Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
திவ்யாவின் நடன அரங்கேற்றம்
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
- |மே 2004|
Share:
Click Here Enlargeஅபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) மார்ச் 18, 2004 அன்று 'சிவன்-பிரபஞ்சத்தின் ஆடலரசன்' (Shiva-the Cosmic Dancer) என்ற கருத்திலான ஒரு நடன நிகழ்ச்சியைத் தனது 74 மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றியது. லூயிஸ் பி. மேயர் அரங்கத்தில் நிரம்பிய காட்சியாக நடந்த இந்த நிகழ்ச்சி 1986இல் மிகுந்த வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியின் மீள் அளிப்பாகும். அபிநயாவின் கலை இயக்குநர் மைதிலி குமார் பயிற்சியளித் திருந்தார். பாபநாசம் சிவன், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரின் பாடல் கள் நிகழ்ச்சியின் தரத்தை மிகவுயர்த்திப் பிடித்தன. ஆஷா ரமேஷ் மற்றும் இசைக் குழுவினர் பின்னணியில் இசைமழை பொழிந்தனர்.

புஷ்பாஞ்சலியோடு தொடங்கி, பஞ்சாக்ஷர ஸ்துதி, நடேச சப்தம், லிங்காஷ்டகம் ஆகியவை சிவ நடனத்தின் சிறப்பைக் கூறின. அடுத்து வந்த 'ஆனந்த தாண்டவம்' சிவபெருமானைப் பிரபஞ்சத்தின் ஆடலரசனாகச் சித்தரித்துப் போற்றியது. நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதி சிவ-சக்தியின் கதையைச் சொன்னது. பின் வந்த அர்த்தநாரீஸ்வர நடனம் ஆண்-பெண் சக்திகளைக் கண்முன் காட்டிற்று. மாளவிகா குமார் தனது தனிநடனத்தில் இறைவனைக் குறித்த சிருங்கார ரசத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார்.
பிரான்சைச் சேர்ந்த டொமினிக் டெலா மேவின் 'சிவ கரணங்கள்' நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். தன் நடனத்துக்கு அவர் மங்கோலியா, இந்தியா மற்றும் இந்தோனேசிய இசையைப் பின்னணியா கத் தேர்ந்தெடுத்திருந்தார் அவர். பின்னர், தக்ஷ¢ணாமூர்த்தியைக் குருவாகத் துதிக்கும் பாடலுக்கு 74 கலைஞர்களும் ஆடிய நடனத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
More

திவ்யாவின் நடன அரங்கேற்றம்
ரைடர் பல்கலைக் கழகத்தில் பாலாதேவி சந்திரசேகரின் நாட்டியம்
மிஷிகன் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறள் விழா
மிஷிகனில் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை
ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் பன்னிரண்டாவது ஆண்டுவிழா
பிரதிதி - இசை, நாட்டியக் கோலாகலம்
Share: 




© Copyright 2020 Tamilonline