Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
நந்தலாலா மிஷனின் நாட்டிய நிகழ்ச்சி
கர்நாடக இசைப் பயிலரங்கம்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
சென்னையில் கிளாசிக் குரூப்பின் குடியிருப்புத் திட்டங்கள்
- |டிசம்பர் 2003|
Share:
Click Here Enlargeசென்னை அடையாரிலிருந்து 12 கிமி தொலைவில் I.T. ஹைவே என்று அழைக்கப்படும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியான சோழிங்கநல்லூர். தற்போது இங்குள்ள 4 வழிப்பாதை, 6 வழிப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. சோழிங்கநல்லூரிலும் அதைச் சுற்றிலும் 5 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 500 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை கொண்ட காஞ்சி காமகோடி சங்கரா மெடிக்கல் பவுண்டேஷனும் இங்கு அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இந்த ஹைவேயில் இண்டர்நேஷனல் டெக்னாலஜி மற்றும் பயோ டெக்னாலஜிக்காக இரு தொழிலகப் பூங்காங்களை உருவாக்க உள்ளது. மேலும் சோழிங்கநல்லூரின் அருகில் நிர்வாக நகரம் (அட்மினிஸ்டிரேடிவ் சிட்டி) உருவாக்க உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ள தால் இங்கு குடியிருப்பு மற்றும் வீட்டுவசதிகளுக்கான தேவைகளும் அதிகரிக்கும்.

வாஸ்துவிற்கு ஏற்ப வடக்கு மேற்கு திசையில் மலைகளையும், தென்கிழக்குத் திசையில் நீரையும் (வங்காள விரிகுடா) கொண்டிருந்த சோழிங்கநல்லூர் ரியல் எஸ்டேட் பிரமோட்டர்களான கிளாசிக் குரூப்பின் பார்வையில் 1992ல் தென்பட்டது. பின்பு அகலமான பாதைகள் அமைக்கப் பட்டு 25,000 மரங்கள் நடப்பட்டன. மற்ற வசதிகளான தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, கேபிள், செக்யூரிடி ஆகியவையும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு அதிக மதிப்புக் கிடைக்கும். குடிநீர் வசதிக்காக இங்குள்ள ஏரியில் வண்டல் மண்ணை நீக்கி, கரையை வலுவாக்கி, ஆழமாக்கப்படுகிறது. இதில் 50 கோடி லிட்டர்கள் தண்ணீர் சேகரித்து சோழிங்க நல்லூரில் நீரின் அளவு அதிகரிக்கப்படுமாம். தற்போது பூமிக்கு அடியில் குடிதண்ணீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் குழாய்க்கான வேலை நடைபெறுகிறது.

வியாபாரத்தில் மட்டுமின்றிச் சமூக சேவையிலும் ஈடுபட்டுள்ள கிளாசிக், மக்களின் அடிப்படைத் தேவைகளையும், ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. தன் சொந்த இடத்தில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் அமைத்து அன்றாடம் பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்துவது அதற்கு எடுத்துக்காட்டு. மேலும் இங்கு கோசாலை, பாடசாலை மற்றும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமைக்கப்படும்.

ஆரோக்கியமான வாழ்வுக்காக ஓசோன் நீச்சல் குளம், ஜிம், பியூட்டி பார்லர், சலூன், படிப்பறை, மல்டி க்வுசீன் ரெஸ்டாரன்ட், பில்லியர்ட்ஸ் ஆகிய நவீன வசதிகளைக் கொண்ட கிளாசிக் கிளப் அமைக்கப் பட்டுள்ளது. இதில் எழுநூறுக்கு மேலான உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பல முன்னணி நிறுவனத்தினரும் உறுப்பினர்களே.

மனையை வாங்கி, கனவு இல்லத்தை அமைக்க விரும்புவோருக்கு கிளாசிக் குரூப்பின் கிளாசிக் ரிட்ரீட் வீட்டு மனைகளை அளிக்கிறது. குடிநீர், மின்சாரம், கேபிள், தொலைபேசி, தெருவிளக்குகள் 24 மணி நேர செக்யூரிடி கொண்ட 400 மனைகளை கடந்த 7 ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. பச்சைப் பசேலென இந்த சூழலில் ஏற்கனவே கட்டப்பட்ட தனிவீடுகளில் மக்கள் குடியேறிவிட்டனர்.

தனி பங்களாக்களில் வசிக்க எண்ணுபவர்களுக்காகவே 'கிளாசிக் கார்டன்ஸ்' உருவாக்கியுள்ளது. 10 ஏக்கர் நிலப்பரப்பில் இங்கு 100 தனி வசதியான வீடுகள் கட்டப்படும். கிளாசிக் ரிட்ரீட்டின் அனைத்து வசதிகளும் இங்கு அமைக்கப்படும். மேலும் தனி குடிநீர் விநியோக நெட்வொர்க் மற்றும் அதிவேக இன்டெர்நெட் ஆகியவை சிறப்பு அம்சங்கள்.

முதல் பகுதியாக இங்கு அமைக்கப்படும் 18 வீடுகளுக்கான வரைபடங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

திறமையான கட்டிடக்கலைஞர்கள் இவ்வீடுகளை மிக அழகாக வடிவமைக்கிறார்கள். மற்ற குடியிருப்புகளுக்கு கிளாசிக் கார்ட்ன்ஸ் ஓர் இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்கும்.

இப்போது உலகத்தரத்திற்கு இணையான வசதிகளுடன் ஓய்வு பெற்றவர்களுக்காகவே பிரத்யோகமாக கிளாசிக் குடும்பத்தை அமைத்துள்ளது. CMDA அங்கீகாரம் பெற்ற கிளாசிக் குடும்பத்தில் தங்க NRI பெற்றோர்கள் விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்காவில் சீனியர் ஹாஸ்பிடாலிடி இன்ஸ்டிட்யூட் சான்றிதழ் பெற்ற ஒரே இந்திய முதியோர் குடியிருப்பு கிளாசிக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. UN, UNESCO, World Bank, American Embassyல் ஓய்வு பெற்ற சென்னையில் வசிக்காத பணியாளர்கள் பலர் கிளாசிக் குடும்பத்தில் வசிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கிளாசிக் குரூப்பின் அனைத்துப் படைப்புகளில் வசிப்பவர்களும், கிளாசிக் கிளப்பின் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
கிளாசிக் குரூப்பின் முன்னணி NGO ஆன ராஜகல்யாணி டிரஸ்ட், சோழிங்கநல்லூரைச் சுற்றிலும் பல மரங்களை நட்டுள்ளது. மேலும் மழை நீர் சேகரிப்பு, வேஸ்ட் மேனேஜ்மென்ட், மருத்துவ முகாம்கள், முதியோர் கல்வி, சமூகநலத் திட்டங்கள், ரோட்டரி இன்டர்நேஷனல், எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் மேலும் பல சமூக அமைப்புகளின் துணையுடன் நடத்தி வருகிறது.

வேத பாடசாலை, தியான மையம், தொடக்கப்பள்ளி, ஆயுர்வேத மருத்துவ மனை, சுடுகாடு, ஷாப்பிங் வசதிகளுடன் கூடிய ரிடையர்மெண்ட் வில்லேஜ் ஆகியவை கிளாசிக் குரூப்பின் வருங்காலத் திட்டங்கள். இவை தற்போதுள்ள வசதிகளுடன் இணைந்து இங்கு முதலீடு செய்பவர்களுக்கு அதிக மதிப்பு கிடைக்கும்.

For More details contact:
Clasic Group
Clasic Farms Road
Off Old Mahabalipuram Road
Sholinganallur
Chennia 600 119
India
Tel: +91 (44) 2450 2244
E-mail: clasic@vsnl.com
Website : www.clasic.com

For local enquires contact:
Mrs. Vidya Nagarajan
Mr. Rajesh Raman
34360 Eucalyptus Terrace,
Fremont CA 94555, U.S.A.
Tel: +1 (510) 574 0438,
Cell: +1 (408) 582 2021
E-mail: vidya_nagarajan@yahoo.com

(குறிப்பு: இதில் கொடுத்துள்ள தகவல்கள் கிளாசிக் நிறுவனத்திடமிருந்து சேகரிக்கப்பட்டவை. வாசகர்கள் முதலீடு செய்யுமுன் விசாரித்துத் தங்களைத் திருப்தி செய்து கொள்ளவும்.)
More

பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
தீஷிதர் ஆராதனை
முத்துநகரில் முதல் தீபாவளித் திருநாள்
நந்தலாலா மிஷனின் நாட்டிய நிகழ்ச்சி
கர்நாடக இசைப் பயிலரங்கம்
எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
சிகாகோவில் நாட்டியத் தாரகை ஷோபனா
சிகாகோ 'நிருத்யாஞ்சலி'யின் ஆண்டுவிழா
லிவர்மோர் கோவிலில் கந்த சஷ்டி விழா
Share: 




© Copyright 2020 Tamilonline