டி.என். கிருஷ்ணன் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி
|
|
எம். வேதசகாயகுமார் |
|
- |ஜனவரி 2021| |
|
|
|
|
தமிழ்ப் பேராசிரியரான எம். வேதசகாயகுமார், ஆய்வாளர், எழுத்தாளர், வரலாறு என்று பல திறக்குகளில் இயங்கியவர். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைத் தேடித்தேடித் தொகுத்தவர். புதுமைப்பித்தனின் படைப்புகள் அனைத்தையும் கண்டெடுத்து, காலவரையறை செய்து பட்டியலிட்டுப் பதிப்பித்ததை இவரது முக்கியமான சாதனையாகச் சொல்லலாம். இவரது ஆராய்ச்சிக்குப் பின்பே புதுமைப்பித்தன் அவ்வளவு படைப்புகளைத் தந்திருக்கிறார் என்பது தமிழ் இலக்கிய உலகிற்குத் தெரியவந்தது. தமிழின் முன்னோடி விமர்சகர்களில் ஒருவர். 1949ல் நாகர்கோயில் அருகே ஆரல்வாய்மொழியில் பிறந்தார். நாகர்கோயில் தெ.தி. இந்துக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். சித்தூர் கலைக்கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். இவரது பேராசிரியராக இருந்த ஏசுதாசன் இவரது நுணுக்கமான ஆய்வுமுறைகளுக்கு அடித்தளமிட்டார். 'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தன் ஆசிரியரைப் போலவே சிறந்த ஆய்வு வழிகாட்டியாக இருந்து பல மாணவர்களை மேலுயர்த்தினார்.
ஆவணங்களை முறையாகப் பதிவு செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத தன்மை கொண்டவராகவே இறுதிவரை வாழ்ந்தார், இவர் நடத்திய 'கொல்லிப்பாவை' இதழ் குறிப்பிடத்தகுந்த இலக்கிய இதழ்களுள் ஒன்றாகும். இவர் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை வரலாறு' தமிழின் சிறுகதை வரலாற்றைப் பேசும் மிகச்சிறந்த ஆவணமாகும். |
|
பேராசிரியருக்கு தென்றலின் அஞ்சலி! |
|
|
More
டி.என். கிருஷ்ணன் ஓவியர் கிருஷ்ணமூர்த்தி
|
|
|
|
|
|
|