|
ஜூன் 2022: வாசகர் கடிதம் |
|
- |ஜூன் 2022| |
|
|
|
மே மாதத் தென்றல் இதழில், 22 வயதில் 23 விருதுகளைப் பெறுமளவிற்கு உழைப்பும் திறமையும் கொண்ட ஓவியக் கலைஞர் கிஷோரின் நேர்காணல் படித்தேன். அருமை. ஓவியர் பணக்கோட்டி அவர்களுடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கை வரலாற்று ஓவியங்கள் வரையும் வாய்ப்பு இந்த வயதிலேயே கிடைத்திருப்பது பாக்கியம்.
எழுத்தாளர் மஹதி ஓர் இஸ்லாமியர், அவர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தந்தையார் எஸ் ஸய்யித் அஹமத் என்பவற்றைப் படித்து ஆச்சரியமடைந்தேன். அவரின் கதைகள் சிலவற்றைப் படித்துள்ளேன். இலக்கிய உலகம் என்றும் நினைவில் நிறுத்தவேண்டிய முன்னோடியும் பன்முக ஆளுமை கொண்டவருமான கே.ஆர். வாசுதேவன் அவர்களின் நூற்றாண்டு என்பதை நினைவில் கொண்டுவந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
அம்பாளுடன் பேசிய அம்மா என்ற பேராசிரியர் அ.ச .ஞானசம்பந்தன் கட்டுரை அற்புதம். உண்மை நிகழ்ச்சியாகத் தோன்றிய 'வெட்டென மற', வித்யா அருண் சிறுகதை அருமை. |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|