பிரச்சார களத்தில் ஜெயலலிதா தர்மபுரி யாருக்கு? தேர்தல் கமிஷனின் எச்சரிக்கை!
|
|
வேட்பாளர் தேர்வில் காங்கிரசில் குழப்பம்! |
|
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004| |
|
|
|
தொண்டர்களைவிடத் தலைவர்கள் அதிகம் நிறைந்த தமிழக காங்கிரஸ் தன் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் மிகவும் குழம்பிருக்கிறது.
ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும்ம் காங்கிரஸ் தனக்கான 10 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்களை அறிவித்தது. மயிலாடு துறையில் மணிசங்கரஐயரும், நீலகரியில் முன்னாள் அமைச்சர் பிரபுவும் வேட்பாள ரென அறிவித்தது. ஆனால் மீதமுள்ள 8 தொகுதிகள் இழுபறி நிலையிலேயே நீடித்து ஒருவழியாக அறிவித்துள்ளது.
400க்கும் மேற்பட்டவர்கள் 10 தொகுதி களுக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் வாசன் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி என்று ஏகப்பட்ட கோஷ்டிகளின் ஆதரவாளர்கள் அடக்கம். கடந்த 20 நாட்களாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் டில்லி தலைமை அலுவலகத் தில் முற்றுகையிட்டுத் தத்தம் ஆதரவாளர் களுக்குச் சீட்டு வாங்க முயற்சி மேற்கொண்டிருந்தனர். |
|
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும்; அல்லது பா.ம.க. விடமிருந்து அத்தொகுதியை தங்களுக்கு மாற்றிகொடுக்க வேண்டும் என்று பாண்டிச்சேரி காங்கிரஸ்காரர்கள் உரத்த குரலில் சத்தம் இட்டும், தீக்குளிப்போம் என்று மிரட்டியும் அவர்களின் கோரிக் கையை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்தது.
பாண்டிசேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமியை அழைத்து சமாதானப் படுத்தி கூட்டணிக்கட்சியின் வெற்றிக்கு பாடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டு மல்லாமல் ராஜ்யசபாவிற்கான வேட்பாளர் தேர்வில் இடம் ஒதுக்குவதாகவும் காங்கிரஸ் தலைமை கூறி, இப்போதைக்குப் பாண்டிச் சேரிப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் உள்கட்சி குழப்பங்கள் நீங்கி கூட்டயின் வெற்றிக்கும், தங்கள் வெற்றிக்கும் உழைப்பார்களா அல்லது தங்களுக்குள் சண்டையிட்டு எதிரணிக்கு வாய்ப்பைப் பரிசாக வழங்குவார்களா?
கேடிஸ்ரீ |
|
|
More
பிரச்சார களத்தில் ஜெயலலிதா தர்மபுரி யாருக்கு? தேர்தல் கமிஷனின் எச்சரிக்கை!
|
|
|
|
|
|
|