புதிய தலைமைச்செயலகம் அதிரடி சட்டங்கள்: தமிழகம் முதலிடம் பளிங்குக் கல்லில் ராஜீவ்காந்தி
|
|
'பொடா' சீர்திருத்தம் |
|
- கேடிஸ்ரீ|நவம்பர் 2003| |
|
|
|
பல மாநிலங்கள் பொடாவை தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு பொடா சட்டத்தைத் திருத்த அவசர சட்டம் ஒன்றை பிரகடனப்படுத்தியது.
தமிழகத்தில் வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக கட்சி இடம் பெற்றிருந்தும் அக்கட்சியின் தலைவர் வைகோ 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்துக் குரல் கொடுத்தும் பயனில்லை.
பொடா சட்டத்தில் கைது செய்யப்படுவோரின் தனிப்பட்ட புகார்க¨ளை விசாரிக்க கடந்த ஏப்ரல் மாதம் நீதிபதி ஏ.பி. சக்காரியா தலைமையில் பொடா மறுஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. குழு அளிக்கும் அறிக்கை பரிந்துரை அடிப்படையில்கிருந்தது. அதை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வழி செய்ய மத்திய அரசு அக்டோபர் 21ம் தேதி அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படிபொடா மறு ஆய்வுக்குழு அளிக்கும் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளையும் விசாரணை நடத்தும் காவல்துறை அதிகாரிகளையும் கட்டுப்படுத்தும். |
|
ஆனால் இச்சட்டத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்துள்ளார். இச்சட்டத்தினால் தீவிரவாத மற்றும் பிரிவினைவத சக்திகளை ஒடுக்குவதற்காக மாநில அரசுகள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் பெரும் பின்னடைவு ஏற்படும் என்கிறார்.
ஆனால் மத்திய சட்டஅமைச்சர் அருண்ஜேட்லி இக்கருத்தை மறுத்துள்ளார். பொடா துஷ்பிரயோகத்தைத்தான் அவசர சட்டம் தடுக்கிறது என்கிறார்.
வைகோ, நக்கீரன் கோபால் போன்றவர்கள் அவசரச்சட்டத்தினால் பலன் பெறுவார்களா?
கேடிஸ்ரீ |
|
|
More
புதிய தலைமைச்செயலகம் அதிரடி சட்டங்கள்: தமிழகம் முதலிடம் பளிங்குக் கல்லில் ராஜீவ்காந்தி
|
|
|
|
|
|
|