தாயே உனக்காக! அக்கரைப் பச்சை கண்முன் நடந்தது ஒரு மருத்துவரின் பார்வையில்
|
|
காதில் விழுந்தது.. |
|
- |மே 2004| |
|
|
|
சுதந்திரம் உலகத்திற்கு அமெரிக்காவின் கொடையல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். சுதந்திரம் உலகத்தின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுளின் கொடை. உலகத்தின் மாபெரும் வல்லரசான நாம் உலகில் சுதந்திரத்தைப் பரப்பக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஜார்ஜ் டபிள்யூ. புஷ்
*****
கடவுள் உங்களை நேசிக்கிறார். நானும் உங்களை நேசிக்கிறேன். தங்கள் எதிர்காலத் தைப் பற்றிக் கவலைப்படுபவர்கள், எங்களிருவர் மேல் பாரத்தைப் போட்டு நிம்மதியாக இருக்கலாம் என்பது ஒரு சக்திவாய்ந்த செய்தி.
ஜார்ஜ் டபிள்யூ. புஷ்
*****
(இராக் போருக்கு) 87 பில்லியன் டாலர் ஒதுக்கீட்டை எதிர்த்து ஓட்டளிப்பதற்கு முன்னால் அதை ஆதரித்து ஓட்டளித்தேன் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஜான் எப். கெர்ரி
*****
" அதிபர் புஷ் தன்னைப் போர்க்கோலம் பூண்ட தேவதூதனாக நினைத்துக் கொள்கிறார்" என்கிறார் அதிபர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் திரு ரால்ப் நேடர். ஜனநாயகக் கட்சியின் ஜான் கெர்ரியோ "புஷ்ஷைப் போலவே இராக்கியப் புதைகுழியில் சிக்கிக் கொண்டவர்". மேலும் நேடர் சொன்னதாவது "இவ்விருவருக்குள் கெர்ரி சற்றுத் தேவலாம், அவரிடம் அமெரிக்கா மெதுவாகத்தான் சிதையும்... ஆனால் அது மட்டும் போதாது."
'நியூயார்க் டைம்ஸ்'
*****
இன மற்றும் மதச் சச்சரவுகளை வைத்து வன்முறையாளர்கள் தூண்டில் போடுகிறார்கள். காஷ்மீரிலிருந்து செசன்யா, பாலஸ்தீனம், இஸ்ரேல் வரை அவர்கள் வெறுப்பைக் கிளரி விட்டு, சமாதானத்தைத் தடுக்கிறார்கள். ஐரோப்பாவில் மாட்ரிட் நகரில் பேரழிவு ஏற்படுத்தினார்கள். பிரான்சை மிரட்டுகிறார்கள். பிரிட்டனில் அவர்கள் சூது ஏதும் பலிக்கவில்லை, இதுவரைக்கும்."
பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர்
*****
பெரும்பான்மை உலகை இணைக்க ஒரு செயல்திட்டம் உள்ளது. ஒரு பக்கம் வன்முறை யைத் தூண்டும் போக்கிரி நாடுகளை விரட்ட வேண்டும், மறுபக்கம் வன்முறைக்கு வித்திடும் காரணங்களுக்கு, பாலஸ்தீனியப் பேச்சு வார்த்தை, வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி, மத்தியக் கிழக்கில் ஜனநாயகம், முக்கிய மதங்களிடையே நல்லிணக்கம் இவற்றால் தீர்வு காணவேண்டும்.
உண்மையிலேயே, நமது பாதுகாப்பு நம் விழுமியங்களில்தான் இருக்கிறது. மக்களின் சுதந்திரம் கூடக்கூட சகிப்புத்தன்மை கூடும். செல்வச் செழிப்பு கூடக்கூட, அதை வீணாக்கும் அர்த்தமற்ற சண்டை, சச்சரவுகளில் நாட்டம் குறையும்.
டோனி பிளேர்
*****
புஷ்ஷ¤க்குக் கொஞ்சம்தான் பேசத்தெரியும்; கெர்ரியோ வளவளவென்று பேசுகிறார். கெர்ரி வாயைத் திறந்தால் சொற்கள் பத்திபத்தியாக வந்து டணால் என்று தரையில் விழும். உண்மையிலே அந்த மனுஷனுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது. தப்பித் தவறிக்கூட புஷ்ஷ¤க்கு நிறையத் தெரியும் என்று குற்றம் சாட்ட முடியாது!"
வாஷிங்டன் போஸ்ட்டில் ரிச்சர்ட் கோன்
*****
ஜமைகாப் பெண்களுக்கு இந்த நாட்டில் ஓரிரண்டு வேலைகள் தாம் கிடைக்கும். ஒன்று வெளிநாட்டு அமைச்சர் (Secretary of State) ஆகலாம். மற்றொன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டு வேலையும் ஒன்றுதான். நாலு வார்த்தை பேசத்தெரியாத, பெரிய இடத்துச் செல்லப் பிள்ளைகள் பின் னாலே ஓடவேண்டும். அவர்கள் தூங்கும்போது அவர்கள் செய்த அசிங்கத்தைச் சுத்தப் படுத்த வேண்டும்.
கிளேடிஸ், ஜமைக்கப் பெண்மணி - மெரில் ஸ்ட்ரீப்பின் "பிரிட்ஜ் அண்ட் டன்னல்" நாடகத்தில்.
*****
இராக்கில் நமது போர் உள்நாட்டுக் கலகத் தைத் தூண்டும், பயங்கரவாதத்தை வளர்க்கும், மத்தியக் கிழக்கை மேலும் நிலைகுலையச் செய்யும். நம் செலவு என்ன, 200 பில்லியன் டாலரா? இராக்கில் 25 மில்லியன் மக்கள் இருக்கின்றனர். இவ்வளவு செலவழித்துப் போர் செய்வதற்குப் பதில் தலைக்கு 8000 டாலரைக் கொடுத்துவிடுவது எவ்வளவோ தேவலாம். அந்தப் பணத்துக்கு அங்கே ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் ஆட்சி மாற்றம் எல்லாம் கிடைத்திருக்கும்.
லூயி பிளாக், LA டைம்ஸ் வாசகர் கடிதத்தில்.
***** |
|
நாளுக்கு நாள் இராக்கில் நிலமை தொடர்ந்து சீரழிவதைப் பார்க்கிறோம்; நாமெல்லாம் விரும்பும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் எட்டிப் போய்க்கொண்டே இருக்கின்றன. என் ஆட்சியில் இந்த அநீதியான, முறைகேடான போரிலிருந்து ஸ்பெயின் விலகும்."
ஜோ லூயி ரோட்ரிகஸ் ஜபாடெரோ, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்பானியப் பிரதமர்.
*****
நாட்டுக்குப் போர்க்கடன் புரிய வேண்டிய நேரத்தில் நழுவிய கார்ல் ரோவ், டிக் செனீ போன்றவர்களை இனிமேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் நாட்டுக்காகப் போர் புரிந்தவன். தேசபக்தி பற்றி அவர்கள் எனக்குப் போதிப்பதா? நாட்டின் போக்கைக் குறித்துக் கேள்விகள் கேட்பது தேசபக்திக்கு எதிரானது என்று அவர்கள் சொல்வதா? ஏனென்றால் நாட்டின் போக்கைப் பற்றித் தட்டிக் கேட்பதுதான் தேசபக்தி.
ஜான் எப். கெர்ரி
*****
எங்கள் கணவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று அறிய விரும்புகிறோம். அவ்வளவுதான். ஒரு நாள் வேலைக்குப் போனவர்கள் ஏன் திரும்பி வரவில்லை?
கிறிஸ்டின் பிரட்வைசர், செப்டம்பர் 11 விதவை, 9/11 கமிஷனைத் தன் வேலையைச் செய்யச் சொல்லி...
*****
சத்தாம் உசைனின் எதிரியும், இஸ்ரேல் வழக் குரைஞர் நிறுவனத்தின் கூட்டாளியுமான சலீம் சலாபியிடம், சத்தாம் உசைன் விசாரணைக்குப் பொறுப்பளித்திருப்பது எப்படி நேர்மையாகும்?
மிஷிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் உவான் கோல்
*****·
போலீஸ் அலுவலர் ஐசாக் எஸ்பினோசாவை AK-47னால் சுட்டுத் தள்ளிய டேவிட் ஹில்லுக்கு மரண தண்டனை கொடுக்கக் கோரக்கூடாது என்பதில் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கு ரைஞர் கமலா ஹாரிஸ் தீர்மானமாய் இருக் கிறார், செனட்டர் டையேன் ·பைன்ஸ்டைன் மற்றும் காவல் துறை முற்றிலும் அவரை வற்புறுத்தியும் கூட.
'சான் பிரான்சிஸ்கோ எக்ஸாமினர்'
*****
கமலா ஹாரிஸின் மேஜையின் ஒருமூலையில் பெரிய பூச்சட்டி நிறைய நறுமணமுள்ள வெள்ளை ரோஜாக்கள், அதில் "தைரியம்!" என்று எழுதிய அட்டை - அவர் அம்மா (சியாமளா ஹாரிஸ்) அனுப்பியது.
"எனக்கு (மரணதண்டனை மீது) நம்பிக்கையில்லை" என்கிறார் ஹாரிஸ்.
இருந்தாலும், தன்னிலை விளக்கம் தர வேண்டிய தேவையை உணர்ந்து மேலும் சொல்கிறார் "இது ஏதோ தேர்தல் வாக் குறுதியைக் காப்பாற்றுவதற்காகச் செய்த அனிச்சைச் செயல் அல்ல. நான் சிந்திக்கத் தெரிந்த மனிதப் பிறவி."
'சான் ஹொசே மெர்க்குரி நியூஸ்' |
|
|
More
தாயே உனக்காக! அக்கரைப் பச்சை கண்முன் நடந்தது ஒரு மருத்துவரின் பார்வையில்
|
|
|
|
|
|
|