மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா தமிழர் கலைகளின் 'கூத்து' உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி' ஸ்ரீதேவி ஐயர்! சின்னத்திரை, பெரியதிரை
|
|
விஜயகாந்தின் புதிய கட்சி |
|
- கேடிஸ்ரீ|மார்ச் 2004| |
|
|
|
காவிரிப் பிரச்சனை தொடர்பாக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, ரஜினி முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், நடிகர் விஜயகாந்த் முந்திக் கொண்டுவிட்டார். 2006இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு புதிய கட்சி தொடங்கப் போவதாக வந்துள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.
அதற்கான பூர்வாங்கத்தைத் தொடங்கி விட்டார். முதலில் தனது மன்றத்திற்குத் தனிக்கொடி ஏற்படுத்திய கையோடு கிராமங்கள் தோறும் கிளை அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
திராவிடக் கட்சிகள் பாணியில் பிரம்மாண்ட வரவேற்பு, வருங்கால முதல்வர் என வர்ணனைகள்-- விஜயகாந்த் அரசியலுக்கு ரெடியாகிவிட்டார் என்றே தோன்றுகிறது.
''25 ஆண்டுகள் திரையுலகில் இருந்து விட்டேன். தமிழக மக்களாகிய நீங்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை விரைவில் நிறைவேற்றுவேன்'' என்கிறார் விஜயகாந்த். |
|
கேடிஸ்ரீ |
|
|
More
மணிரத்னத்தின் படத்தில் பாரதிராஜா தமிழர் கலைகளின் 'கூத்து' உலகத் திரைப்பட விழாவில் 'விருமாண்டி' ஸ்ரீதேவி ஐயர்! சின்னத்திரை, பெரியதிரை
|
|
|
|
|
|
|