தெரியுமா?: கின்னஸ் சாதனை: தமிழ் நூல் தொடர் வாசிப்பு தெரியுமா?: பபாசி விருது தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது
|
|
தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
|
- |ஜனவரி 2025| |
|
|
|
|
இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில், ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதமி. தமிழில், 2024ம் ஆண்டுக்கான விருதுக்கு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வுநூல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1967-ல், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிறந்த வேங்கடாசலபதி, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பல்கலைக்கழகம், சென்னை தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் போன்றவற்றில் பணியாற்றினார்.
'அந்தக் காலத்தில் காப்பி இல்லை', 'நாவலும் வாசிப்பும்', 'புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு', 'புதுமைப்பித்தன் கட்டுரைகள் தொகுப்பு', 'பாரதியின் சுயசரிதைகள்', 'பாரதி: கவிஞனும் காப்புரிமையும்', 'பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு', 'சென்றுபோன நாட்கள்' போன்ற இவரது ஆய்வு நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. |
|
டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் (பாரதிபாலன்), இமையம், மறைமலை இலக்குவனார் அடங்கிய குழு ''திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' ஆய்வு நூலை விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. விருது, செப்புப் பட்டயமும், சால்வையும், ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது. விருது புதுதில்லியில் மார்ச் 08, 2025 அன்று நடைபெற உள்ளது. ஆ.இரா. வேங்கடாசலபதிக்குத் தென்றலின் வாழ்த்துகள். |
|
|
More
தெரியுமா?: கின்னஸ் சாதனை: தமிழ் நூல் தொடர் வாசிப்பு தெரியுமா?: பபாசி விருது தெரியுமா?: க்ராஸ்வேர்ட் விருது
|
|
|
|
|
|
|