|
லாவண்யா ராஜேந்திரன் |
|
- |ஜூன் 2004| |
|
|
|
ஐந்து வயது இருக்கும் போது லாவண்யா முதன்முதலில் பனிச்சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) பழக ஆரம்பித்தாள். அந்த ரிங்க்(rink)கில் ஒரே நேரத்தில் பல குழந்தைகள், பல பயிற்றுநர்களிடம் பயின்று கொண்டு இருப்பார்கள். அப்பொழுது 'டீம் மிலினியம்' குழுவின் தலைமைப் பயிற்றுநர் "உங்களுக்கு விருப்பம் என்றால் லாவண்யாவை சின்க்ரோ ஸ்கேட்டிங் அணியில் சேர்த்துவிடுங்கள்" என்று கேட்டபோது லாவண்யாவும் ஆர்வத்துடன் சென்று பயில ஆரம்பித்துவிட்டாள். ஒவ்வொரு கட்டத்திலும் USFS நடத்தும் பரிட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் 'டீம் மிலினியம்' குழந்தைகளைக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள. போட்டிகள் நெருங்கும் சமயத்தில் சனி, ஞாயிறுகளில் 8 - 9 மணி நேரமும், மற்ற நாட்களில் குறைந்தது 4 மணி நேரமும் பயிற்சி அளிக்கப்படும்.
லாவண்யா 'டீம் மிலினியம்' குழுவினருடன் Eastern synchro-skating போட்டிகளில் போட்டியிடத் தேர்வு பெற்று, 2004 மார்ச் 4 முதல் 7வரை தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் சான்டியாகோவில் கலந்து கொண்டார்கள்.
இது இப்போட்டிகளின் ஐம்பதாவது வருடம். நூற்றுக்கு மேலான அணிகள் கலந்து கொண்டன. முதல் மூன்று இடங்களுக்குள் வராவிட்டாலும் தேசிய அளவில் கலந்துக் கொண்டு போட்டியிட்டதே வெற்றி என்ற பெருமிதத்துடன் டீம் மிலினியம், கனக்டிக்கட் திரும்பியிருக்கிறார்கள்.
பதின்மூன்று வயது லாவண்யாவின் விருப்பம் எதிர்காலத்தில் 'synchroworlds champinshipஇல் கலந்து கொள்ள வேண்டும் என்பது. இது தவிர லாவண்யா 6 வயது முதல் பரதநாட்டியமும் பழகி வருகிறாள். ஏழாம் வகுப்புப் படிக்கிறாள். படிப்பிலும் 'ஏ-கிரேட்' மாணவி. |
|
பெயர்: லாவண்யா ராஜேந்திரன் (செஷயர், கனக்டிக்கட்) பெற்றோர்கள்:வா.மு. ராஜேந்திரன், வானதி ராஜேந்திரன் |
|
|
|
|
|
|
|