Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
க்ரியாவின் 'மாயா'
'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
- |மார்ச் 2004|
Share:
Click Here Enlargeவட அமெரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய கர்நாடக இசைவிழாவான கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை இந்த ஆண்டு ஏப்ரல் 10 முதல் 18வரை கொண்டாடப்படும். இசைப் போட்டிகள், பயிலரங்கம், கச்சேரி மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளுடன் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பேரா. டி.என். கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், முனைவர் என். ரமணி, ரவிகிரண், சஞ்சய் சுப்பிரமணியம், எஸ். சௌம்யா, பாம்பே ஜயஸ்ரீ ராம்நாத், டி.எம். கிருஷ்ணா, அருணா சாய்ராம் ஆகிய பிரபல கலைஞர்கள் பங்கேற்பர். அமெரிக்காவின் ராகவன் மணியன் மற்றும் சங்கீதா சுவாமிநாதன் ஆகியோரின் கச்சேரிகளும் உண்டு.

1978ஆம் ஆண்டு எளிய நிகழ்ச்சியாக ஒரு சர்ச்சின் நிலவறையில் வி.வி. சுந்தரம் மற்றும் ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தம் குடும்பத்தினருடன் கொண்டாடத் தொடங்கியது இந்நிகழ்ச்சி. இன்று சுமார் இரண்டாயிரம் சுவைஞர்களும் பிரபல வித்வான்களும் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட வைபவமாக உருமாறியுள்ளது.

நிகழ்ச்சி இலவசம். முழுதும் தன்னார்வத் தொண்டர்களின் உதவியுடன் நடத்தப்படும் இவ்விழாவில் இலவசச் சிற்றுண்டியும், உணவும் வழங்கப்படுகின்றன. இவற்றைத் தயாரித்து வழங்குவோரும் தொண்டர்களே.
முழு விவரங்களுக்கு: http://www.aradhana.org

விழா மலரில் விளம்பரம் செய்ய: clevelandbalu@hotmail.com

தொண்டர் பணிபுரிய: அர்விந்த் பாலகிருஷ்ணன் - arvind_bala@yahoo.com

உணவுத் தயாரிப்புப் பகுதியில் பணியாற்ற: கோமதி பாலு - 216 476 1604
More

க்ரியாவின் 'மாயா'
'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை
FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை
'தில்லானா' வழங்கும் மண்வாசம்
Share: 




© Copyright 2020 Tamilonline