|
தங்கமாக மாறிய மணல் |
|
- |ஆகஸ்டு 2024| |
|
|
|
|
காளஹஸ்தியில் பெரிய கோயில் கட்டப்பட்டதைப் பற்றி ஒரு கதை உண்டு. இது பரத்வாஜரின் உதவியுடன் அகத்திய முனிவரால் பாரம்பரிய முறைப்படி கட்டப்பட்டது.
ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமிக்கும் போது, அகத்தியர் ஆற்றுப் படுகையில் அமர்ந்துகொண்டு, தன்முன் ஒவ்வொரு தொழிலாளியாக அழைப்பார். அவர் சொல்லச் சொல்ல, இரண்டு முனிவர்கள் படுகையிலிருந்து எடுத்த மணலை ஒவ்வொரு தொழிலாளியின் மடியிலும் வார்ப்பர்; அதுதான் அவருக்குச் சம்பளம்!
அந்த மணல் அன்று அதைப் பெற்றவர் செய்த வேலைக்கு ஏற்ற விகிதத்தில் தங்கமாக மாறிவிடும். அதிக வேலை செய்தவருக்கு அதிகத் தங்கம் கிடைக்கும்; குறைவாகச் செய்திருந்தால், குறைவாகக் கிடைக்கும். நாளை வீணடித்திருந்தால் அது மணலாகவே இருக்கும்.
முணுமுணுப்போ, பாரபட்சமோ இல்லை. சர்வ வல்லமையுள்ளவரின் முன்னிலையில் அனைவரும் வேலை செய்தனர், சர்வவல்லவரால் வழங்கப்பட்ட தங்கத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர், ஏனெனில் அது அவருக்கு உரியது, குறைவானது அல்ல.
மேலதிகாரிகளுக்கு அஞ்சிச் செய்யும் வேலையைவிட, உண்மையோடும் மகிழ்ச்சியோடும் செய்யும் வேலைக்குக் கடவுள் கருணையோடு வெகுமதி அளிப்பார். உள்ளம் தூய்மையாக இருந்தால் உங்கள் செயலும் தூய்மையாக இருக்கும்.
நன்றி: சனாதன சாரதி, மே 2024 |
|
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா |
|
|
|
|
|
|
|