Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | அஞ்சலி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar
Tamil Unicode / English Search
சின்னக்கதை
இது நிஜமா? அது நிஜமா?
- |டிசம்பர் 2023|
Share:
யதார்த்தத்தை ஞான மின்னல் ஒன்றில் புரிந்து கொண்டுவிட முடியும், ஜனக சக்கரவர்த்திக்கு நடந்ததைப்போல. ஒருநாள் மாலை, ஜனகர் அரசவையில் இருந்தார், அவரைச் சுற்றி அவையினர் மற்றும் பெண் இசைக் கலைஞர்கள் இருந்தனர்; அவர்கள் இனிமையான மெல்லிசையைப் பாடினர், சக்கரவர்த்தி இசையை மிகவும் ரசித்தார்; அவர் சிம்மாசனத்தில் உட்கார்ந்தபடியே தூங்கிப் போய்விட்டார். அவரை எழுப்பும் துணிச்சல் யாருக்கும் இல்லை.

தங்கள் பேச்சும் அசைவுகளும் அவருக்குத் தொந்தரவு ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அமைதியாக அந்தப்புரத்துக்குள் சென்றார்கள். ஒரு சேவகரும் ராணியும் மட்டுமே அவரோடு இருந்தனர். நள்ளிரவில் சக்கரவர்த்தி பரிதாபமாக அலறினார். தான் போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்டார். ராணி அவரைப் பார்த்து ஓடினாள். சக்ரவர்த்தி அவளிடம், "இது நிஜமா? அது நிஜமா?" என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அது என்பது என்ன, இது என்பது என்ன என்று அவளுக்கு எப்படித் தெரியும்? சக்ரவர்த்தி எல்லோரிடமும் அதே கேள்வியைத்தான் கேட்டார்; அவர் வேறு எதுவும் பேசவில்லை. அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

ஜனகருக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகச் செய்தி பரவியது. எங்கும் துக்கம்! இதைக் கேள்விப்பட்ட முனிவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் பேரரசரின் சந்நிதிக்கு அழைத்து வரப்பட்டார். சிம்மாசனத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது கண்ட கனவையும், அப்படி அலறியது ஏன் என்பதையும் கூறினால் அவரது கேள்விக்குப் பதிலளிப்பதாக ஜனகரிடம் அவர் உறுதியளித்தார்.

ஜனகர் கண்ட கனவு இதுதான். எதிரி மன்னர்கள் ஒன்றுசேர்ந்து தனது ராஜ்யத்தின் மீது படையெடுத்துத் தலைநகரைக் கைப்பற்றிவிட்டதாகவும், அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு காட்டுக்குள் ஓடுவதாகவும் கனவு கண்டார். எதிரிகளிடம் இருந்து தப்பி ஓடிய அவருக்குப் பல நாட்கள் உணவு கிடைக்கவில்லை. அவர் நகரவே முடியாத அளவுக்குக் களைத்துப் போய்விட்டார். ஆனால், பசி அவரை இழுத்துச் சென்றது. அவர் ஒரு பழங்குடி கிராமத்துக்கு அருகே சென்றபோது, ஒருவர் சாப்பிட்ட பிறகு தட்டைக் கழுவுவதைக் கண்டார். அதிலிருந்த சில பருக்கைகளைக் கேட்டுக் கத்தினார். அவர் அரசருக்கு ஒரு சிறிய துணுக்கைக் கொடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஒரு காகம் அந்த நேரத்தில் பறந்து வந்து அதைப் பறித்துக்கொண்டது! அந்த வேதனையில் அவர் அலறினார். அலறி விழித்துக் கொண்டார்.

அதனால்தான், "இது நிஜமா? அது நிஜமா?" என்று கேட்டார். சிம்மாசனத்தைப் போலவே கனவில் பசியும் உண்மையாகத்தான் இருந்தது; சாம்ராஜ்யத்தை ஆளுவது போலவே, கனவில் பேரரசை இழந்ததும் உண்மையானதுதான். "அதுவும் உண்மையல்ல, இதுவும் உண்மையல்ல. அது சொப்பனம் (ஸ்வப்னம்), இது விழிப்புநிலை (ஜாக்ரத்), இரண்டும் மித்யை (ஒப்பீட்டளவில் உண்மையானவை; முற்றிலும் உண்மையல்ல என்றாலும் அவை தற்காலிக யதார்த்தம், தொடர்ந்த விசாரணை மற்றும் அனுபவத்தால் இவை மறுதலிக்கப்படும்). ஆனால், கனவு கண்டது நீர், விழித்துக் கொண்டதும் நீர், கத்தியதும் நீர், கேள்வி கேட்டதும் நீர். எனவே, நீங்கள் இரண்டு நிலைகளிலும் இருந்தீர்கள்; எனவே ‘நீர் ஒருவரே உண்மையானவர்.”

விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளிலும் நிலைத்திருக்கும் ‘நான்’ மட்டுமே யதார்த்தம்; ‘நான்’தான் இந்த பிரபஞ்சமாக வெளிப்பட்டுத் தோன்றுவது.

நன்றி: சனாதன சாரதி, செப்டம்பர் 2023
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline