குழம்பு வகைகள் அரைப்புளிக் குழம்பு நாரத்தங்காய் குழம்பு கடுகு குழம்பு பருப்பு உருண்டை குழம்பு
|
|
|
தேவையான பொருட்கள்
புளி - எழுமிச்சை அளவு மிளகாய் - 4 துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி தனியா - 1 தேக்கரண்டி கசகசா - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் - 2 கிராம்பு - 2 பட்டை - சிறிது வெங்காயம் - 2 வெந்தயம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 2 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு உப்பு - சிறிதளவு நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி |
|
செய்முறை
புளி எலுமிச்சை அளவு எடுத்துக் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் நறுக்கி வதக்கி வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு, அது நன்றாக காய்ந்ததும் துவரம் பருப்பு, தனியா, மிளகாய், ஏலக்காய், கிராம்பு பட்டை, தேங்காய், கசகசா எல்லாவற்றையும் பொன்னிறமாக
வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகியவற்றை வெடிக்கவிட்டு புளியை விட்டு உப்புப் போட்டு வெங்காயமும் போட்டு கொதிக்க விடவும். புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள
மசாலாவை போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வைக்கவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
குழம்பு வகைகள் அரைப்புளிக் குழம்பு நாரத்தங்காய் குழம்பு கடுகு குழம்பு பருப்பு உருண்டை குழம்பு
|
|
|
|
|
|
|