க்ரியாவின் 'மாயா' 'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
|
|
'தில்லானா' வழங்கும் மண்வாசம் |
|
- |மார்ச் 2004| |
|
|
|
வேடிக்கை, விழாக்கோலம் என்றால் யாருக்குப் பிடிக்காது? வறுமையே குறையாத செல்வமாகிப் போன ஒரு கிராமம் ஆனாலும்கூட வருடம் ஒருமுறை விமரிசையாக ஊர்த் திருவிழாவை நடத்திப் பார்த்தால்தான் நல்லது நடக்கும் என்பது அங்குள்ளோரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கும். அப்படியிருக்க, தமிழோடு செல்வமும் கொழிக்கும் விரிகுடாப்பகுதி எவ்வாறு விதிவிலக்காகும்? இதோ வந்துவிட்டது தில்லானா, விழாக்கோலம் படைக்க. தில்லானாவின் அடுத்த படைப்பு 'மண்வாசம்'. கமழப்போகும் நாள்: மே 2, 2004.
இத்தகைய விழாக்களால் நான்கு ஆண்டுகளாக விரிகுடாப் பகுதித் தமிழ்ச் சமுதாயத்தின் இதயம் கவர்ந்திருக்கிறது தில்லானா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 'வாராயோ வசந்தமே!' என்று வாய்நிறைய வரவேற்றது. சென்ற ஆண்டு 'கண்மணியே!' மூலம் காட்சிக் கனவுகளை நனவாக்க முனைந்தது. இந்த ஆண்டு... இது 'மண்வாசம்' வீசப்போகும் நேரம்.
மண்வாசத்திற்கு விளக்கம் சொல்லி, கூடவே அடிக்குறிப்பாக “Notes of the Native” என்று விளக்கம் இருக்கிறது. ஆம், விழுதுகள் மீண்டும் வேர்களின் வாசம் நுகரச் செல்கின்றன. நகரங்களை விட மண்வாசத்திற்குக் கிராமத்தில்தானே மவுசு அதிகம். கிராமத்தில் மண்வாசம் என்பது மழையின், வளத்தின், புத்துணர்வின் அறிகுறி!
கேளிக்கை, இசை முழக்கம் இதோடு கூடச் சேவை நிறுவனம் ஒன்றிற்கு நிதி பெருக்குவதும் தில்லனாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. மண்வாசம் நிகழ்ச்சியால் பயனுறப்போகும் சேவை நிறுவனம் விபா (Vibha). |
|
வேடிக்கை, விழாக்கோலம் என்றால் யாருக்குப் பிடிக்காது? வறுமையே குறையாத செல்வமாகிப் போன ஒரு கிராமம் ஆனாலும்கூட வருடம் ஒருமுறை விமரிசையாக ஊர்த் திருவிழாவை நடத்திப் பார்த்தால்தான் நல்லது நடக்கும் என்பது அங்குள்ளோரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கும். அப்படியிருக்க, தமிழோடு செல்வமும் கொழிக்கும் விரிகுடாப்பகுதி எவ்வாறு விதிவிலக்காகும்? இதோ வந்துவிட்டது தில்லானா, விழாக்கோலம் படைக்க. தில்லானாவின் அடுத்த படைப்பு 'மண்வாசம்'. கமழப்போகும் நாள்: மே 2, 2004.
இத்தகைய விழாக்களால் நான்கு ஆண்டுகளாக விரிகுடாப் பகுதித் தமிழ்ச் சமுதாயத்தின் இதயம் கவர்ந்திருக்கிறது தில்லானா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 'வாராயோ வசந்தமே!' என்று வாய்நிறைய வரவேற்றது. சென்ற ஆண்டு 'கண்மணியே!' மூலம் காட்சிக் கனவுகளை நனவாக்க முனைந்தது. இந்த ஆண்டு... இது 'மண்வாசம்' வீசப்போகும் நேரம்.
மண்வாசத்திற்கு விளக்கம் சொல்லி, கூடவே அடிக்குறிப்பாக “Notes of the Native” என்று விளக்கம் இருக்கிறது. ஆம், விழுதுகள் மீண்டும் வேர்களின் வாசம் நுகரச் செல்கின்றன. நகரங்களை விட மண்வாசத்திற்குக் கிராமத்தில்தானே மவுசு அதிகம். கிராமத்தில் மண்வாசம் என்பது மழையின், வளத்தின், புத்துணர்வின் அறிகுறி!
கேளிக்கை, இசை முழக்கம் இதோடு கூடச் சேவை நிறுவனம் ஒன்றிற்கு நிதி பெருக்குவதும் தில்லனாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. மண்வாசம் நிகழ்ச்சியால் பயனுறப்போகும் சேவை நிறுவனம் விபா (Vibha).
விபா என்ன செய்கிறது?
இந்தியாவில் கோடான கோடி குழந்தைகள் வறுமையின் பிடியில் வாழ்வைக் கழிக்கின்றனர். இவர்களுக்குத் தடுப்பு ஊசிகூடப் போட்டிருக்காது. இக்குழந்தைகளின் நிலையை மாற்றுவதற்காக, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்று சேர்ந்து விபாவைத் தொடங்கினர். இந்த இயக்கத்தின் முக்கியமான குறிக்கோள் ஏழ்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் பிறப்பு உரிமையான கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவைகளை அளிப்பததுதான். இந்த இயக்கத்தில் 400க்கும் மேற்பட்டோர் சேவை புரிந்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் 16 கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் விபா, சுமார் 200 திட்டப்பணிகளை நிறைவேற்றி, இதுவரை 1 லட்சம் குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளது. தற்பொழுது இந்தியாவில் 10 திட்டப்பணிகளும், அமெரிக்காவில் இரண்டும் நடந்துவருகின்றன. இதில் தமிழ் நாட்டில் நிறைவேறி வரும் ஒரு திட்டப்பணிதான் 'மக்கள் பள்ளி இயக்கம்'. இத்திட்டப்பணியால் சுமார் 100 கிராமங்கள் பயனடைய இருக்கின்றன. மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இப்பணி, கல்வியை எளிதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றியமைக்க முயல்கிறது.
மேலும் விபரம் அறிய:
விபா: http://www.vibha.org தில்லானா: http://www.thillana.net தகவல்: அலெக்ஸ் பாபு மற்றும் கதிர் |
|
|
More
க்ரியாவின் 'மாயா' 'வாழும் கலை' வழங்கும் உலக அமைதிக்கு இசை FFE-பாரதி கலாலயா வழங்கும் நிகழ்கலைகள் மாலை கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை
|
|
|
|
|
|
|