Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பாரதி தமிழ்க் கல்வி: பொங்கல் விழா
மினசோட்டா தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
- சுந்தரமூர்த்தி|மார்ச் 2021|
Share:
ஜனவரி 24, 2021 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் இணையம் வழியாகப் பொங்கல் விழாவைக் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது.

தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுவினர் சேர்ந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இனிமையான பொங்கல் வாழ்த்துச் செய்தியுடன் தமிழ்ச்சங்க இயக்குனர் மருத்துவர் திரு ஆறுமுகம் மற்றும் திருமதி இராணி செபாஸ்டின் தொடங்கி வைத்தனர்.

தமிழ் நாட்டில் மிகப்பெரிய குழு வைத்திருக்கும் பெரியமேளம் திரு முனுசாமி குழுவினரின் துள்ளல் இசையுடன் சிறப்பாக இருந்தது. இந்நிகழ்வைப் பொருளாளர் திரு செந்தில் கலியபெருமாள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.


இயக்குனர் திரு சங்ககிரி ராஜ்குமார் குழுவினரின் 'குமண வள்ளல்' தெருக்கூத்து மேடையேற்றப்பட்டது. கட்டியங்காரனின் நகைச்சுவையுடன், மினசோட்டாவின் குறிப்புகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு எடுத்துச் சென்ற பாங்கு சிறப்பு. குமண வள்ளல், சகோதரர், அவரின் மனைவி, புலவர் பாத்திரம் என்று அனைவரும் அருமையாகச் செய்திருந்தனர். நிகழ்ச்சியை, சங்கத் துணைத்தலைவர் திரு சச்சிதானந்தன், சங்ககிரி ராஜ்குமார் அவர்களுடன் நடத்திய அருமையான நேர்காணலுடன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.


மினசோட்டா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நடித்த விழிப்புணர்வு நாடகம் 'யாருப்பா மாறணும்?' மேடையேற்றப்பட்டது. ஒரு குறும்பட வடிவில் இதனை மாணவர்கள் பேசி, நடித்து, நடனம் ஆடி, சிலம்பம், புலியாட்டம் போன்ற கலைகளை நிகழ்த்திய வகையில் சிறப்பாகத் தயாரித்திருந்தனர். நாடகத்தின் எழுத்து, ஆக்கம் திரு சுந்தரமூர்த்தி, ஒருங்கிணைப்பு சரவணக்குமரன், தொழில்நுட்ப உதவி தமிழ்ப்பள்ளி மாணவர் ராஜ் இசக்கிமுத்து, நடனம் மகேஸ்வரி.


'இயற்கை சார்ந்து வாழ்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. பங்கேற்றோர் இயற்கையோடு ஒன்றிய தலைப்பில் சிறப்பாகக் கருத்துகளை எடுத்து வைத்தனர். தமிழ்ப்பள்ளி ஆசிரியராகவும், நிர்வாகக் குழுவிலும் பணியாற்றிய திரு மதுசூதனன் வெங்கடராஜன் நடுவராக இருந்து சிறப்பாகக் கருத்துகளை ஆராய்ந்து தனது கருத்துகளை எடுத்து வைத்தார்.


மினசோட்டாக் கலைக்குழுவினரில் 10 பேர் பங்குகொண்ட பறையிசையை இணையம் வழியாக மேடையேற்றினோம். பயிற்றுனராக மினசோட்டா இயக்குனர் திரு தமிழ்க்கதிர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். திரு சரவணன் துரைராஜன். தமிழர் தற்காப்புக் கலையில், எந்தக் கருவியும் இல்லாமல் தமது கையின் துணையுடன் நிகழ்த்தக் கூடிய குத்துவரிசையை நிர்வாக இயக்குனர் திரு இராம் சின்னதுரை மற்றும் மணிகண்டன் சிறப்பாகக் குழந்தைகளுடன் செய்து காட்டினர்.



பறையிசை


தவில், நாகசுரம்


குத்துவரிசை


மாணவர்களின் 'மலரும் மொட்டும்' நிகழ்வு, பல்வேறு வேடமிட்டுத் தமிழ் பேசிய அருமையான ஒன்று. ஆசிரியர்கள் அபிராமி நாகப்பன், சங்கீதா சரணவனக்குமரன், சோபியா ஜெயவீரன் இதனை ஒருங்கிணைத்தனர்.


தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் 'தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக' மினசோட்டா மாநில ஆளுநர் திரு டிம் வால்ச் பிரகடனம் செய்துள்ளார். எல்லைகள் கடந்த மொழி சார்ந்த இனக்குழுவாக தமிழுக்கென்று தனி அங்கீகாரத்தினை மினசோட்டாவில் வழங்கிச் சிறப்பித்து இருக்கிறது மினசோட்டாவின் பன்னாட்டு அமைப்பு (International Institute of Minnesota). இந்தத் தொடர்பையும் தமிழ்ச் சங்கத்தின் விழா பங்களிப்பு மற்றும் பயணத்தைப்பற்றி திருமதி கோரி எர்ட்ஸ் (Corinne Ertz, Development Director, International institute of Minnesota) உரை வழங்கினார். மினசோட்டா மாநில கலைக் குழுமம் (MSAB). தமிழ்ச் சங்கத்தின் கலைப்பயணம் மற்றும் பங்களிப்பைப் பற்றிய கருத்துகளை திருமதி இரீனா ரோசி (Rina Rossi, Program Officer, Minnesota State Arts Board) வழங்கினார். நேரலையைச் சங்கத்தின் தலைவர் திரு சுந்தரமூர்த்தி, துணைத்தலைவர் திரு சச்சிதானந்தன், இயக்குனர் திருமதி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இறுதியாக, துணைச் செயலாளர் திரு இராம் சின்னத்துரை நன்றியுரை வழங்கினார்.
சுந்தரமூர்த்தி,
தலைவர், மினசோட்டா தமிழ்ச்சங்கம்
More

பாரதி தமிழ்க் கல்வி: பொங்கல் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline