|
நாதானுபாவா |
|
- மாயா|ஜனவரி 2005| |
|
|
|
கலை நிகழ்ச்சிகள் என்பது, தினசரி வாழ்க்கையில் குளிப்பது, சாப்பிடுவது போல விரிகுடாவாசிகளின் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் எந்த நிகழ்ச்சிக்குப் போவது என்று சில வீடுகளில் சண்டை கூட நடப்பதாகக் கேள்வி.
இவற்றிடையே நாதானுபாவா ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. D.K. ஜெயராமனின் சிஷ்யையான ஆஷா ரமேஷ¤ம், சுதா ரகுநாதனின் சிஷ்யையான சங்கீதா சுவாமிநாதனும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சி இது.
சங்கர நேத்ராலயாவிற்காக நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் விரிகுடாப்பகுதியின் இசை ரசிகர்களுக்குப் பரிச்சயமான 'ராஜகோபால் மாமா'. அவரது மனைவி ருக்மணி ராஜகோபாலன் வயலின் ஆசிரியை.
இந்த நிகழ்ச்சிக்காக ஆஷாவும், சங்கீதாவும் புதியதாகப் பல கீர்த்தனைகளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கப் போவது சங்கீத உடன் பிறப்புக்களான அனுராதா ஸ்ரீதர் (வயலின்), மற்றும் ஸ்ரீராம் பிரம்மானந்தம் (மிருதங்கம்). இப்போதுதான் புதுமையில் அடுத்தது வருகிறது: தபலாவில் ரவி குடாலாவும், ஸ்பானிஷ் மத்தள வாத்திய மான கஹோனில் சுதி ராஜகோபாலும் இந்த நிகழ்ச்சிக்கு வாசிக்க இருக்கிறார்கள்.
ஆஷா ரமேஷ், D K ஜெயராமன் மற்றும் நங்கநல்லூர் ராமனாதனின் சிஷ்யை. இவர் 'ராகமாலிகா' என்ற இசைப் பள்ளியைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். புதுமைவிரும்பிதான், ஆனால் மரபுகளையும் விடாமல் பின்பற்றி வருகிறார்.
சங்கீதா ஸ்வாமிநாதன் தந்தை கரூர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஆரம்பித்த பயிற்சியைப் பின்னர் கல்லூரி நாட்களில் சுதா ரகுநாதனிடம் தொடர்ந்தார். சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார். ரமண பக்தையான இவரது பொழுதுபோக்கு தத்துவப் புத்தகங்களைப் படிப்பது.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு, தெலுங்கு, சமஸ்கிருதம் தமிழ் தவிர பல இந்திய மொழிகளில் பாடல்களை தேர்ந்து எடுத்திருப்பதுதான். |
|
காஞ்சி பரமாச்சாரியாரின் ஆசியுடன் டாக்டர் பத்ரிநாத் அவர்களால் 1978ம் ஆண்டு தொடங்கப்பட்ட சங்கர நேத்ராலயா இந்தியாவின் தலை சிறந்த கண் மருத்துவமனைகளுள் ஒன்று. சங்கர நேத்ராலயாவில், ஏழை, பணக்காரர் வித்தியாசமில்லாமல், ஜாதி மத பேதமில்லாமல், அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது. நவீன வசதிகள் கிராமப்புற மக்களுக்கு நேரடியாகச் சென்றடைவதற்காக நடமாடும் டெலி கண் மருத்துவமனையைச் சங்கர நேத்ராலயா அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஊர்தியில் கண் பரிசோதனை வசதிகளோடு சங்கர நேத்ராலயா தலைமை மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள விடியோ கான்·பரன்சிங் வசதிகளும் உள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் NRIகளின் பெற்றோருக்காக சங்கர நேத்ராலயா ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள் பெற்றோர்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று பரிசோதனை முடிந்த உடன் திரும்பக் கொண்டு வந்து விடுவது, பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் அனுப்புவது, சிகிச்சை தேவைப்பட்டால் அளிப்பது போன்றவை.
மேலும் விவரங்களுக்கு
www.sankaranethralaya.org www.omtrust.org
நாதானுபாவா நாள்: ஞாயிறு, ஜனவரி 23, 2005 நடக்கும் இடம்: CET அரங்கம், சான் ஹோசே நேரம்: மாலை 4 மணி. நன்கொடை மற்றும் நுழைவுச்சீட்டுக்கு: கிரிஜா ராதாகிருஷ்ணன்: 510.657.2894 ஹேமா பார்த்தசாரதி: 510.793.4711 ரஞ்சனி ரமணன்: 925.828.5934
மாயா |
|
|
|
|
|
|
|