குழம்பு வகைகள் அரைப்புளிக் குழம்பு கடுகு குழம்பு மசாலா குழம்பு பருப்பு உருண்டை குழம்பு
|
|
|
தேவையான பொருட்கள்
புளி - 1 எலுமிச்சை அளவு நாரத்தாங்காய் - 1 பச்சை மிளகாய் - 4 வெல்லம் - ஒரு சிறு பந்து அளவு வெந்தயம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப அரிசி மாவு - கொஞ்சம் |
|
செய்முறை
நாரத்தங்காயை விதையை நீக்கி பொடியாய் நறுக்கிப் கொள்ளவும். உப்பு போட்டு வைக்கவும். உப்பு இல்லாவிட்டால் நார்த்தங்காய் கசந்துவிடும்.
புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து நாரத்தங்காய் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள் உப்பும் போட்டு நன்றாக வதக்கி, பிறகு புளித் தண்ணீர் விட்டுக் கொதிக்கும் போது வெல்லம் போடவும்.
நார்த்தங்காய் வெந்ததும் வெந்தயப் பொடி போட்டு அரிசி மாவு கரைத்து ஊற்றி கெட்டியானதும் இறக்கி விடவும்.
இதே போல் கமலா ஆரஞ்ச தோலிலும் செய்யலாம்.
பித்தத்திற்கு மிகவும் நல்லது.
தங்கம் ராமசாமி |
|
|
More
குழம்பு வகைகள் அரைப்புளிக் குழம்பு கடுகு குழம்பு மசாலா குழம்பு பருப்பு உருண்டை குழம்பு
|
|
|
|
|
|
|