Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சிறப்புப் பார்வை | சின்னக்கதை | சமயம் | நூல் அறிமுகம் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப்
சாதனைச் சிறுமி ஜியா ராய்
நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகள்
- |ஏப்ரல் 2022|
Share:
பிரபல ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குழு, நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது.

நாவல் போட்டி

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 35 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கவேண்டும். தேர்வு செய்யப்பட்ட 10 நாவல்களின் நெடும்பட்டியல் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும். நெடும்பட்டியலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 5 நாவல்களின் குறும்பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியில் நெடும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படும் 10 நாவல்களையும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நூலாக வெளியிடும்.

பரிசு விவரம்:
முதல் பரிசு: ₹ 1,00,000
இரண்டாம் பரிசு: ₹ 50,000
மூன்றாம் பரிசு: ₹ 25,000
நான்காம் பரிசு: ₹ 15,000
ஐந்தாம் பரிசு: ₹ 10,000

★★★★★


குறுநாவல் போட்டி
போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு குறுநாவல் மட்டுமே அனுப்ப அனுமதி. ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்ளலாம். குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 14 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 5 குறுநாவல்களின் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 5 குறுநாவல்களையும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிடும்.

பரிசு விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் 5 குறுநாவல்களுக்கு தலா ₹ 20,000/-

★★★★★


சிறுகதைப் போட்டி
போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்ப அனுமதி. ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்ளலாம். சிறுகதையின் அளவு குறைந்தபட்சம் 2 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகளின் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளையும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிடும்.

பரிசு விவரம் - தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளுக்கு தலா ₹ 10,000/-

★★★★★


விதிமுறைகள்
படைப்புகளை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word doc) அனுப்ப வேண்டும். கையெழுத்துப் பிரதி மற்றும் பிடிஎஃப் (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: zerodegreeaward@gmail.com

போட்டிக்கு அனுப்பும் படைப்பின் வகைமையை நாவல் போட்டி/குறுநாவல் போட்டி/சிறுகதை போட்டி என்று Subjectல் குறிப்பிடவும்.

படைப்புகளை அனுப்பக் கடைசி நாள் மே 31, 2022. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்தப் போட்டி குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் zerodegreeaward@gmail.com மின்னஞ்சல் வழியாக மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும். ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழி இருத்தல் வேண்டும். படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும்வரை அதனை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ, பதிப்பகத்துக்கோ அச்சு வடிவிலோ அல்லது மின்னூலாகவோ அனுப்புவதாக இல்லை என்று உறுதியளிக்க வேண்டும். மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் படைப்புடன் இணைத்திருக்க வேண்டும்.
நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது.
More

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப்
சாதனைச் சிறுமி ஜியா ராய்
Share: 




© Copyright 2020 Tamilonline