அனிதா சுப்பிரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் அபிநயாவின் அசைந்தாடும் கவிதை
|
|
தமிழ்நாடு அறக்கட்டளையின் தமிழர் திருவிழா |
|
- ஜோலியட் ரகு|ஜூன் 2004| |
|
|
|
2004 ஜூலை மாதம் 2-4-ஆம் தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளைச் சார்பாகவும், சிகாகோ தமிழ் சங்கத்தின் ஆதரவுடனும், சிகாகோ மாநகரில் மிகப்பெரிய விழா எடுக்கிறார்கள். 1974 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப் பெற்று, வரி விலக்குப் பெற்ற இந்த அறக்கட்டளை தமிழ்நாட்டில் எண்ணற்ற பொதுப்பணிகளைச் செய்து வருகிறது.
பல கலைநிகழ்ச்சிகளும் கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டியம், நடனம், நாடகம் போன்றவையும் இடம் பெறுகின்றன. கவியரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக வருகிறார். அனந்தகிருஷ்ணன் சிறப்புப் பேச்சாளராகவும், ஹேமா ராஜகோபாலன் மற்றும் ஷோபா நடராஜனின் பரத நாட்டியமும் சிறப்பு அம்சங்கள்.
சனி இரவன்று 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியும், ஞாயிறன்று 'கலைமாமணி' மனோ, லஷ்மண் ஸ்ருதியுடன் இணைந்து வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியும் இந்நிகழ்ச்சிக்கு மகுடம் வைக்கப்போகிறது.
மருத்துவர்களுக்குக் கல்வி நிகழ்ச்சிகளும், இளம் தம்பதியர்களுக்குப் பல சுவையான நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இவ்வருடக் கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தொடர்பு கொள்க: |
|
முத்துசாமி - 847.498.2152 ராம் ரகுராமன் - 815.436.3135 அதிக விபரங்களுக்கு: http://www.tnf2004.org
ஜோலியட் ரகு |
|
|
More
அனிதா சுப்பிரமணியத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் அபிநயாவின் அசைந்தாடும் கவிதை
|
|
|
|
|
|
|