கே3 மருதோன்றிப் பூக்கள்
|
|
|
|
பத்து நாட்களுக்குப் பிறகு கொலு முடிந்து உமா சுத்தம் செய்யத் தொடங்கினாள். பெரிய வேலை. எல்லா பொம்மைகளையும் மற்றச் சாமான்களையும் எடுத்து வைத்து ஒழுங்குபடுத்தினாள். அம்மா அறிவுரை கொடுக்க ஆரம்பித்தாள்.
"உமா அம்மன் சிலைகளை தனித்தனியாக வைத்தாயா? பார்க் சாமான்களை தனித்தனியாக வைத்துவிடு. பேப்பர் சுற்றி வை.
தீபாவளி நெருங்கறது.
நீ என்ன பலகாரம் செய்யறதா இருக்கே?
நீ எப்போ ஷாப்பிங் செய்யப்போறே?
இடைவிடாது கேள்வி. அம்மாவிடம் "நான்தான் எடுத்து வைக்கிறேனே, கொஞ்சநேரம் பேசாமல் இருங்களேன்" என்றவள் "அம்மா! இந்த முறை உங்களுக்காக ஒரு பரிசு பொம்மை ஸ்பெஷலாக நான் வாங்கினேன் தெரியுமா!" என்றாள். "நீ எனக்காக பொம்மை வாங்கினாயா! காட்டு, காட்டு!" அம்மாவுக்கு ஒரே சந்தோஷம். மிகவும் உற்சாகமாக இருந்தாள்.
உமா '3 குரங்கு' பொம்மையைக் காட்டினாள். அம்மாவுக்கு ஏமாற்றமும் ஆச்சரியமும். "இதை ஏன் வாங்கினாய், நான் என்ன குழந்தையா?" என்றாள். "நீ எதோ புதுசா அம்மன் பொம்மை வாங்கினாய் என்று நினைத்தேன்."
"இல்லை அம்மா உங்களுக்கு இப்போது இதுதான் தேவை. முழு குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று புதிர் போட்டாள்.
புரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்து "உமா, என்ன சொல்கிறாய்? குழப்பமா இருக்கே!" என்றாள். "சரி. நான் விளக்குகிறேன்.இப்போது இது உங்கள் வயதிற்கு இதுதான் தேவை" என்று பொம்மையைப் காண்பித்து
"தேவையில்லாத விஷயத்தைப் பார்க்காதீர்கள், தேவையில்லாத விஷயத்தைப் பேசாதீர்கள், தேவையில்லாத விஷயத்தைக் கேட்காதீர்கள், அப்போது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும்தான்" என்று சொல்லி முடித்தாள் உமா.
அம்மா ஏமாற்றமடைந்தாலும் தன்னை உணர்ந்தாள்.
வயதானபிறகு அனைத்திலும் தலையிடாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு விஷயத்திலும் தான் தலையிடுவதை உணர்ந்தாள்.
இப்போதுகூட அவள் மனம் நோகாது மகள் தன்னை எப்படி உணர வைத்தாள் என்று பெருமைப்பட்டாள்.
அதுதான் தாய்! மனதிற்குள் சிரிப்பும் வந்தது. காலப்போக்கில் மகளுக்கும் இதே நிலைதானே! |
|
சேது ஷண்முகம், ஆட்டொவா, கனடா |
|
|
More
கே3 மருதோன்றிப் பூக்கள்
|
|
|
|
|
|
|