Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஜனவரி 2021|
Share:
வெற்றி அடையும்போது பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை, ஒருவர் தோல்வியடையும்போது எப்படி நடந்துகொள்கிறார் என்பதில்தான் அவரது பண்பாட்டு முதிர்ச்சி தெரிகிறது. இந்த விஷயத்தில் வெளிப்போகும் அதிபரைப் பற்றிச் சரித்திரம் பெருமையாகப் பேசப்போவதில்லை. அவரும் அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. சட்டசபைகள், நீதித்துறை இன்ன பிற அரசு எந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும், வெளிப்படையாக அவமதிப்பதையும் அவர் நிறுத்தவில்லை.

புத்தாண்டு வந்துவிட்டது. புதிய அரசு ஓரிரு வாரங்களில் பதவியேற்க வேண்டும். அதற்கானவற்றைத் தற்போதைய அதிபர் மனமுவந்து செய்யவேண்டும். ஆனால் அரசு மாற்றத்தை இயல்பாக நடக்கவிடாமல் பெரும் தடைக்கல்லாக இருப்பதே இவர்தான் என்பதில் நமக்கு வியப்பு, அலுப்பு, கோபம் எல்லாமும். காலவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடும் என நம்புகிறோம். பிடிவாதமாக நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸையும் கூடத்தான். சந்தேகமில்லை. ஆனால் அது போவதற்குள் எத்தனை இழப்புகளை ஏற்படுத்திவிடுமோ என்பதுதான் நமது அச்சம். குகையின் இறுதியில் ஒளிக்கீற்றாக நம்பிக்கை தெரியட்டும். மக்கள் எல்லா அவதிகளிலிருந்தும் விடுபடட்டும். அந்த நம்பிக்கையோடு 2021-ஐ வரவேற்போம்.

★★★★★


'Golden oldies' என்று சொல்வதுண்டு. அப்படித் தங்கமான திரைப் பாடல்களைக் கையிலெடுத்து, அவற்றின் தகதகப்பும் கலை நுணுக்கமும் மாறாமல் மெருகேற்றி Quarntine from Reality (QFR) என்ற பெயரில், புதிய குரல்களில் உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்கு வழங்கி அசத்தி வருபவர் சுபஸ்ரீ தணிகாசலம். பாடல்கள் எத்தனை சுவையோ, அவற்றுக்கு அவர் வழங்கும் அறிமுகமும் அத்தனை சுவாரசியம்தான். அவருடன் இந்த இதழில் பேசி மகிழ்ந்திருக்கிறோம். சிறுவர் தொடரான 'எர்த்தாம்டனின் சுட'ரில் இன்னுமொரு சுவையான சவாலை அருண் இந்த இதழில் எதிர்கொள்கிறான். நீலகண்ட பிரம்மச்சாரி என்ற சுதந்திரப் போராட்ட வீரர், ரா. கணபதி என்ற மகத்தான பக்தி எழுத்தாளர், பித்துக்குளி முருகதாஸ் என்ற பக்தியிசைப் பெருங்கடல் என்று இந்த இதழ் பல மறக்கமுடியாத பெரியோர் குறித்த உன்னதக் கட்டுரைகளைத் தாங்கி வருகிறது. இவை அடுத்த தலைமுறைகளை நிச்சயம் அடைய வேண்டும். அந்த முக்கியமான திருப்பணியில் உங்கள் பங்கும் முக்கியம். செய்வீர்களா?

வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
தென்றல்
ஜனவரி 2021
Share: 




© Copyright 2020 Tamilonline