வாபஸ்! வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு!
|
|
|
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மூன்று கூட்டணிகள் போட்டியிட்டன. தி.மு.க தலைமை யில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று ஏழு கட்சிகள் கூட்டணி அமைத்து ஜனநாயக முற்போக்கு கூட்டணியாக போட்டியிட்டன.
எதிரணியில் அ.தி.மு.க, பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டன. இதுதவிர ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டன.
ஆனால் தேர்தல் முடிவுகள் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன. இக்கூட்டணி போட்டியிட்ட 39 இடங்களிலும் அபார வெற்றி பெற்றன.
ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வாக்கு சதவீதம்
திமுக 23.08 காங்கிரஸ் 14.40 பாமக 6.71 மதிமுக 5.85 இந்திய கம்யூனிஸ்ட் 2.97 முஸ்லிம் லீக் 1.52 மொத்தம் 57.50
தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக 29.77 பா.ஜ.க 5.07 மொத்தம் 34.84 |
|
இதுதவிர ஐக்கிய ஜனதா தளம் 3.08 சதவீதம் வாக்கு பெற்றுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணியின் பலமே வெற்றிக்கு முக்கியமான காரணம் என்றாலும், ஆளும் அதிமுகவின் அதிரடி சட்டங்களும், அரசு ஊழியர்கள் மீது அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையும் ஒரு காரணம் என்று பேசப்படுகிறது.
ஆக, கூட்டணி என்கிற மிக முக்கியமான அஸ்திவாரம்தான் அதிமுகவை ஆட்டம் காண வைத்தது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
கேடிஸ்ரீ |
|
|
More
வாபஸ்! வரலாறு காணாத வாக்குரிமை பறிப்பு!
|
|
|
|
|
|
|