ஔவை நடராசன்
|
|
நாரணோ ஜெயராமன் |
|
- |டிசம்பர் 2022| |
|
|
|
|
கவிஞரும் எழுத்தாளருமான நாரணோ ஜெயராமன் காலமானார். நாரணோ ஜெயராமன் அக்டோபர் 19, 1945 அன்று திருச்சியில் பிறந்தார். சிறுவயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருந்தார். கசடதபற, ஞானரதம், சதங்கை, தெறிகள், விமர்சனம், அஃ போன்ற சிற்றேடுகளில் கவிதைகள், சிறுகதைகள் எழுதினார். இவருடைய கவிதைகள் 'வேலி மீறிய கிளை' எனும் தலைப்பில் 'க்ரியா' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. கவிஞர் பிரமிள் அதற்கு முன்னுரை எழுதி ஊக்குவித்திருந்தார்.
ஜெயராமன், மீனம்பாக்கம் அ.ம.ஜெயின் கல்லுரியில் தத்துவத்துறை மற்றும் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களில் மிகுந்த ஈர்ப்பு உடையவர். ஆன்மிகம் மற்றும் தத்துவம் சார்ந்த நூல்களை வெளியிடுவதற்காக வித்யுத் பதிப்பகத்தைத் தொடங்கி நடத்தி வந்தார்.
இவரது கவிதைகளைத் தொகுத்து, 'நாரணோ ஜெயராமன் கவிதைகள்' என்ற தலைப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இவரது 72வது வயதில், அழிசி பதிப்பகம் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான 'வாசிகள்' என்ற நூலை 2021ல் வெளியிட்டது.
நாரணோ ஜெயராமன் முதுமை காரணமாக 24 நவம்பர் 2022 அன்று சென்னையில் காலமானார். |
|
மூத்த கவிஞருக்கு தென்றலின் அஞ்சலி! |
|
|
More
ஔவை நடராசன்
|
|
|
|
|
|
|