பாரதி தமிழ்ச்சங்கம்: மரப்பாவைக் கூத்து நந்தலாலா மிஷன்: கலை இலக்கியத் திருவிழா
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jul2020/18/16674fa0-a85a-4f7f-8dc6-204d46260163.jpg) |
ஜூன் 13, 2020 அன்று பியர்லாந்தில் (டெக்சஸ்) உள்ள ஸ்ரீ மீனாட்சி திருக்கோவில் கொரோனாகாலச் சூழலில் அவதிப்படும், தேவையுள்ளோருக்கு உணவுப்பொருள்களை வழங்கியது, இந்தச் சேவையை MTS மற்றும் Sewa அமைப்புகள் இணைந்து பெரும் வெற்றியாக்கின. இதில் சுமார் 200 பேர் பயனுற்றனர். ஹூஸ்டனில் உள்ள கான்சல் ஜெனரல் மேதகு அசீம் மஹாஜன் மற்றும் டெக்சஸ் மாநிலப் பிரதிநிதி திரு எட் தாம்சன் ஆகியோர் உணவுப்பொருட்கள் அடங்கிய சிப்பங்களைக் கடும் வெயிலிலும் வாகனங்களில் இருந்தோரிடம் கைபடாமல் மிகுந்த கவனத்துடன் கொடுத்தனர். ஒரு குடும்பத்துக்குத் தேவையான பால், ரொட்டி, மளிகைப் பொருட்கள், ஓட்ஸ், சமையல் எண்ணெய், இரண்டு முகமூடிகள் போன்றவை ஏராளமான அன்புடனும் அன்னை மீனாட்சியின் ஆசிகளுடனும் வழங்கப்பட்டன. |
|
தகவல்: திரு சாம் கண்ணப்பன், ஹூஸ்டன்
படம்: திரு ஆறுமுகம், ஹூஸ்டன் |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
பாரதி தமிழ்ச்சங்கம்: மரப்பாவைக் கூத்து நந்தலாலா மிஷன்: கலை இலக்கியத் திருவிழா
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|