Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
தந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி)
சென்னை சபாக்களில் 'சுருதி பேதம்'
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
காதில் விழுந்தது...
தெரியுமா?
Fetna வழங்கும் தமிழர் விழா 2005
- வ. ச. பாபு|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeஜூலை 2-4, 2005 தேதிகளில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 'தமிழர் விழா' நிகழ்ச்சியை இந்த ஆண்டு டால்லஸ் நகரில் நடத்தவிருக்கிறது. தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ் அமெரிக்க இளையோர் அமைப்பு, தாய்த்தமிழ்க் கல்விப் பள்ளியை நடத்திவரும் உலகக் கல்வி அமைப்பு ஆகிய அமைப்புகள் இவ் விழாவுக்கு உறுதுணையாய் நிற்கின்றன.

மேலும் டால்லஸ் பெருநகர் தமிழ்ச்சங்கம் முழுமூச்சாக இதற்குக் களம் அமைத்துத் தருகிறது.

சங்கத்தின் தலைவி ராஜி இராசன் தம் குழுவினருடன் இதற்காக முனைந்து செயல்பட்டு வருகின்றார்.

பேரா. வ.செ. குழந்தைசாமி (நிர்வாகி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம்), பேரா. அனந்தகிருஷ்ணன் (முன்னாள் துணை வேந்தர், அண்ணா பொறியியல் பல்கலைக் கழகம் மற்றும் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டின் தலைவர்), பேரா. ஜார்ஜ் ஹார்ட் (தமிழ்ப்பீடம், கலி·போர்னியா பல்கலை, பெர்க்கிலி) இவர்களோடு எழுத்தாளர், சிந்தனையாளர் மேலாண்மை பொன்னுசாமி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர். நகைச்சுவை விருந்தளிக்க மீண்டும் வருகிறார் பேரா. ஞானசம்பந்தன்.

கனிமொழி அவர்கள் கவியரங்கத் தலைமை ஏற்பார்.

பரத்வாஜ் மற்றும் உன்னிக்கிருஷ்ணன் இவர்களோடு சுருதியும் மதுமிதாவும் இணைந்து இசைவிருந்து வழங்குவர். திருவாசகத்தை மேற்கத்திய இசையில் அமைத்து வழங்கிய இசைஞானி இளைய ராஜா அவர்கள் நம்மைத் தமது தெய்விகப் பாடல்களால் கட்டிப் போடுவார்.

தொலைக்காட்சியில் மனதைக் கவர்ந்த 'மெட்டிஒலி' இங்கே மேடையில் ஒலிக்கும். உங்கள் நெஞ்சம் விரும்பும் நடிகர்கள் அதனை நேரில் வந்து வழங்குவர்.
உங்கள் வருகையை உறுதி செய்யவும், தகவல்களுக்கும்:
விசி இராசன்: 972.537.0809
நித்யா கிரிதர்: 972.391.4376
சாய்னி ரவி: 214.387.8594
பால் சுந்தர் சிங்: 972.527.4217
சரளா சாந்தன்: 817.375.1023

இணையதளங்கள்: www.fetna.org
மற்றும் www.natt.us
www.natt.us.

வாருங்கள் உங்களை டால்லஸ் அழைக்கிறது, தமிழ் பருக.

வ. ச. பாபு
More

தந்தையர் தினம் (ஜூன் 19-ம் தேதி)
சென்னை சபாக்களில் 'சுருதி பேதம்'
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
காதில் விழுந்தது...
தெரியுமா?
Share: 




© Copyright 2020 Tamilonline