சந்தக்கவி ராமசாமி
|
|
|
|
ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி (86) சென்னையில் காலமானார். ஆகஸ்ட் 28, 1938 அன்று, புதுக்கோட்டையில், டி. வெங்கோப ராவ் - பத்மாவதி பாய் இணையருக்குப் பிறந்தார். புதுக்கோட்டையில் பள்ளிக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலை வகுப்பு படித்தார். ஓவிய ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார். பேனர் ஆர்டிஸ்ட், அறிவிப்புப் பலகை வடிவமைப்பாளர் எனப் பல பணிகளைச் செய்தார். ஓவியர் மாதவன் மற்றும் நடராஜன் இருவரிடமும் ஓவியம் கற்றார். அவர்களது பாணியைப் பின்பற்றி தனக்கேற்ற வகையில் சில மாற்றங்களைப் புகுத்தி வரைய ஆரம்பித்தார். குமுதம் இதழின் எஸ்.ஏ.பி. அண்ணாமலை மாருதியை ஆதரித்து வாய்ப்புகள் வழங்கினார். தொடர்ந்து விகடன், குங்குமம், அமுதசுரபி எனப் பல இதழ்களுக்கும், காமிக்ஸ் புத்தகங்களுக்கும் வரைந்தார். தேவியின் கண்மணி இதழில் தொடர்ந்து வரைந்து வந்தார் .
'வீர மங்கை வேலு நாச்சியார்' நாடகம், 'உளியின் ஓசை' திரைப்படம் போன்றவற்றில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் கலைமாமணி , புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய ஓவியக் கலைமாமணி உட்படப் பல்வேறு விருதுகள் பெற்றவர்.
சில ஆண்டுகளுக்கு முன் மனைவி விமலா காலமானார் இவருக்கு இரண்டு மகள்கள் சுபாஷிணி, சுஹாசினி. (மாருதி தென்றலுக்கு வழங்கிய நேர்காணலை வாசிக்க |
|
ஓவிய மேதைக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
More
சந்தக்கவி ராமசாமி
|
|
|
|
|
|
|