Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தமிழ்ப் புத்தாண்டு விழா மிச்சிகன்
புத்தாண்டு 'கலாட்டா'
மெம்பிஸ்
சிகாகோவில் தமிழ்ப் புத்தாண்டு
கிருத்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகனில் 'இந்தியா பஜார்'
'Love' டி.வி.டி வெளியீடு
- |ஜூன் 2004|
Share:
Click Here Enlargeமே 22, 2004 அன்று வளைகுடாப் பகுதியின் இளம் திரைப்படத் தயாரிப் பாளரான ஹரி மஹேஷ் 'Love' என்ற தனது திரைப்படத்தின் இலக்கமுறை விழிமத் தகட்டை (DVD) வெளியிட்டார். "இது ஒரு சாதாரண காதல் கதையல்ல; காதலின் புத்துயிரூட்டும் சக்தியை ஜேக் என்பவரின் வாழ்விலிருப்பவர்களின் மூலம் சொல்லும் வாழ்க்கைக் கதை" என்கிறார் ஹரி. ·ப்ரெஸ்னோவின் எட்வர்ட்ஸ் அரங்கில் ஜூலை, 2003-இல் முதன்முதலில் திரையிடப்பட்ட இந்தப் படம் லாஸ் ஏஞ்சலஸில் நடந்த, நியூ யார்க் சுதந்திரத் திரைப்படம் மற்று விழிமத் (video) திருவிழாவில் பங்குபெற்றது.

"இவருடைய முயற்சி வளைகுடாப் பகுதித் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம்" என்று சான் ஹோசே நகரத்தந்தை ரான் கோன்சலே அண்மை யில் இவருக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.

சென்னையைச் சேர்ந்த ஹரி மஹேஷ் 1998-இல் Smera Productions நிறுவனத்தைத் துவங்கினார். இவரது முதல் படம் 'Cult' 2000-த்தில் தயாரிக்கப்பட்டது. முழுதும் வளைகுடாப் பகுதியிலேயே எடுக்கப்பட்ட இந்தப் படம் அதே ஆண்டு நியூ யார்க் படவிழாவில் கலந்துகொண்டது.

ரெபெக்கா சேண்டர்ஸ் திரைக்கதை எழுதிய 'Love' படத்திற்கு, புகைப்பட இயக்குநராக ஜான் கெல்லி பணியாற்றி யுள்ளார். இந்தப் படத்திற்கு மஹேஷ¤டன் படத்தைத் தொகுத்துள்ள ஜேக் கிட்டிங்ஸ் 'The Spy Who Loved Me', 'Splash', 'The Abyss' போன்றவற்றிற்குப் பணியாற்றியவர்.
மேலும் விவரங்களுக்கு:
Hari Mahesh
தொலைபேசி: 408.858.3718
Smera Productions
3240 Pomerado Dr.
San Jose, CA 95135
இணைய தளம்: www.smeraproductions.com
More

தமிழ்ப் புத்தாண்டு விழா மிச்சிகன்
புத்தாண்டு 'கலாட்டா'
மெம்பிஸ்
சிகாகோவில் தமிழ்ப் புத்தாண்டு
கிருத்திகாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
மிச்சிகனில் 'இந்தியா பஜார்'
Share: 




© Copyright 2020 Tamilonline