சாகித்ய அகாதமி பால புரஸ்கார் 2023 தமிழ் விக்கி - தூரன் விருது
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | சாகித்ய அகாதமி யுவபுரஸ்கார் 2023 | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        -  | ஜூலை 2023 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												சாகித்ய அகாதமி 35க்கு வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருது வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன், லக்ஷ்மி சரவணக்குமார், மனுஷி, சுனீல் கிருஷ்ணன், சபரிநாதன், ஷக்தி, கார்த்திக் பாலசுப்ரமணியன், ப. காளிமுத்து உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். 
  2023ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார் எழுத்தாளர் ராம் தங்கம். இவர் எழுதிய 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பு விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இர. மீனாட்சி, டாக்டர் ஆர். குறிஞ்சிவேலன், டாக்டர் மு. ராமசாமி அடங்கிய நடுவர் குழு இப்படைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  நாகர்கோவிலைச் சேர்ந்த ராம் தங்கம், பத்திரிகையாளராகப் பணியாற்றினார். தற்போது முழுநேர எழுத்தாளர். காந்திராமன், ஊர்சுற்றிப்பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோவில், ராஜவனம், புலிக்குத்தி, கடவுளின் தேசத்தில் போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத்தகுந்தவை. இவர் எழுதி 2019ஆம் ஆண்டு வெளிவந்த திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு இதுவரை 6 விருதுகளைப் பெற்றுள்ளது.
  யுவபுரஸ்கார் விருது, செப்புப் பட்டயமும் 50000 ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது. விருது விழா டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும். | 
											
											
												| 
 | 
											
											
											
												| ராம் தங்கத்திற்கு தென்றலின் வாழ்த்துகள் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  சாகித்ய அகாதமி பால புரஸ்கார் 2023 தமிழ் விக்கி - தூரன் விருது
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |