|
ஏப்ரல் 2023: வாசகர்கடிதம் |
|
- |ஏப்ரல் 2023| |
|
|
|
|
மார்ச் தென்றல் இதழில், பல்வேறு விருதுகள் பெற்றவரும், பல களங்களில் சுறுசுறுப்பாகப் பணியாற்றுகிறவரும், பல்வேறு சைவ, தமிழ் பணிகளை முன்னெடுத்துச் செல்பவருமான முனைவர் இடைமருதூர் கி. மஞ்சுளா அவர்களின் நேர்காணல் படித்தேன். பெண்களின் சுதந்திரம், விடுதலை, முன்னேற்றம் என்பவை எந்தெந்த வகைகளில் இருக்கவேண்டும் என்பதைச் சரியான கோணத்தில் அவர் சிந்தித்திருப்பது மிகவும் சிறப்பு.
கவிதைப் பந்தலில் கமலா பார்த்தசாரதி அவர்களின் 'நீரின் மொழி' அருமை. இந்துமதி ஜெயபால் எழுதிய 'ஒரு மழைநேர இரவில்' சிறுகதை, மர்மநாவல் போன்று ஆரம்பத்தில் நினைக்கத் தோன்றியது முடிவில் ஒரு நல்ல சிந்தனையைக் கொடுத்துள்ளார். எழுத்தாளர் ஜெயலக்ஷ்மி ஸ்ரீநிவாசன் அவர்களின் லக்ஷ்மி கடாக்ஷம், அமெரிக்க சுற்றுலா போன்ற படைப்புகளைப் படித்துள்ளேன். மிகவும் யதார்த்தமாக எழுதுவார். அவரை ஞாபகத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி .ஹரி கிருஷ்ணன் அவர்களின் ஹரிமொழியில் 'துருபதனுடைய புரோகிதரின் தூது' படிக்கப் படிக்க அற்புதமாக இருந்தது. |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|