அரங்கேற்றம்: சம்யுக்தா சித்தூர் கனடா பாராளுமன்றத்தில் ஆசியப் பாரம்பரிய தினம் ட்யூலிப் மலர் விழா
|
|
|
|
"ந காயத்ர்யா பரமோ மந்த்ர:" காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் கிடையாது.
ஏப்ரல் 22-23, 2023 அன்று காஞ்சி, சிருங்கேரி சங்கர மட ஆச்சாரியார்கள் மற்றும் காமாக்ஷி சுவாமிகளின் ஆசிகளுடன், அமெரிக்க தாம்ப்ராஸ் அமைப்பின் சார்பில் பத்து பாலகர்களுக்கு கலிஃபோர்னியா விரிகுடாப் பகுதியில் உபநயனம் சிறப்பாக நடைபெற்றது.
விழா ஏற்பாடுகள் ஆறு மாதங்களாக திட்டமிடப்பட்டன. அமைப்பின் சிறப்புப் புரவலர்கள் (திருவாளர்கள் பிரபு வெங்கடேஷ் சுப்ரமணியம், சிவகுமார் காமேஸ்வரன், முத்து சுப்ரமணியம் வைத்தியநாதன், அரவிந்த் சுப்ரமணியம், திருவாட்டியர் கமலா வேதபுரம்) வடுக்களின் பெற்றோர்களுடன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். மிஸௌரி, டெக்ஸஸ், மிஷிகன், லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் கலிஃபோர்னியா பகுதிகளிலிருந்து உபநயன ஏற்பாட்டிற்கு 10 குடும்பத்தினர் பதிவு செய்து கொண்டார்கள்.
ஸ்ரீ விஸ்வநாத குருக்கள் மற்றும் குழுவினர் தலைமையில், மந்திரங்கள் ஜபிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட தன்னார்வலர் உதவியுடன், உபநயனம் நடத்தப்பட்டு, குமார போஜனத்துக்குப் பின்னர் பிரம்மோபதேசம் (காயத்ரி மந்திர தீட்சை) நடைபெற்றது.
பாஸ்கர பிரகாச ஆசிரமம் குரு ஸ்ரீ ரகு மற்றும் குருபத்னி ஸ்ரீமதி அகிலா ஆகியோர் முக்கியப் பிரமுகர்களாக வந்திருந்து குழந்தைகளை ஆசிர்வதித்தனர். |
|
செய்திக் குறிப்பில் இருந்து |
|
|
More
அரங்கேற்றம்: சம்யுக்தா சித்தூர் கனடா பாராளுமன்றத்தில் ஆசியப் பாரம்பரிய தினம் ட்யூலிப் மலர் விழா
|
|
|
|
|
|
|