பிரச்சார களத்தில் ஜெயலலிதா வேட்பாளர் தேர்வில் காங்கிரசில் குழப்பம்! தர்மபுரி யாருக்கு?
|
|
தேர்தல் கமிஷனின் எச்சரிக்கை! |
|
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004| |
|
|
|
தொலைக்காட்சியிலும் வானொலியிலும் தேர்தல் சம்பந்தமான அரசியல் விளம்பரங்களை ஒளி, ஒலிபரப்ப அனுமதிப்பதில்லை என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்திருக்கிறது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்துக்குத் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இம்முடிவைத் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான கால ஆட்ட வணை வெளியிடப்பட்டுவிட்டதால் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித் துள்ளது கட்சிகளிடையே பெரும் கலக்கத் தை ஏற்படுத்தியுள்ளது. |
|
தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள், மனைவி மற்றும் உறவினர்களின் கல்வித் தகுதிகள், கிரிமினல் பின்னணி விவரங்கள் ஆகிய அனைத்து விவரங்களையும் தங்களது வேட்புமனுவுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை வேட்பாளர் தேர்விலும், பத்திரங்களைப் பூர்த்தி செய்வதிலும் கட்சிகள் ரொம்பவும் ஜாக்கிரதையாகச் செயல்படவைத்துள்ளது.
கேடிஸ்ரீ |
|
|
More
பிரச்சார களத்தில் ஜெயலலிதா வேட்பாளர் தேர்வில் காங்கிரசில் குழப்பம்! தர்மபுரி யாருக்கு?
|
|
|
|
|
|
|