|
மே 2004 : குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|மே 2004| |
|
|
|
குறுக்காக
3. தொடக்கத்தில் பார்ப்பதற்குத் தேவையானது (5) 6. இடையரிருவர் இல்லாது கொத்தப்பட்ட மருதநிலம் மொட்டவிழும் (4) 7. திரும்பி வருக, அரைகுறை மூலவர் இருக்குமிடத்திற்குத்தான்! (4) 8. நம்நாடு மிகவும் பெரியதுதான்! அதெல்லாம் பழங்கதை (6) 13. வெளுத்து வாங்குவதற்கான சாட்டை மாலையோ? (6) 14. குறையில்லாச் செவி நீரில் அமிழ்வதில்லை (4) 15. இராணுவ தந்திரத்தில் இருப்பது உண்மையான செய்தியில்லை (4) 16. நல்ல சொம்பு தேய்ந்துபோய் நாவினால் எய்யப்படும் (5)
நெடுக்காக
1. இந்திய எல்லையில் எங்கெங்கும் 'இ' காணப்படும்படி உயர்ந்து நிற்கும் (3,2) 2. மொட்டாக அரிய தரையில் விரிப்பது (5) 4. கடா மேலே செல்ல வெளியே தம் பொய்கை (4) 5. கலிங்கர் வம்சத்திலேயே வந்த திமிர் (4) 9. கைகளால் தொட்டுப் பூசு (3) 10. ஒரு யுகம் கங்கா முடியும்போது இரைச்சல் சூழும் (5) 11. தாயே! விளக்கிலுள்ளது போல்! (5) 12. கண்ணீர்விடு. பாடம் படி. கெட்டுப்போனது (4) 13. இழுத்து முடிய சரம் அணிய நான்குபக்கமும் சமம் (4)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net |
|
விடைகள் குறுக்காக - 3. முதற்கண் 6. மலரும் 7. கருவறை 8. மகாபாரதம் 13. சவுக்காரம் 14. முழுகாது 15. வதந்தி 16. சொல்லம்பு நெடுக்காக - 1. இமயமலை 2. அரும்பாய் 4. தடாகம் 5. கர்வம் 9. தடவு 10. சகாப்தம் 11. அம்மாதிரி 12. அழுகல் 13 சதுரம் |
|
|
|
|
|
|
|