸ் போறீயா, இல்லையா அப்பு.?
போறேனே, இப்ப quarter-end சமயம். கண்டிப்பா போயே ஆகணும். ஆமா, எதுக்கு கேக்கற பட்டு?
இல்ல "oregon state" ல, ரோட்டுல குப்ப போடறவங்கள மட்டும் இல்லாம, அழுக்கா, குளிக்காமப் போய் மற்றவங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்தாலும் fine உண்டு என்று புதுசா சட்டம் கொண்டுவந்திருக்காங்களாம். அந்தச் சட்டம் கலிபோர்னியாவுக்கு வருவதற்குள்ளேயாவது, குளிச்சிட்டு போ.
சரி பட்டு, சரியான அட்வைஸ் அம்புஜமா மாறிட்டே. அது கிடக்கட்டும் விடு. பேப்பர்ல சுவாரசியமான செய்தி ஒண்ணு படிச்சேன். கேக்கறியா.
சொல்லு அப்பு.
இந்த ஊரு பள்ளிக்கூடத்தில எல்லாம், 'show and tell' அப்படின்னு குழந்தைகளோட கற்பனை, மற்றும் பேச்சுத்திறமையை வளர்க்க வாரம் தவறாம ஒரு நிகழ்ச்சி நடத்துவாங்க. அதாவது, குழந்தைகள் அவங்க வீட்டிலிருந்து ஏதாவது ஒரு விளையாட்டு சாமானையோ, அல்லது ஒரு பொருளையோ கொண்டு வந்து, அதைப் பற்றி மற்ற மாணவ மாணவிகளிடம் சொல்லி விளக்கவேண்டும்.
சரி. அதுக்கு என்ன இப்போ?.
ஆறு வயசு பையன் ஒருவன், தன் அப்பா புகைக்கிற marijuana வையும் (போதைப் பொருள் - கொஞ்சம் மருத்துவ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுவதும் கூட) அதைப்புகைக்க உதவும் பைப் பையும் கொண்டு வர, ஆசிரியர்கள் அதிர்ச்சிக் குள்ளாக...
அப்புறம்!??
அப்புறம் என்ன, அப்பா ஜெயிலில். சும்மாவா சொன்னாங்க பசங்க எதிரே எதையும் செய்யாதீங்கன்னு. எப்படி நம்ம அட்வைஸ். |
|
அப்பு, சரி, நான் இப்போ costco கடை வரைக்கும் போய் வரப்போகிறேன். நீயும் கூட வரீயா. பேசிக்கிட்டே போகலாம். அப்படியே, இந்த organic food கடைக்கும் போய் பால், பழம், காயெல்லாம் வாங்கி வரலாம்.
கண்டிப்பா வருகிறேன். எனக்கும் ரொம்ப நாளாகவே உன்கிட்ட "organic" சாமான்களைப்பற்றிக் கேட்கவேண்டும் என்று ஆசை. நீயே ஆரம்பிச்சு வச்சிட்ட. நிஜமாகவே இந்த சரக்கு எல்லாம், உடம்புக்கு நல்லதா?. ஏன் கேக்கறேன்னா, காசு நிறைய கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. உண்மையிலேயே, சத்துள்ளதுன்னா காசைப்பற்றிக் கவலைப்படவேண்டாமில்ல. என்ன சொல்ற பட்டு?
இது ஒரு பெரிய புராணம். இப்போதைக்கு சுருக்கமாச் சொல்றேனே. பொதுவா பழம், காய்கறி, பால், இவைகளெல்லாம் 'organic' முறையில் உருவாக்கப்பட சில விதிமுறைகளை USDA (United States Department of Agriculture) விதித்திருக்கிறதாம். அதாவது harmones, antibiotics, பூச்சி கொல்லி மற்றும் செயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட உரங்கள் எதனையுமே பயன் படுத்தாமல் பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்திருக்க வேண்டுமாம். மேலும் பால் சுரக்கும் மாடுகளுக்கும், மாட்டின் இறைச்சிக்கும், மாடுகள் 'organic' முறையில் வளர்க்கப்பட்ட சூழ்லையில், அது சாப்பிடும் புல், புண்ணாக்கு முதலியனவையும் இயற்கையாக உருவாக்கப்பட்டால் மட்டும்தான் இந்த 'USDA - ORGANIC' label உணவுப்பண்டங்களில் போடுமாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அடேங்கப்பா, இதுல இவ்ளோ விஷயம் இருக்கா, பட்டு.
ஆமாம், அதாவது விளைவிக்கப்படும் பயிர்களிலும், காய்கறிகளிலும் அவைகளை வளர்க்க செயற்கை உரங்கள் மற்றும், பூச்சிக் கொல்லி போன்றவற்றை உபயோகப்படுத்தியிருந்தாலும், அவைகளினால் ஏற்படும் கெடுதலின் தன்மை இன்னும் சரிவர நிரூபணம் செய்யப்படவில்லையாம். அதே சமயம், 'organic' என்று சொல்லப்படும் பொருள்களை உபயோகிப்பதன் மூலம் உண்டாகும்
நன்மைகளும் சரிவர தீர்மானிக்கும் அளவுகோல்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென்றுதான் சொல்கிறார்கள்.
அது சரி பட்டு, அப்ப எதுக்கு எல்லாரும் இப்படி வரிஞ்சுகட்டிண்டு படையெடுக்கறாங்கன்னு சொல்லேன்.
எல்லாம் பண்டங்களின் "ருசி" தான் அப்பு. அதாவது நல்ல முறையிலயும், இயற்கையான சூழ்லையில வளர்க்கப்பட்ட தக்காளி லேருந்து, பீன்சு வரைக்கும் காய்கறியோட சுவை கெடுவதில்லையாம். மேலும் அவைகள் சரியான நேரத்தில பறிக்கப்பட்டவைகளாக இருப்பதாலும் சுவை சற்று கூடுதலாகக் கூட இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
"நீ என்ன சொல்ற, பட்டு".
"எது எப்படியிருந்தாலும் மாமிச உணவுகளைத் தவிர்த்து, பச்சைக்காய்கறிகளையும், பழங்களையும் அது organic ஆக இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி, அதாவது "balanced nutrition" முறையில சாப்பிட்டு வந்தாலே உடம்புக்கு நல்லதுன்னு தீர்மானம் வச்சிருக்கேன்." மற்ற தகவல்களையெல்லாம் அப்புறமா சொல்றேன். கடை வந்திடுத்து பாரு, இறங்கணும்.
சரி, பட்டு.
ஸ்ரீகோண்டு |
|
|
More
நான் மனித ஜீவி மறுபக்கம் ருக்மிணிதேவி அருண்டேல் நூற்றாண்டு விழா பெண்ணெனும் பூமிதனில்.... கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|
|