வாழையோ வாழை! வாழைக்காய்க் கறிவகைகள் பொடி போட்ட வாழைக்காய் காரக்கறி வாழைக்காய்ப் பொடி வாழைக்காய் பொடிமாஸ் வாழைக்காய் எரிசேரி வாழைக்காய் புளிக்கூட்டு வாசகர் கைவண்ணம் - காரடையான் நோன்பு அடைகள் வெல்ல அடை, உப்பு அடை செய்யும் விதங்கள்
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் அல்லது பொடியாக நறுக்கியது - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 வற்றல் மிளகாய் - 2 இஞ்சி - 2 அங்குல நீளம் பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப காராமணி - 1 தேக்கரண்டி தேங்காய்எண்ணெய் - 2 தேக்கரண்டி |
|
செய்முறை
வெல்ல அடைக்குச் செய்ததைப் போல் மாவைத் தயார் செய்யவும். காராமணி யையும் ஊற வைத்து வேக வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பெருங்காயத்தைப் பொரித்து, கடுகு தாளித்து, மிளகாய் வற்றல் வறுத்து, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை வதக்கவும்.
தேங்காய்த் தூளைப் போட்டுக் கலந்து 2 டம்ளர் தண்ணீர் விடவும். உப்பு, வெந்த காராமணி இவற்றைப் போடவும்.
தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்துள்ள மாவை தூவினாற் போல் போட்டு, 5 முதல் 10 நிமிடங்கள் வரை கிளறி, கீழே இறக்கித் தாம்பாளத்தில் ஆற வைக்கவும்.
ஆறியதும் (தேவையானால் தண்ணீர் சேர்த்து) பிசைந்து சிறுசிறு உருண்டை களாக உருட்டி வடை போல் தட்டி நடுவில் ஓட்டை போட்டு இட்டலித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
முக்கியக் குறிப்புகள்
1. வெல்ல அடை, உப்பு அடை இரண்டுக் குமாகச் சேர்த்து கால் கிண்ணம் காராமணி போதுமானது. மொத்தமாக வெந்துகொள்ளலாம்.
2. மாவையும் மொத்தமாக வறுத்து வெல்ல அடை, உப்பு அடை இவற்றில் எது அதிகமாக தேவைப்படுமோ அதற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
3. மாவைக் கிளறி ஆற வைத்துச் சிறியதாக ஒரு அடை தட்டிப் பார்க்கவும். அடை யின் ஓரங்கள் அதாவது விளிம்பு பாகங்கள் விரிந்து போனால் மேலும் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி, கையில் சிறிது தண்ணீரை தடவிக் கொண்டு அடை தட்டவும். கிளறிய மாவு சரியான பதத்தில் இல்லா விட்டால், சாப்பிட மிருதுவாக இல்லாமல் தொண்டையை அடைப்பது போல் இருக்கும்.
4. ஒரு கிண்ணம் அரிசிக்கு 6 முதல் 9 அடைகள் வரை செய்யலாம்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
வாழையோ வாழை! வாழைக்காய்க் கறிவகைகள் பொடி போட்ட வாழைக்காய் காரக்கறி வாழைக்காய்ப் பொடி வாழைக்காய் பொடிமாஸ் வாழைக்காய் எரிசேரி வாழைக்காய் புளிக்கூட்டு வாசகர் கைவண்ணம் - காரடையான் நோன்பு அடைகள் வெல்ல அடை, உப்பு அடை செய்யும் விதங்கள்
|
|
|
|
|
|
|